பிரபு வேணுகோபால், சசிதர், அருண் பிரகாஷ், பார்கவ் ஆகிய நான்கு பேரும் நல்ல நண்பர்கள். வெளிநாட்டில் கைநிறைய சம்பளம் தரும் வேலையைப் பார்த்து வந்தனர். ஆனால் அவர்கள் திடீரென ஒரு முடிவெடுத்து இந்தியாவுக்குத் திரும்பி வந்துவிட்டனர்.
சொந்த நாட்டில் ஆரோக்கியமான விகான் ஐஸ்கிரீமை சிறுதானியங்களை வைத்து தயாரிக்க முடிவெடுத்தனர்.
இதற்காக அவர்கள் ஸ்ரீ மில்லட் ஐஸ்கிரீம்ஸ் என்ற நிறுவனத்தை தமிழ்நாட்டின் திருச்சியில் தொடங்கினர்.

ஹேய் ஸ்ரீ ஒரு ஐஸ்கிரீம் தா என்று சொன்னால் அதை ஆப்பிள் போனில் உள்ள ஸ்ரீயால் வரவழைத்து தரமுடியாது. ஆனால் வேறு ஒரு ஸ்ரீயால் இந்த ஐஸ்கிரீமைத் தரமுடியும். அதுதான் இந்த நால்வர் தொடங்கிய ஸ்ரீ மில்லட் ஐஸ்கிரீம் கம்பெனி.
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஸ்ரீ மில்லட் ஐஸ்கிரீம்கள் கிடைக்கின்றன. உலகின் வெவ்வேறு நாடுகளில் பணியாற்றி வந்த இந்த நால்வரும் 2016இல் சொந்த நாட்டுக்குத் திரும்பினர். பிரபுவும் அருணும் திருச்சிக்கும், சசிதரும் பார்கவும் ஹைதராபாத்துக்கும் வந்தனர்.
அவர்களது ஹோட்டல் மேனேஸ்மென்ட், ஃபுட் சயின்ஸ், மார்க்கெட்டிங், பைனான்ஸ் துறைகளில் பெற்ற அனுபவத்தை வைத்து ஏதாவது தொழில் செய்ய முடிவெடுத்தனர். தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தை வைத்து உணவுத் துறையில் இறங்க முடிவெடுத்தனர்.
இந்தியாவின் பாரம்பரிய சிறுதானியங்களை வைத்து சத்துள்ள உணவுகளை தயாரிக்க திட்டமிட்டனர். 2017இல் ஸ்ரீ மில்லட் என்ற நிறுவனத்தை தொடங்கி அதிலிருந்து ஸ்நாக்ஸ், ஃபிளேக்ஸ், சேமியா, பாஸ்தா இன்னும் பல வகை உணவுகளை செய்ய நினைத்தனர்.
சிறப்பாகத் தங்களது தயாரிப்புகளை அறிமுகப்படுத்த இருந்த நிலையில் கோவிட் பெருந்தொற்று ஏற்பட்டது. இதனால் அவர்களது முயற்சிக்கு சிறிய பின்னடைவு ஏற்பட்டது. இருந்தாலும் இந்த காலத்தில் சிறுதானியத்தில் இருந்து ஐஸ்கிரீம் தயாரிக்கும் திட்டம் உருவானது. கோவிட் தடைக்காலம் இந்தவகையில் அவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.
அவர்களது தேர்வு அவ்வளவு எளிதான காரியமல்ல. எட்டு மாதங்கள் கடுமையான ஆராய்ச்சிகள் மேம்பாடுகளை செய்ய வேண்டியிருந்தது.
இறுதியாக அவர்களது உழைப்பின் பயனாக, ஸ்ரீ- ஹவுஸ் ஆப் வீகான் ஐஸ் கிரீம் 2020இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது நான்கு கிளைகளில் இயங்கி வரும் நிறுவனம் அடுத்த சில மாதங்களுக்குள் 10 முதல் 15 கிளைகளை விரிவுபடுத்த உள்ளது.
வீகான் தவிர அதிக ஊட்டச்சத்து நிறைந்த ஐஸ்கிரீமை தயாரித்து இளைஞர்கள் மத்தியில் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்த ஸ்ரீ திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் பசுமை புரட்சி ஏற்படுவதற்கு முன்பாக நமது முன்னோர்கள் சோளம், கேப்பை, கம்பு போன்ற சிறுதானியங்களைத் தான் தங்களது நிலங்களில் பயிரிட்டு வந்தனர். குறைந்த அளவு நீர்த்தேவை மற்றும் வறட்சியைத் தாக்குப்பிடிக்கும் தன்மை கொண்டவை இந்த சிறுதானியங்கள். பசுமை புரட்சிக்குப் பின் மக்கள் நெல் சாகுபடிக்குத் திரும்பிவிட்டனர் என்று சசிதர் கூறினார்.
தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தமிழ்நாட்டின் திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மிகக் குறைந்த நெல் விளைச்சலை சந்தித்தன. இதனால் விவசாயிகள் வேறு வேலைக்குச் செல்ல வேண்டியிருந்தது.
தங்களது வேலையை விடுவதற்கு முன்பாக நான்குபேரும் நன்றாக ஆலோசித்து திருச்சி, ஹைதராபாத்தில் உள்ள தங்களது நிலத்தில் சிறுதானியங்களை விளைவிக்க முடிவு செய்தனர். இத்துடன் சசிதர் கூடுதலாக 40 ஏக்கர் நிலத்தை வாங்கி சோளம், கேப்பை மற்றும் சீசனல் காய்கறிகளை சாகுபடி செய்தார்.
சிறுதானிய சாகுபடி தவிர உலகின் பிற நாடுகளில் ஆரோக்கியமான வீகான் உணவுகள் பிரபலமாகி வருவதை அவர்கள் கண்டனர்.
ஊட்டச்சத்து தேவையானது மாறிவருவதை பார்த்தேன். வீகான், லாக்டோஸ் அலர்ச்சி உள்ளவர்களுக்கு பால் அல்லாத மாற்று உணவுகள் தேவையையும் பார்த்தேன். அப்படிப்பட்டவர்களுக்கு மாற்றாக பாதாம், ஓட்ஸ் பால் சரியாக இருக்கும். இதனால் இந்தியாவில் வீகான் உணவு உற்பத்தி செய்ய திட்டமிட்டோம் என்று பிரபு கூறினார்.
ஸ்ரீ மில்லட்டை தொடங்கிய சில ஆண்டுகள் வரை சிறுதானிய லட்டுகள், குக்கீஸ், சேமியா, ரவை ஆகியவற்றை தயாரித்து வந்தனர்.
பின்னர் சிறுதானிய உணவுகளை தயாரித்து தெலங்கானா, குஜராத் மாநிலத்தை சேர்ந்த சில அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக அளித்தனர் இந்த முயற்சி நல்ல பலனை தந்ததால் 300 சதுர அடி பரப்பில் திருச்சியில் ஒரு ஆலையை அமைத்தனர். அதில் தேவையான இயந்திரங்கள் மற்றும் தளவாடங்களை நிறுவினர்.
அங்கு சோளம், கேப்பை, கம்பு, குதிரைவாலி வரகு அரிசியை வைத்து உணவுகளை தயாரித்தனர். பின்னர் ஐஸ்கிரீம்களை தயாரித்து விற்றனர்.
அவர்கள் அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஃபீட்பேக்குகளை வைத்து பணியாற்றினர், பின்னர் 2020 இல் திருச்சியில் முதல் 'Siri - House of Vegan Ice Creams' கடையைத் தொடங்கினார்கள். வெண்ணிலா, சாக்லேட், மாம்பழம், பலாப்பழம் மற்றும் ஜாமூன், சிவப்பு கொய்யா, பேரீட்சம்பழம், வாழைப்பழம், கஸ்தூரி முலாம்பழம், ஸ்ட்ராபெர்ரி மற்றும் பல சுவைகளில் ஐஸ்கிரீமகளை தயாரித்தனர்.
வீகான் ஐஸ்கிரீம்களில் பயன்படுத்தப்படும் தேங்காய் பால் போலல்லாமல், தினை பால் நுட்பமானது. பிற சுவைகளில் ஆதிக்கம் செலுத்தாது. பயன்படுத்தப்படும் பழங்களைப் பொறுத்து வெவ்வேறு ஐஸ்கிரீம்களில் வெவ்வேறு இனிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள்.
உதாரணமாக, வெல்லம் சில பழங்களுடன் நன்றாக வேலை செய்கிறது, அதே நேரத்தில் பனை சர்க்கரை சிலவற்றுடன் நன்றாக வேலை செய்கிறது. இது தினையைப் பொறுத்து மாறுபடும் என்று விளக்குகிறார் பிரபு. ஒரு ஸ்கூப் ஐஸ்கிரீம் ரூ.30க்கும், ஒரு லிட்டர் பாக்கெட் ரூ.800க்கும் விற்கப்படுகிறது. திருச்சியில் உள்ள தொழிற்சாலை ஒரு ஷிப்டுக்கு 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்டது.
அதுமட்டுமல்லாமல், இந்த சத்தான ஐஸ்கிரீம்கள் குழந்தைகளுக்கு தினைகளை அறிமுகப்படுத்தவும், இந்த பாரம்பரிய இந்திய தானியத்தின் மீது அவர்களை ஈர்க்கவும் ஒரு சிறந்த வழியாகும் என்பதையும் அவர்கள் உணர்ந்தனர். குழந்தைகள் தினையை ஒரு தண்டனையாக நினைக்கிறார்கள்.
குழந்தைகள் ஐஸ்கிரீம்கள் மற்றும் ஷேக்குகளை விரும்புகிறார்கள் என்று ஆராய்ச்சி காட்டுகிறது, எனவே, இந்த ஊட்டச்சத்தின் பவர்ஹவுஸ்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்த இது ஒரு நல்ல பயன்முறையாக இருக்கும் என்கிறார் சசிதர். இந்த தினைகள் தமிழ்நாட்டின் தேனி, தருமபுரி , கிருஷ்ணகிரியில் உள்ள விவசாயிகளின் சொந்த பண்ணைகளிலிருந்தும், மற்ற விவசாயிகளிடமிருந்தும் கொள்முதல் செய்யப்படுகிறது.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications