கடன் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ், நான்கு அதானி குழும நிறுவனங்களின் கண்ணோட்டத்தை 'நெகட்டிவ்' என்பதில் இருந்து 'ஸ்டேபிள்' ஆக உயர்த்தியுள்ளது. மூடிஸ் அமைப்பு தற்போது அதன் மதிப்பீட்டை உயர்த்த முக்கியமான காரணமாக கூறுவது சரியான நேரத்தில் வாங்கிய கடனுக்கு தவணைகளை திருப்பி செலுத்தியது, புதிய முதலீடுகளை ஈர்க்கும் திறன் கொண்டு இருப்பதை வைத்து மதிப்பீட்டை Stable ஆக உயர்த்தியுள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி, அதானி க்ரீன் எனர்ஜி ரெஸ்டிரிக்டட் குரூப் 1, அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் அதானி எலக்ட்ரிசிட்டி ஆகியவற்றுக்கான மதிப்பீடுகள் திருத்தப்பட்டுள்ளன என்று மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீசஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. மற்ற எட்டு அதானி குழும நிறுவனங்களுக்கான மதிப்பீடுகள் 'stable' என்பதில் இருந்து மாறாமல் உள்ளது.

அதானி குழுமம் நிதி வலிமையையும், நிதி திரட்டும் திறனையும் நிரூபித்துள்ளதாகவும், கடந்த ஆண்டில் பல கடன் பரிவர்த்தனைகளை முடித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதானி குழும பங்குகளின் விலையும், கௌதம் அதானி சொத்து மதிப்பும் தொடர்ந்து உயர்ந்து வரும் நேரத்தில் இந்த அறிவிப்பு சாதகமாக உள்ளது.
அதானி குழுமம் கடனை அடைத்தது மட்டும் அல்லாமல் GQG மற்றும் கத்தார் முதலீட்டு ஆணையம் போன்ற முக்கிய முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீட்டை பெற்றள்ளது மூலம் பங்குச் சந்தையில் அதன் வலிமையை காட்டியுள்ளது என மூடிஸ் நிறுவன அறிக்கை கூறுகிறது.
மூடிஸ் கொடுத்துள்ள மதிப்பீடு ஏன் முக்கியம்..? கடன் மதிப்பீடு என்பது ஒரு நிறுவனத்தின் நிதிக் கடமைகளை நிறைவேற்றும் திறனைக் குறிக்கிறது மற்றும் அத்தகைய மதிப்பீடுகளில் ஏதேனும் மாற்றம் நடந்தால் பங்கு விலை அதிகளவில் பாதிக்கிறது. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமெனில் தனிநபர்களுக்கு இருக்கும் சிபில் ஸ்கோர் போல நிறுவனங்களுக்கு கிரெடிட் ரேட்டிங் அளிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் அதானி குழுமம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பு சந்தைக் கையாளுதல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கை வெளியிட்டது. அப்போது ஏற்பட்ட பங்கு விலை மாற்றத்தில் நான்கு நிறுவனங்களின் மதிப்பீடுகள் 'Negative' என மூடிஸ் திருத்தியது.
அதானி குழுமம் உச்ச நீதிமன்றத்தின் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறது, சந்தைகள் ஒழுங்குமுறை அமைப்பான SEBI ஆய்வில் பிரச்சனை எதுவும் இல்லை. ஆனாலும் முழுமையாக ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாகவே அதானி குழும பங்குகள் தொடர்ந்து உயர்வில் உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள அதானி குழும நிறுவன பங்குகளின் நிலவரம்.
அதானி எண்டர்பிரைசஸ் - 0.64 சதவீதம் உயர்வு
அதானி போர்ட்ஸ் - 0.11 சதவீதம் சரிவு
அதானி பவர் - 0.31 சதவீதம் சரிவு
அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் - 0.97 சதவீதம் உயர்வு
அதானி கிரீன் எனர்ஜி - 2.41 சதவீதம் உயர்வு
அதானி டோட்டல் கேஸ் - 0.72 சதவீதம் உயர்வு
அதானி வில்மார் - 1.24 சதவீதம் உயர்வு
ஏசிசி லிமிடெட் - 0.19 சதவீதம் சரிவு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 0.17 சதவீதம் சரிவு
NDTV - 1.20 சதவீதம் உயர்வு
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications