மேன்செஸ்டர்: இங்கிலாந்தை சேர்ந்த ஒரு தொழிலதிபர் தனக்கு உதவியாளர் வேண்டும் என செய்துள்ள விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மேன்செஸ்டர் பகுதியை சேர்ந்த பணக்காரர் Barrie Drewitt-Barlow. இவர் அண்மையில் ஒரு விளம்பரம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதுதான் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட 2000 கோடி மதிப்புள்ள சொத்துகளுக்கு அதிபரான பேரி 54 வயதானவர். இவர் வெளியிட்ட ஒரு விளம்பரத்தில் "தனிப்பட்ட முறையில் ஒரு உதவியாளர் தேவைப்படுகிறார், என்னுடைய ஆடம்பரமான வாழ்க்கை முறையில் எனக்குத் தேவையான சில உதவிகளை செய்வதற்கு உதவியாளர் தேவைப்படுகிறார்.

நான் தினமும் என்ன உடை அணிய வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து தர வேண்டும், நான் எங்கே செல்ல வேண்டும், எனக்கு எங்கே மீட்டிங் இருக்கிறது எந்த தேதியில் பயணம் செய்ய வேண்டும் என்பதை எல்லாம் எனக்கு அட்டவணையாக தயார்படுத்தி கொடுக்க வேண்டும். இந்த பதவிக்கு 40 லட்சம் ரூபாயை சம்பளமாக தருகிறேன்" என அந்த விளம்பரத்தில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
"தற்போதைக்கு இந்த வேலை பிரிட்டனை அடிப்படையாகக் கொண்டது என்னுடைய உதவியாளராக வரக்கூடியவர் அடிக்கடி அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டி இருக்கும்" என்பதையும் அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படும் விஷயமாக இருக்கிறது. பேரியின் உதவியாளராக இருப்பவர் அவரை போலவே ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வது மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும் என சொல்லப்படுகிறத.
நீங்கள் குடும்பத்தை விட்டு, வீட்டை விட்டு நீண்ட நாட்கள் வெளியே தங்கி இருக்க வேண்டும் அதற்கு தயார் எனில் விண்ணப்பம் செய்யுங்கள் என பேரி கூறியுள்ளார். அதேபோல பயணம் செய்வதற்கு செய்வதற்கு சலித்துக் கொள்ளாத நபராக இருக்க வேண்டும். ஒருவாரம் இல்ல ஒரு மாத காலம் கூட நீங்கள் வீட்டிலிருந்து வெளியே இருக்க வேண்டியது இருக்கும் என தெரிவித்துள்ளார்.
தான் என்ன ஆடையை அணிய வேண்டும் என்பதை தேர்வு செய்து வழங்க வேண்டும், நவீன ட்ரெண்டுக்கு ஏற்ப ஆடை அணிகலன்களுக்கான பரிந்துரைகளை வழங்க வேண்டும் ஆகியவை உதவியாளர் செய்ய வேண்டிய பணிகளாம்.
அவருக்கு என்ன மாதிரியான உணவு தயாரிக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும் ,மேலும் அவர் கீழ் செயல்படக்கூடிய 10 உறுப்பினர்கள் கொண்ட குழுவினை திறமையாக செயல்படுத்தும் நபராக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை அவரது விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விளம்பரம் வெளியானதை அடுத்து ஏராளமானவர்கள் போட்டி போட்டுக்கொண்டு இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்துள்ளார்கள். இது தொடர்பாக ஒரு தளத்திற்கு பேட்டி அளித்துள்ள பேரி " நிறைய பேர் இந்த வேலைக்காக விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களிடம் நான் நேர்காணலில் நடத்தி வருகிறேன் சரியான நபரை தேர்வு செய்வதற்கு சற்று காலம் எடுக்கும் என நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications