மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை எதிர்வரும் 2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு காரணமாக பல்வேறு துறைகளை சேர்ந்த பங்குகளின் விலை ஏற்றம் கண்டு வருகிறது. அதேசமயம், பட்ஜெட்டால் உயர வாய்ப்புள்ள பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்யும் வேலையில் முதலீட்டாளர்கள் தீவிரமாக உள்ளனர். இந்நிலையில், சாய் புரோக்கிங்கின் நிர்வாக இயக்குனருமான சுமீத் பகாடியாவும், எஸ்எஸ் வெல்த்ஸ்ட்ரீட்டின் நிறுவனர் சுகந்தா சச்தேவாவும், பட்ஜெட்டுக்கு முன் வாங்குவதற்கு 3ஐ இன்ஃபோடெக் உள்ளிட்ட 4 பங்குகளை பரிந்துரை செய்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்று 3ஐ இன்ஃபோடெக். மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.28.40ஆக இருந்தது. இப்பங்கினை ரூ.28.40 என்ற அளவில் வாங்கலாம். பங்கின் இலக்கு விலை ரூ.30 ஆகும். இப்பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.27.50.

நிதி சேவை வர்த்தகத்தில் உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி ஈடுபட்டு வருகிறது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.35.88ஆக இருந்தது. இப்பங்கின் விலை ரூ.35.88 என்ற விலையில் வாங்கலாம். இப்பங்கின் இலக்கு விலை ரூ.38 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இப்பங்கின் ஸ்டாப் லாஸாக ரூ.34 மதிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்று ஜம்மு அண்ட் காஷ்மீர் வங்கி. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.99.30ஆக இருந்தது. இப்பங்கினை ரூ.99.22 என்ற விலையில் வாங்கலாம். இப்பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.95 ஆகும். குறுகிய காலத்தில் இப்பங்கின் விலை ரூ.106 வரை உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வாஸ்கான் இன்ஜினீயர்ஸ் நிறுவனம் கட்டுமான துறை வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இப்பங்கினை ரூ.47.70 என்ற அளவில் வாங்கலாம் என்றும், பங்கின் இலக்கு விலை ரூ.49.40 என கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால், பட்ஜெட்டுக்கு முன்பே இப்பங்கு இலக்கை தாண்டி விட்டது குறிப்பிடத்தக்கது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே வாஸ்கான் இன்ஜினீயர்ஸ் இப்பங்கின் விலை ரூ.49.60ஆக இருந்தது. இப்பங்கின் ஸ்டாப் லாஸாக ரூ.46.50ஐ குறிப்பிட்டு இருந்தனர்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications