கொரோனா தொற்றுக் காலகட்டத்தில் பல நிறுவனங்கள் வர்த்தகம் மற்றும் வருமானம் இல்லாமல் ஊழியர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதனால் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தாலும் இன்று முதல் மிகப்பெரிய பேசு பொருளாக இருப்பது அமெரிக்காவில் இருக்கும் ரியல் எஸ்டேட் சேவை நிறுவனமான பெட்டர்.காம் நிறுவனத்தின் 900 பேரின் பணிநீக்கம் தான்.
பெட்டர்.காம்
பெட்டர்.காம் நிறுவனத்தின் சிஇஓ விஷால் கர்க் ஓரே ஓரு ஜூம் காலில் எவ்விதமான முன் அறிவிப்புமின்றி ஒட்டுமொத்தமாக 900 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தார். இந்தச் செய்தி அமெரிக்காவை தாண்டி உலக நாடுகளில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது.
மீண்டும் பணிநீக்கம்
இதேவேளையில் பெட்டர்.காம் நிறுவனம் தனது நிதி நிலையை மேம்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ள நிலையில், மார்ச் மாதத்தில் மீண்டும் கூடுதலாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது.
4 முக்கிய அதிகாரிகள்
இந்தச் சம்பவத்திற்குப் பின்பு பெட்டர்.காம் நிறுவனத்தின் மீதான நம்பிக்கையும், விஷால் கர்க் மீதான நம்பிக்கையும் ஊழியர்கள் மத்தியில் குறைந்த காரணத்தால் தற்போது இந்நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகத்தில் இருக்கும் 4 முக்கிய அதிகாரிகள் அடுத்தடுத்து வெளியேறியுள்ளனர்.
900 ஊழியர்கள் பணிநீக்கம்
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் 900 ஊழியர்கள் பணிநீக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் பணியைத் தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளனர். இதனால் பெட்டர்.காம் நிறுவனத்தின் உயர்மட்ட குழு முழுமையாக ஆட்டம் கண்டு உள்ளது. இதனால் நிறுவனத்தின் வளர்ச்சியே கேள்விக்குறியாகி நிற்கிறது.
முக்கிய அதிகாரிகள் யார்
தற்போது பெட்டர்.காம் நிறுவனத்தில் இருந்து கிளேட்டன் கரோல் - பைனான்ஸ் துறையின் துணை தலைவர், பால் டைகர் - கொள்முதல் பிரிவின் பொது மேலாளர், ஸ்டீபன் ரோசன் விற்பனை பிரிவின் தலைவர், கிறிஸ்டியன் வாலஸ் - ரியல் எஸ்டேட் பிரிவின் தலைவர் ஆகிய 4 உயர் அதிகாரிகள் வெளியேறியுள்ளனர்.
விஷால் கர்க்
இந்தப் பிரச்சனையைச் சமாளிக்கும் விதமாக விஷால் கர்க் பணிநீக்கம் செய்யப்பட்ட 900 ஊழியர்களை ஈடு செய்யும் வகையில் 1200க்கும் அதிகமான ஊழியர்களைப் புதிதாகப் பணியில் சேர்த்துள்ளது, இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பெரும் பகுதி ஊழியர்களை இந்தியாவில் சேர்த்துள்ளது.
மக்கள் கருத்து
இதனால் நிறுவனத்தில் பெரும் பகுதி செலவுகள் குறைக்கப்படுவது மட்டும் அல்லாமல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. விஷால் கர்க் போன்ற ஒரு சிஇஓ-வை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள், உங்கள் கருத்தை மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications