இந்தியாவில் ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கு ஒரு இடம் கிடைத்துவிட்டால் போதும், படிப்பை முடித்து வெளியில் வரும் போது ஒரு பெரு நிறுவனத்தின் வேலை வாய்ப்பு கடிதம் கையில் இருக்கும் என்ற மனநிலை தான் இந்தியா முழுவதும் இருக்கிறது.
பெரும்பாலான பெற்றோர் எப்படியாவது தங்களது குழந்தைகளை ஐஐடி போன்ற பெரிய கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பிற்கு சேர்த்து விட வேண்டும் என பாடுபடுகின்றனர். ஆனால் அண்மைக்காலமாக இந்த நிலைமை மோசம் அடைந்து வருவது தெரிய வருகிறது.

ஐஐடி நிறுவனங்களில் படிப்பை முடித்த பெரும்பாலானவர்கள் வேலை கிடைக்காமல் இருப்பது, அப்படியே வேலைக்கு சேர்ந்தாலும் ஓராண்டிலேயே பணிநீக்கம் செய்யப்படுவது அல்லது அவர்கள் வேலைக்கு சேரப்போகும் நேரத்தில் உங்களுக்கு இந்த வேலை இல்லை என்ற பதில்களை பெறுவது தற்போது வாடிக்கையாகி வருவது.
தீரஜ் சிங் என்ற முன்னாள் ஐஐடி மாணவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய பிளேஸ்மெண்ட் விவரங்கள் குறித்த தகவல்களை பெற்றிருக்கிறார்.
இந்தியாவில் உள்ள 23 ஐஐடி கேம்பஸ்களிலும் நடப்பாண்டில் படிப்பை முடித்த 8000 மாணவர்கள் அதாவது 38 சதவீதம் மாணவர்களுக்கு இதுவரை எந்த வேலை வாய்ப்பும் கிடைக்கவில்லை என்பது இதில் தெரியவந்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 3,400 ஆக இருந்த நிலையில் 2024 ஆம் ஆண்டில் 8,000 என அதிகரித்துள்ளது.
அதேபோல Naukri.com தளம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இந்தியாவில் வேலை வாய்ப்புகளின் அளவு 17 சதவீதம் குறைந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் இந்த தளத்தில் 2.03 மில்லியன் வேலை வாய்ப்புகள் விளம்பரம் செய்யப்பட்ட நிலையில் 2023 ஆம் ஆண்டில் இது 1.68 மில்லியன் என குறைந்துள்ளது.
ஃபிரஷர்களுக்கான என்ட்ரி லெவல் வேலைகளின் எண்ணிக்கையும் 13 சதவீதம் குறைந்திருக்கிறது. அதாவது 2022 ஆம் ஆண்டு 3 லட்சம் வேலை வாய்ப்புகள் இந்த தளத்தில் வந்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் இது 2,61,000 என குறைந்திருக்கிறது. நடப்பாண்டில் வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை குறைவதற்கு முக்கிய காரணம் பொதுத் தேர்தல் என CIEL HR நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆதித்யா மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பொது தேர்தல் நடந்து முடிந்துவிட்டது, அமெரிக்காவில் தேர்தல் நடைபெற இருக்கிறது இந்த சூழலில் நிறுவனங்கள் புதிய அரசு அமையும் வரை எந்த ஒரு ப்ராஜெக்ட்டையும் கையில் எடுக்காது. எனவே ஆட்களை வேலைக்கு எடுப்பதை குறைத்து விடும், இந்த ஆண்டு வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என தெரிவித்துள்ளார்.
கிட்டதட்ட 150 நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில் வாகன உற்பத்தி துறைகளில் 2023 ஆம் ஆண்டு 35 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பு விகிதம் 2024 ஆம் ஆண்டில் 20 சதவீதம் என குறைந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையில் இது வெறும் 3 சதவீதம் என்ற அளவில் தான் இருக்கிறது. மருந்து துறை , உற்பத்தி மற்றும் பொறியியல் துறை ,ரீடைல், எரிசக்தி துறைகளில் வேலை வாய்ப்புகள் 25 சதவிகிதம் என்ற அளவில் கிடைக்கின்றன.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications