அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு போன்ற தகவல்களை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். எனவே அலுவல் நாட்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் ஜப்பான் நாட்டில் வாரத்திற்கு நான்கு அலுவல் நாட்கள் என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு முதலே ஜப்பான் அரசு அலுவல் நாட்களை குறைக்க வேண்டும் என்பது தொடர்பாக நிறுவனங்களுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இதற்கு காரணம் ஜப்பானில் அதிக வேலைப்பளு காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறிப்பாக தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அது மட்டுமின்றி ஜப்பானின் பிறப்பு விகிதமும் குறைந்து வருகிறது இதனால் வேலைக்கு தேவைப்படும் மக்கள் தொகையின் எண்ணிக்கையும் குறைகிறது.

இந்த சூழலில் தான் ஜப்பான் அரசு வாரத்திற்கு நான்கு அலுவல் நாட்கள் என்ற நடைமுறையை கொண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளது. ஜப்பானின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி அந்நாட்டில் செயல்படக்கூடிய எட்டு சதவீத நிறுவனங்கள் மட்டுமே வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறையை வழங்குகின்றன. இந்த நிலையில் ஜப்பான அரசு work style reform என்ற ஒரு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இதன்படி நிறுவனங்கள் ஊழியர்களுக்கான வேலைப்பளுவை குறைப்பது எப்படி, வாரத்திற்கு நான்கு அலுவல் நாட்களில் மட்டுமே செயல்படுவது எப்படி என்பது குறித்து பயிற்சி வழங்கி வருகிறது.
இந்த பிரச்சாரத்திற்கு ஜப்பான அரசு "hatarakikata kaikaku," அதாவது "innovating how we work," எனப் பெயரிட்டுள்ளது. இதன் மூலம் தொழிலாளர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வேலை ஆகிய இரண்டையும் சமன் செய்யக்கூடிய வகையிலான மாற்றம் ஏற்படும். பல்வேறு நிறுவனங்களும் இந்த நடைமுறையை ஏற்று இருந்தாலும் ஊழியர்கள் மத்தியில் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்பதை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
உதாரணமாக பேனசோனிக் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் அங்கே பணியாற்றக்கூடிய 63,000 ஊழியர்களில் 150 ஊழியர்கள் மட்டுமே இந்த புதிய பணி நடைமுறையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ஜப்பான் மக்கள் நீண்ட நேரம் தீவிரமாக வேலை செய்வதில் ஆர்வம் கொண்டவர்கள். இரண்டாம் உலக போருக்கு பின்னர் இதுதான் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது. ஆனால் தற்போது அதுவே அந்த நாட்டிற்கு மிகப் பெரிய பிரச்சனையாகவும் உருவெடுத்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் 50க்கும் அதிகமானவர்கள் இதுபோல நீண்ட நேரம் வேலை செய்வதன் காரணமாகவே இறக்கின்றனர்.
எனவே தான் ஜப்பான் அரசு வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்று நடைமுறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஹிட்டாச்சி உள்ளிட்ட சில நிறுவனங்கள் இந்த புதிய மாடலை ஏற்றுக் கொண்டுள்ளன.
பல்வேறு உற்பத்தி துறை மற்றும் நிதி துறை சார்ந்த நிறுவனங்களும் இந்த நான்கு நாட்கள் வேலை என்று நடைமுறைக்கு மாறி வருகின்றன. இவ்வாறு வாரத்தில் நான்கு நாட்கள் வேலை மூன்று நாட்கள் விடுமுறை கிடைப்பதன் காரணமாக தங்களுடைய வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் குறைவதாகவும் குடும்பத்தினருடன் நேரத்தை போக்க முடிவதாகவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications