35,000 வகையான பிரியாணி.. ஜெயில் பிரியாணி, 19 ரூபாய் வெஜ் பிரியாணி.. அதிர்ச்சி கொடுத்த ஸ்விக்கி..!

இந்தியா என்கிற அழகான நாட்டில், பல்வேறு மதங்கள், கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், மொழிகள் மட்டும் வேறுபடுவதில்லை.

நம் மக்களின் உணவும் பயங்கரமாக வேறுபடும். பொதுவாக தென் இந்தியா என்றாலே சாதம், சாம்பார், ரசம்... போன்ற மீல்ஸ் வகையறா உணவுகள் தான் சாப்பிடுவார்கள்.

வட இந்தியா என்றாலே ரொட்டி, தால் தான் என்கிற உணவு பழக்கத்தை, இன்று உணவகங்கள் பயங்கரமாக மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

பகிர்வு

பகிர்வு

2000-ம் ஆண்டுக்குப் பின், ஒரு ஊரின் சிறப்பான உணவு, இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் அசால்டாக கிடைத்துக் கொண்டு இருக்கிறது. உதாரணம் ஹைதராபாத் பிரியாணி. இன்று இந்த பிரியாணி ஹைதராபாத்தைத் தாண்டி ஒரு பெரிய வியாபார சாம்ராஜ்யமாக பல நகரங்களில் கிடைத்துக் கொண்டு இருக்கிறது.

ஸ்விக்கி

ஸ்விக்கி

ஸ்விக்கி நிறுவனம், தன் நான்காம் ஆண்டு StatEATics அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த அறிக்கை ஜனவரி 01, 2019 முதல் நவம்பர் 30, 2019 வரைக்குமான ஆர்டர்களை அடிப்படையாகக் கொண்டு தயாரித்து இருப்பதாக எக்ஸ்சேஞ்ச் 4 மீடியா என்கிற வலைதளம் சொல்கிறது.

ராஜா பிரியாணி தான்

ராஜா பிரியாணி தான்

இந்த அறிக்கையின் படி இந்தியாவில் பிரியாணியைத் தான் அதிகம் ஆர்டர் செய்து சாப்பிட்டு இருக்கிறார்களாம். எந்த அளவுக்கு என்றால், ஒரு நிமிடத்துக்கு சுமாராக 95 பிரியாணியை ஆர்டர் செய்து இருக்கிறார்கள் மக்கள். அப்படி என்றால் கடந்த 11 மாதங்களில் சுமாராக 4.60 கோடி பிரியாணிகள் டெலிவரி செய்யப்பட்டு இருக்கிறது. எந்த பிரியாணியை ஆர்டர் செய்து இருக்கிறார்கள்..?

எந்த பிரியாணி

எந்த பிரியாணி

அட நம்ம போன் லெஸ் சிக்கன் பிரியாணிக்குத் தான் முதலிடம். அதற்குப் பிறகு தான் சிக்கன் தம் பிரியாணி, மட்டன் பிரியாணி, முட்டை பிரியாணி, வெஜ் பிரியாணி, பன்னீர் பிரியாணி எல்லாம் வரிசை கட்டி வருகின்றன. இப்படி சுமார் 35,000 பிரியாணி வகைகள் இந்தியா முழுக்க இருக்கிறதாம். ஸ்விக்கி அறிக்கையில் பிரியாணி முதல் இடம் பிடிப்பது இது மூன்றாவது முறையாம்.

ஜெயில் பிரியாணி

ஜெயில் பிரியாணி

நம் சேட்டன் தேசமான கேரளத்தில், திருச்சூர் சிறைவாசிகள் தயாரிக்கும் ஸ்பெஷல் பிரியாணி, Freedom Food combo என்கிற பெயரில் ஸ்விக்கி இந்த ஆண்டில் டெலிவரி செய்தது. அதற்கு கேரள மக்களிடம் தனி வரவேற்பு கிடைத்து இருக்கிறது. அதே போல மும்பையில், 19 ரூபாய் பிரியாணியும் பயங்கர புகழ் பெற்று இருக்கிறதாம்.

காஸ்ட்லி பிரியாணி

காஸ்ட்லி பிரியாணி

இந்தியாவிலேயே, ஸ்விக்கி டெலிவரி செய்யும் பிரியாணிகளில் புனே நகரத்தில் கிடைக்கும் ‘Chicken Sajuk Tup Biryani' தான் அதிக விலை கொண்டதாம். ஒரு ப்ளேட் பிரியாணி 1,500 ரூபாய் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதுவும் இந்த 2019-ம் ஆண்டு ஸ்விக்கி அறிக்கையில் மக்கள் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

ஸ்வீட்

ஸ்வீட்

மெயின் கோர்ஸாக பிரியாணியை யாரும் நெருங்க முடியாத தொலைவில் இருக்கின்ற போது, ஸ்வீட் ஐட்டத்தில் குளோப் ஜாமுனுக்கே முதலிடமாம். 2019-ல் சுமாராக 17.69 லட்சம் குளாப் ஜாமூன் ஆர்டர் டெலிவரி செய்து இருக்கிறார்களாம். குளாப் ஜாமூனுடன் அல்வா ஆர்டர்களும் தூள் கிளப்பி இருக்கிறதாம்.

இதோ வந்துட்டேன்

இதோ வந்துட்டேன்

ஆனால், இந்த குளோப் ஜாமூனை காலி செய்ய ஃபளூடா ஆர்டர் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்துக் கொண்டு இருக்கிறதாம். இந்த 2019-ம் ஆண்டில் புதிதாக அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட ஸ்வீட் ஐட்டங்களில் ஃபளூடாவும் இடம் பிடித்து இருக்கிறது. மொத்தம் 11.94 லட்சம் ஆர்டர்களாம்.

அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் 2019

1. சிக்கன் பிரியாணி
2. மசால் தோசை
3. பன்னீர் பட்டர் மசாலா
4. சிக்கன் ப்ரைட் ரைஸ்
5. மட்டன் பிரியாணி
6. சிக்கன் தம் பிரியாணி
7. வெஜ் ப்ரைட் ரைஸ்
8. வெஜ் பிரியாணி
9. தந்தூரி சிக்கன்
என உணவு ஐட்டங்கள், ஸ்விக்கி பட்டியலில் முதல் 9 இடங்களைப் பிடித்து இருப்பதாக எக்ஸ்சேஞ்ச் 4 மீடியா சொல்லி இருக்கிறது.

ரொம்ப பசிக்குது பாஸ், சூடா ஒரு சிக்கன் பிரியாணிய போட்டாத் தான் சரி வரும்..!

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+