அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தற்போது நான்காவது வாரத்திற்குள் நுழைந்துள்ள நிலையில், இன்னும் அமைதி ஒப்பந்தம் குறித்து எந்த உறுதியும் உருவாகவில்லை, பேச்சுவார்த்தையும் இழுத்துக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் வளைகுடா நாடுகள் பகுதியில் நீடித்து வரும் இந்த பதற்றம், உலகளாவிய பொருளாதாரத்திலும் பங்கு சந்தைகளிலும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இந்த சூழலில் முக்கிய கவலை என்னவென்றால், உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையாக இருக்கும் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்ந்து பாதிக்கப்படுமா என்பது. இந்த பாதையில் தடைகள் ஏற்பட்டதால், கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து, உலக பொருளாதார வளர்ச்சியையே பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

இதன் காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளுக்கு மாறி, பங்குகளை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். தற்போது பாதுகாப்பான முதலீடாக இருப்பது அரசு பத்திரங்களும், டாலரும் தான்.
அமெரிக்க பங்கு சந்தை சரிவு:
4 வார ஈரான் போர் பங்கு சந்தையில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியதன் விளைவாக உலகம் முழுவதும் இருக்கும் பங்குச்சந்தைகள் பெரும் தாக்கத்தை எதிர்கொண்டது.
இந்த நிலையில் இந்த வார முடிவில் Dow Jones Industrial Average தொடர்ந்து ஐந்து வாரங்களாக சரிவில் இருந்து தற்போது "கரெக்ஷன்" நிலைக்கு சென்றுள்ளது. இது சமீபத்திய உச்ச நிலையிலிருந்து கணிசமான வீழ்ச்சியாகும்.
அதேபோல் S&P 500 குறியீடும் ஜனவரி 2026-ல் தொட்ட 7,002.28 என்ற உச்ச நிலையிலிருந்து சுமார் 9% வீழ்ச்சியடைந்து, ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெரிய பாதித்துள்ளது.
டெக் நிறுவனங்களுக்கு பெரிய அதிர்ச்சி
இந்த சரிவின் மிகப்பெரிய தாக்கம் உலகின் முன்னணி டெக்னாலஜி நிறுவனங்கள் மீது உள்ளது. ஆல்பபெட், அமேசான், ஆப்பிள், மெட்டா பிளாட்பார்ம்ஸ், ஆப்பிள், மைக்ரோசாப்ட், என்விடியா, டெஸ்லா ஆகிய "Magnificent 7" நிறுவனங்கள் இந்த வீழ்ச்சியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த ஏழு நிறுவனங்களும் சேர்த்து S&P 500-இன் சுமார் மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ளதால், இவை வீழ்ச்சியடைந்தால் முழு சந்தையும் பாதிக்கப்படுகிறது. கடந்த நான்கு வாரங்களில் மட்டும் இந்நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு சுமார் 1.72 டிரில்லியன் டாலர் அளவுக்கு குறைந்துள்ளது.
பங்குகளின் வீழ்ச்சி
இந்த காலத்தில் Alphabet Inc. பங்கு விலை 311.43 டாலரிலிருந்து 273.76 டாலராக குறைந்து, சுமார் 450 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை இழந்துள்ளது. இதேபோல் Meta Platforms பங்கு $648.18 இலிருந்து $525.72 ஆக சரிந்து $310 பில்லியன் இழப்பை சந்தித்துள்ளது.
Microsoft $392.74 இலிருந்து $356.77 ஆக வீழ்ச்சியடைந்து $270 பில்லியன் இழப்பு கண்டுள்ளது. Nvidia $177.19 இலிருந்து $167.52 ஆக குறைந்து $230 பில்லியன் மதிப்பிழப்பு ஏற்பட்டுள்ளது. Apple சுமார் $220 பில்லியன், Tesla $130 பில்லியன் மற்றும் Amazon $110 பில்லியன் அளவுக்கு இழப்புகளை சந்தித்துள்ளன.
போர் பங்கு சந்தையை எவ்வாறு பாதித்தது?
இந்த போர் பங்கு சந்தையில் மூன்று முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. முதலில், எண்ணெய் விலை உயர்வு பற்றிய அச்சம் அதிகரித்துள்ளது. இரண்டாவது, உலக பொருளாதார வளர்ச்சி குறைந்து, பணவீக்கம் அதிகரிக்கும் என்ற பயம் உருவாகியுள்ளது. மூன்றாவது, முதலீட்டாளர்கள் அதிக ஆபத்து உள்ள பங்குகளை விற்று பாதுகாப்பான முதலீடுகளுக்கு மாறியுள்ளனர். இப்படி 3 முக்கிய கோணத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போர் நீடிக்கும் வரை சர்வதேச பங்கு சந்தைகளில் நிலைத்தன்மை ஏற்படுவது கடினம்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை மேலும் 10% குறையுமா? எல்லாம் டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு!!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

ஈரான் கொடுத்த ஒற்றை அப்டேட்.. தலைகீழாக மாறிய எண்ணெய் சந்தை! இதுலேயே தெரிஞ்சுக்கோங்க?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

ஈரான் போர் நிறுத்தம்: கச்சா எண்ணெய், LPG, LNG வாங்குவதில் போட்டி! கத்தாருக்கு பறந்த மத்திய அமைச்சர்!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

ஈரான் போட்ட முட்டுக்கட்டை! இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வி..ஜேடி வேன்ஸ் சொன்ன அந்த பேட் நியூஸ்!



Click it and Unblock the Notifications