நம்மில் பலரும் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை ஏதாவது ஒரு பொருளிலோ அல்லது பொன்னிலோ முதலீடு செய்து இரட்டிப்பாக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சில நேரங்களில் சொத்துக்களை வாங்குவதும் நம்முடைய பணத்தை கரைத்து விடும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? சொத்துக்களை வாங்குவது ஒருவரை பணக்காரராக தானே மாற்றும்.. எப்படி ஏழையாக்கும் என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. இந்தப் பதிவில் அதற்கான பதிலை பார்ப்போம்.
நீங்கள் ஒரு தனி வீட்டையோ அல்லது இடத்தையோ வாங்குகிறீர்கள் என்றால் அதில் எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் நீங்கள் வாங்கக் கூடிய இடம் பிற்காலத்தில் நல்ல விலை போகுமா? என்று சிந்தித்து வாங்க வேண்டும். ஒருவேளை நீங்களே பயன்படுத்துவதற்காக வாங்கினாலும் அருகில் அத்தியாவசிய சேவைகளை பெறுவதற்கான வசதிகள் இருக்கிறதா? என்பது குறித்தும் பார்க்க வேண்டும். அதுவே பிளாட் அல்லது அபார்ட்மெண்ட் போன்றவற்றை வாங்கும்போது சற்று சிந்தித்து செயல்பட வேண்டும்.

பிளாட் அல்லது அப்பார்ட்மெண்ட்: நீங்கள் ஒரு பிளாட் அல்லது அபார்ட்மெண்ட்டை வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இது பொதுவாக பல்வேறு ப்ளோர்களை கொண்டிருக்கும். ஏதோ ஒரு ப்ளோரில் உங்களுக்கான 2BHK அல்லது 3BHK வீட்டை வாங்குகிறீர்கள்.
சிலர் தாங்கள் ஏற்கனவே ஒரு வீட்டில் இருந்து கொண்டு வாடகைக்கு விடுவதற்காகவும் ப்ளாட் மற்றும் அப்பார்ட்மெண்டில் முதலீடு செய்கின்றனர். இப்படி முதலீடு செய்வது நல்லது என்று தோன்றினாலும் இதில் சில சிக்கலும் உள்ளது. உதாரணமாக ரூ.1 கோடி கொடுத்து ஒருவர் ஒரு பிளாட்டை வாங்குகிறார். அப்படி வாங்கும் பிளாட்டுக்கு 5 சதவீத வாடகையை ஒருவர் தரும் பட்சத்தில் கண்டிப்பாக நீங்கள் வாங்கிய பிளாட்டுக்கு லாபம் கிடைக்கும்.
அதுவே 3 சதவீத வாடகை கொடுத்தால் அதை லாபம் என்றும் வைத்துக்கொள்ள முடியாது. நஷ்டம் என்றும் வைத்துக் கொள்ள முடியாது. 5 சதவீத வாடகைக்கு ஒருவர் வருடத்திற்கு ரூ.5 லட்சத்தை வாடகையாக கொடுப்பார். இதை 12 மாதங்களுக்கும் பிரித்தால் 41,666 ரூபாய் வரும். அதேபோல 3 சதவீத கொடுத்தால் 1 வருடத்திற்கு ரூ.3 லட்ச ரூபாய் வாடகை வருமானம் கிடைக்கும். அப்படியானால் மாதத்திற்கு 25,000 ரூபாய். ஒருவேளை இதற்கும் குறைவாக வாடகை வரும் பட்சத்தில் நீங்கள் வாங்கும் பிளாட் உங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தலாம்.
வாகனங்கள்: சிலர் லோனுக்கு வீட்டை கட்டி அதன் பிறகு வீட்டின் முன்பு நிறுத்துவதற்காக வாகனம் வாங்க திட்டமிடுவார்கள். அதற்காக பர்சனல் லோன் அல்லது இதர கடன்களை வாங்கி அதிக அளவில் வாகனத்தில் முதலீடு செய்வார்கள். எப்படிப் பார்த்தாலும் நீங்கள் வாங்கும் வாகனத்தின் மதிப்பு ஒரு சில ஆண்டுகளுக்குள் குறையத் தொடங்கிவிடும். தற்போது கார் தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் புது புது மாடல்கள் சந்தைக்கு வந்து பிற மாடல்களின் மதிப்பை குறைந்துவிடுகிறது. எனவே கையில் பணத்தை வைத்துக்கொண்டு வாகனங்களில் முதலீடு செய்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் வீடு கட்டி ஏற்கனவே ஒரு இஎம்ஐ இருக்கும்போது மீண்டும் கடன் பெற்று வாகனங்களில் முதலீடு செய்வது உங்களை நிதி சிக்கலில் ஆழ்த்தும்.
பங்குச்சந்தை முதலீடுகள்: இன்றெல்லாம் பங்குச்சந்தை தொடர்பான மோசடிகள் அதிகரித்துவிட்டன. பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் மக்களும் தெரியாத நபர்களிடம் சிக்கி கடன் வாங்கி முதலீடு செய்கின்றனர். பங்குச்சந்தை முதலீடுகள் எந்த அளவிற்கு லாபம் தருகிறதோ.. அதே அளவிற்கு ஆபத்தும் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கையில் பணம் வைத்துக்கொண்டு தெரியாமல் முதலீடு செய்தாலும் நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. எனவே பங்குச்சந்தை முதலீடுகளில் ஈடுபடுவதற்கு முன்பு நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று முதலீடு செய்யுங்கள்.
எலக்ட்ரானிக் பொருட்கள்: விலை உயர்ந்த கடிகாரங்கள், நகைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவற்றில் முதலீடு செய்வதும் ஆபத்தை விளைவிக்கும். சிலர் இதுபோன்ற பொருட்களை வாங்குவதற்காகவே கிரெடிட் கார்டுகளைப் பெற்று செலவு செய்வார்கள். கிரெடிட் கார்டு கடன்களுக்கு பிற கடன்களைக் காட்டிலும் வட்டி அதிகமாக வசூலிக்கப்படுகிறது.
எனவே மேலே கூறப்பட்டுள்ள விஷயங்களுக்காக செலவு செய்யும்போது நிதானமாக செயல்படுங்கள்.
More From GoodReturns

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?



Click it and Unblock the Notifications