சென்னை: எப்படியாவது சம்பாதித்து சொந்தமாக ஒரு வீடு வாங்கி விட வேண்டும் என்பது தான் இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான நடுத்தர குடும்பங்களின் கனவு. சொந்த வீடு என்பது நம்முடைய பொருளாதார நிலையை வெளிப்படுத்தும் ஒரு அம்சமாக மட்டுமில்லாமல் நம் உணர்வோடு கலந்து இருக்கக்கூடிய ஒரு விஷயம். வாடகை வீடுகளில் வசிக்கும் குடும்பத்தில் பெற்றோர் நாளெல்லாம் உழைத்து பணத்தை மிச்சப்படுத்தி சேமித்து வைப்பது இந்த ஒரு கனவுக்காக தான்.
சொந்த வீடு என்பது மரியாதை: இந்த சமுதாயம் ஒருவரின் வளர்ச்சியையும் செல்வத்தையும் அவருக்கு இருக்கும் சொந்த வீட்டை வைத்து தான் அளவீடு செய்கிறது . ஒரு திருமணத்திற்கு மணமகன் பார்க்க வேண்டும் என்றால் கூட பெண் வீட்டார் முதலில் சொந்த வீடு இருக்கிறதா என்று தான் கேட்பார்கள். நான் தான் சொந்தவீட்டில் இல்லை, என் பிள்ளைகளாவது சொந்த வீட்டில் இருக்க வேண்டும் என நம்மில் பலர் கூறுவது உண்டு. இப்படி கோடிக்கணக்கான சாமானிய மக்களின் கதை தான் 3BHK என்ற திரைப்படமாக வர இருக்கிறது.

3BHK திரைப்படம் : நாளை திரையரங்குகளில் 3BHK திரைப்படம் வெளியாக இருக்கிறது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில் சூரியவம்சம் புகழ் சரத்குமார் தேவயானி தம்பதிகளாக நடித்திருக்கின்றனர். சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஒவ்வொரு மனிதனின் கனவையும் லட்சியத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு கதை தான். சாதாரண ஒரு குடும்பம் அந்த குடும்பத்தில் இருந்து தினம் தோறும் வேலைக்கு செல்லக்கூடிய ஒரு தந்தை, சொந்த வீடுக்காக பெற்றோர் படக்கூடிய கஷ்டங்களை பார்த்து வளரும் பிள்ளைகள் என ஒரு சராசரி இந்திய குடும்பத்தின் கதை தான் இந்த படம்.
சரத்குமார் , தேவயானி: எட்டு தோட்டாக்கள் திரைப்படம் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் .மிகவும் உணர்வுபூர்வமான பல்வேறு தருணங்கள் இந்த படத்தில் இருக்கும் என்பது படத்தில் டிரெய்லர் மூலமே தெரிய வருகிறது. பெரிய வீடா கட்டணும் என மகள் கூறுவதும், வாசுதேவன் & ஃபேமிலி என பெயர் பலகை வைக்க வேண்டும் என சரத்குமார் கூறும் வசனங்களும் உணர்வுப்பூர்வமாக இருக்கின்றன.
மிடில் கிளாஸ் தந்தையின் ஏக்கம்: நம்ம கிட்ட பணம் இருக்கா இல்லையானு நம்ம பாடி லேங்குவேஜ் பார்த்தே புரிஞ்சுக்குவாங்க அப்பா என மகள் கூறும் வசனம் இந்த சமூகத்தின் உண்மையான நிலையை போட்டுடைக்கிறது. வீடுங்கிறது மரியாதை இல்லையா என சரத்குமார் கேட்கும் கேள்வி நம் அப்பாக்களின் ஏக்கத்தையும் கனவையும் நினைவூட்டும் வகையில் இருக்கிறது. டிரைலரை பார்க்கும்போது பெரும்பாலான மக்களுக்கு தங்களுடைய கதை திரைப்படமாக எடுத்திருப்பதை போன்ற உணர்வினை அழிப்பதாக கமெண்ட்களில் பதிவிடுவதை பார்க்க முடிகிறது.

புதுமையான விளம்பரம்: நாளைய தினம் இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் மிக புதுமையான முறையில் இந்த படத்திற்கு விளம்பரம் செய்திருக்கிறது. சென்னையில் அங்கங்கே வைத்திருக்கக்கூடிய விளம்பர போஸ்டரில் 3BHKக்கு நீங்கள் 75 லட்சம் கொடுக்க வேண்டாம் வெறும் 150 ரூபாய் போதும் என புதுமையான முறையில் விளம்பரம் செய்துள்ளனர்.
உணர்வுப்பூர்வமான கதை: இந்த போஸ்டர் பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது . சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ்வான விளம்பர யுக்தி சாமானிய மக்கள் மனதில் எளிதாக இடம் பிடித்துவிட்டது. வீடு தான் வாங்க முடியவில்லை அதுபற்றிய படத்தையாவது பார்த்துவிடலாமே என்ற எண்ணத்தை தோன்ற வைக்கும் வகையில் இது அமைந்துள்ளது. நிச்சயம் மிடில் கிளாஸ் மக்கள் உணர்வோடு இணையும் ஃபில் குட் படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
சில உணர்வு பூர்வமான விஷயத்தையும் மார்கெட்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் மக்களின் வாழ்வியல் உள்ளது. இந்த போஸ்டரில் இருப்பது போல் ஒரு 3BHK வீடு வாங்க வேண்டும் என்றால் உங்க ஏரியாவுல என்ன விலை என்பதை இடத்தின் பெயருடன் கமெண்ட் செய்யவும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications