சென்னை: நம் அனைவருக்குமே சேமிப்பை விட செலவு செய்வது தான் எளிதான ஒன்று. ஆனால் பட்ஜெட்டை மீறி செலவு செய்வதால், நீங்கள் கடன் சுமையில் சிக்கி விடுவீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கட்டுப்பாடற்ற செலவுகளைத் தவிர்க்கவும். உங்களுடைய நிதி இலக்குகளை அடைய எவ்வாறு தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
பட்ஜெட்டை உருவாக்கவும்: உங்கள் சம்பளம் மற்றும் கூடுதல் வருமானங்கள் போன்றவற்றைக் கொண்டு பட்ஜெட்டை உருவாக்குங்கள். அடுத்ததாக உங்கள் மாதாந்திர செலவுகள் அனைத்தையும் பட்டியலிடவும். எடுத்துக்காட்டாக வாடகை, மளிகை சாமான்கள், பொழுதுபோக்குக்காக செய்யும் செலவுகள் போன்றவற்றையும் பட்டியலிடுங்கள். உங்கள் நிதி இலக்குக்கு ஏற்ப வரம்புகளை அமைத்து செலவு செய்யுங்கள். உங்கள் வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் நிதியை திறம்பட நிர்வகிக்க இது போன்ற செயல்களைப் பின்பற்றுவது உதவிகரமானதாக இருக்கும்.

விருப்பம் மற்றும் தேவை ஆகியவற்றை புரிந்து நடந்து கொள்ளுங்கள்: உங்களுடைய தேவை என்ன? மற்றும் விருப்பம் என்ன? என்பதைப் புரிந்து நடந்து கொள்ளுங்கள். உயிர் வாழ்வதற்கும், வாழ்க்கைத் தரத்தை பராமரிப்பதற்கும் தேவைகள் அவசியம். இதில் வீடு, உணவு, போக்குவரத்து ஆகியவை அடங்கும். அதுவே அடிக்கடி வெளியில் சாப்பிடுவது, ஆடம்பரப் பொருட்களை வாங்குவது அல்லது ஆடம்பரமாக விடுமுறைகளைக் கழிப்பது போன்ற விஷயங்கள் விரும்பத்தக்கவை. இதன் மூலம் விருப்பம், தேவை ஆகிய இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் புரிந்திருக்கும். விருப்பத்திற்கு ஏற்ப செலவு செய்வதை சற்று புறம் தள்ளி வைப்பதினால் அதிலிருந்து அதிக அளவிலான தொகையை மிச்சப்படுத்தலாம்.
பணம் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தவும்: கிரெடிட் கார்டுகளுக்குப் பதிலாக பணம் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்துவது அதிக செலவுகளைத் தவிர்ப்பதற்கான ஒரு சிறந்த வழி. கிரெடிட் கார்டுகள் செலவு செய்வதை எளிதாக்கலாம். இதனால் அதிக தொகையை செலவு செய்து விட்டு, பின்னர் அந்தக் கடனை நீங்களே அடைக்கும் நிலை ஏற்படுகிறது. பெரும்பாலும் வட்டியுடன் சேர்த்து அடைக்க வேண்டி வரலாம். பொதுவாக அதிக வட்டியுடன் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் கடனை வசூலிக்கின்றன.
சேமிப்பு இலக்குகளை அமைக்கவும்: இது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனெனில், அடுத்து வரும் தேவைக்காக சேமித்து வைப்பதை இது குறிக்கிறது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக உங்கள் பெற்றோருடைய மருத்துவச் செலவு, உங்கள் பிள்ளைகளுடைய கல்விச் செலவு அல்லது உங்களுடைய அவசர தேவைகள் போன்ற அனைத்தும் இதில் அடங்கும். எனவே மாத மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை FD-கள் அல்லது RD-களில் சேமித்து வையுங்கள்.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications