இன்று அமெரிக்க பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான SEC அமைப்பு பிட்காயின் ETF குறித்து ஒப்புதலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் காரணத்தால், இன்றைய வர்த்தகம் துவங்கியதில் இருந்து பிட்காயின் மதிப்பு தாறுமாறாக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் இன்று ஒரு நாளில் மட்டும் பிட்காயின் மதிப்பு 59,055.50 டாலரில் இருந்து 62,652.40 டாலர் வரையில் உயர்ந்து கிரிப்டோமுதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபத்தை கொடுத்துள்ளது.
இந்நிலையில் பிட்காயின் மூலம் 4 வயது குழந்தைக்கு கிடைத்த லாபம் கிரிப்டோ முதலீட்டு சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில்
பிரேசில் நாட்டின் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளத்தின் நிறுவனரான Joao Canhada தனது குழந்தை பிறந்த போது, அதாவது 4 வருடத்திற்கு முன்பு 2017ல் வெறும் 1000 டாலருக்கு ஒரு பிட்காயினை பரிசாக கொடுத்துள்ளார். இதன் மதிப்பு தற்போது 62000 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
4 வயது குழந்தை
இதன் மூலம் 4 வயதான Joao Canhada-வின் குழந்தை தற்போது பிட்காயின் முதலீட்டின் மூலம் சுமார் 6,500 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை பெற்றுள்ளது. 2017ல் துவக்கத்தில் ஒரு பிட்காயின் விலை வெறும் 1000 டாலர் மட்டுமே அதாவது இந்திய ரூபாய் படி 70000 ரூபாய் ஆனால் இன்ற 60,000 டாலர் இது கிட்டதட்ட 46 லட்சம் ரூபாய்.
12 வயது பிரிட்டன் சிறுவன்
இதேபோல் பிரிட்டனை சேர்ந்த 12 வயதான Benyamin Ahmed தனது பள்ளி காலத்தில் அதிகளவிலான NFT-ஐ விற்பனை செய்துள்ளார். NFT மற்றும் கிரிப்டோ சந்தை கடந்த 12 மாதத்திஸ் 706 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் இச்சிறுவன் தற்போது 4,00,000 டாலர் வரையில் சம்பாதித்துள்ளார். இது கிட்டதட்ட 3 கோடி ரூபாய்.
கிரிப்டோகரன்சி விலை
இந்நிலையில் இன்று முன்னணி கிரிப்டோகரன்சியின் விலை இதுதான். பிட்காயின் - 61,269.19 டாலர் (0.80 சதவீத உயர்வு), எதிரியம் - 3,777.37 டாலர் (1.90 சதவீத சரிவு), ரிப்பிள் - 1.08 டாலர் (4.01 சதவீத சரிவு), கார்டானோ - 2.14 டாலர் (1.42 சதவீத சரிவு), போல்காடாட் - 41.27 டாலர் (1.47 சதவீத சரிவு), டோஜ்காயின் - 0.25 டாலர் (6.77 சதவீத சரிவு).
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications