இன்று பல வங்கிகளும் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை அடிப்படையாக வைத்து தான் கிரெடிட் கார்டுகள் அல்லது லோன்கள் போன்றவற்றை வழங்குகின்றன. எனவே உங்கள் நிதிநிலையை மேம்படுவதற்கு கண்டிப்பாக கிரெடிட் ஸ்கோரை திறம்பட நிர்வகிக்க வேண்டும். மேலும் கிரெடிட் ஸ்கோர் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியமாகிறது. தற்போது பல தவறான கருத்துக்கள் கிரெடிட் ஸ்கோர் சம்பந்தமாக நிலவி வருகின்றன. அவை என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?: கிரெடிட் ஸ்கோர் என்பது 3 எழுத்து எண் ஆகும். இந்த ஸ்கோர் நீங்கள் ஏற்கனவே வாங்கிய கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்தி இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அமைகிறது. நீங்கள் ஏற்கனவே கடன் பெற்று அதை சிறந்த முறையில் திருப்பிச் செலுத்தி இருந்தால் கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருக்கும். பொதுவாக கிரெடிட் ஸ்கோர் 750-க்கு மேல் இருந்தால் வங்கிகள் உங்களுக்கு கடன் தர பரிசீலிக்கும்.

அதுவே 750-க்கு கீழிருந்தால் உங்களுக்கு கடன் தரலாமா வேண்டாமா என்பது பற்றி யோசிக்கும். எனவே உங்களுடைய நிதி நடத்தையைப் பொறுத்தே இந்த கிரெடிட் ஸ்கோர் அமையும்.
கிரெடிட் ஸ்கோரை மட்டும் வைத்தே வங்கிகள் நீங்கள் ஏற்கனவே வாங்கிய கடனை எந்த தேதியில் திருப்பிச் செலுத்தி இருக்கிறீர்கள், எவ்வளவு சரியாக நடந்து இருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்து கொண்டு விடும். சரி இப்போது இந்த கிரெடிட் ஸ்கோரை வைத்து தவறாக பரப்பப்படும் கருத்துக்கள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.
கிரெடிட் ஸ்கோரை அடிக்கடி சரி பார்ப்பது அவற்றை குறைத்து விடும்: உங்களுடைய சொந்த கிரெடிட் ஸ்கோரை சரி பார்ப்பது அவற்றை குறைத்துவிடும் என்ற தவறான கருத்து பரவி வருகிறது. உங்கள் சொந்த கிரெடிட் ஸ்கோரை மதிப்பாய்வு செய்வது எந்த விதத்திலும் உங்கள் கிரெடிட் ஸ்கோரை குறைப்பதில்லை. மாறாக உங்கள் கடன் வழங்குநர்கள் கிரெடிட் அறிக்கையை சரிபார்க்கும் போது அவை கிரெடிட் ஸ்கோரில் சிறிது பாதிப்பை ஏற்படுத்தலாம்.
அதிக சம்பளம் இருந்தால் அதிக கிரெடிட் ஸ்கோர்: அதிக வருமானம் அதிக கிரெடிட் ஸ்கோருக்கு சமம் என்ற தவறான கருத்தும் உள்ளது. உங்கள் கிரெடிட் ஸ்கோரை கணக்கிடும்போது வருமானம் கருதப்படுவதில்லை. உங்கள் கிரெடிட் நடத்தை அதாவது நீங்கள் வங்கிய கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்தி இருக்கிறீர்கள்? உங்களுடைய கடன் வரலாறு ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது. ஆனால் அதிக வருமானம் என்று வரும்போது உங்களுடைய கடனை திறம்பட நிர்வகிக்கலாம்.
கிரெடிட் கார்டை மூடுவது கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கும்: பயன்படுத்தப்படாத கிரெடிட் கார்டை மூடுவது தங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கும் என்று பலர் நம்புகின்றனர். உண்மையில், இந்த நடவடிக்கை பெரும்பாலும் எதிர்மறையான விளைவைக் கொண்டிருக்கலாம். உங்கள் கடன் பயன்பாட்டு விகிதம் (Credit Utilization Ratio), அதாவது நீங்கள் பயன்படுத்தும் கடன் தொகை, உங்கள் கிரெடிட் ஸ்கோரை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கிரெடிட் கார்டை மூடுவது உங்கள் கடனை குறைத்து, உங்கள் கடன் பயன்பாட்டு விகிதத்தை அதிகரிக்கக்கூடும், இதன் காரணமாக உங்கள் கிரெடிட் ஸ்கோரைக் குறைக்கலாம்.
உங்களிடம் ஒரே ஒரு கிரெடிட் ஸ்கோர் மட்டுமே இருக்கும்: CIBIL, Experian, Equifax மற்றும் CRIF ஹை மார்க் போன்ற பல கிரெடிட் பீரோக்கள் உள்ளன, ஒவ்வொன்றும் அதன் சொந்த கடன் அறிக்கை மற்றும் ஸ்கோரை பராமரிக்கின்றன. இந்த மதிப்பெண்கள் சற்று மாறுபடலாம், ஏனெனில் ஒவ்வொன்றும் வெவ்வேறு தகவல்களைக் கொண்டிருக்கலாம் அல்லது சற்று வித்தியாசமான ஸ்கோரைப் பயன்படுத்தலாம். உங்கள் கிரெடிட் ஆரோக்கியத்தைப் பற்றிய விரிவான புரிதலைப் பெற, பல பீரோக்களுடன் உங்கள் கிரெடிட் ஸ்கோரைச் சரிபார்ப்பது நல்லது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications