மூன்று வேளை உணவு, குடிநீர் மற்றும் உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் இருப்பதை நாம் வறுமை எனக் கூறுகிறோம். தற்போது இந்த வறுமையில் புதிதாக ஒன்று சேர்ந்திருக்கிறது. அதற்கு பெயர் Holiday Poverty. அதாவது வருடத்தில் ஒரு முறை விடுப்பு எடுத்து குடும்பத்தினருடன் ஒரு வாரத்திற்கு ஜாலியாக வெளியே சென்று வர முடியாத நிலை தான் "Holiday Poverty" எனப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளில் தற்போது Holiday Poverty அதிகரித்து வருவதாக ஐரோப்பிய வர்த்தக ஒன்றிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் பணியாளர்களுக்கான அமைப்பான ஐரோப்பிய வர்த்தக ஒன்றிய கூட்டமைப்பு அண்மையில் ஒரு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருக்கும் வேலைக்கு செல்லக்கூடிய மக்களில் கிட்டதட்ட 15 சதவிகிதம் பேர் (எண்ணிக்கையில் 40 மில்லியன் ) Holiday Poverty-ஐ எதிர்கொள்கின்றனர் எனக் கூறுகிறது.

அதாவது இவர்களால் தங்களுடைய விடுமுறை காலங்களில் தாங்கள் நினைத்தபடி தங்கள் குடும்பத்தினருடன் தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு சென்று விடுமுறையை கழிக்க முடிவதில்லை.
ஐரோப்பா ஒரு சக்தி வாய்ந்த பொருளாதாரத்தை கொண்டு இருந்தாலும் அங்கு இருக்கக்கூடிய ஊழியர்களால் தங்கள் விடுமுறை காலத்தை கூட நினைத்தபடி கழிக்க முடியவில்லை என ஐரோப்பிய தொழிலாளர் வர்த்தக ஒன்றிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் லிஞ்ச் தெரிவித்துள்ளார்.
18 முதல் 64 வயது உட்பட்ட ஊழியர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் ஆண்டுக்கு ஒரு முறை ஒருவாரம் தங்களுடைய குடும்பத்தினருடன் தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு சுற்றுலா செல்வதற்கு முடிகிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது பெரும்பாலானவர்கள் இல்லை என பதிலளித்துள்ளனர்.
இதற்கு கொரோனா பெருந் தொற்று பெரிய காரணமாக அமைந்திருக்கிறது. இத்தாலியில் தான் அதிகபட்சமான ஊழியர்கள் தங்களால் விடுமுறைக்காக வெளியில் எங்கும் செல்ல முடியவில்லை எனக் கூறியுள்ளனர் அதாவது 6 மில்லியன் மக்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது ரோமானியா மூன்றாவது இடத்தில் இருப்பது சைப்ரஸ்.
அயர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் இதுபோல விடுமுறைக்காக வெளியே செல்ல முடியாத அளவுக்கு பொருளாதார சிக்கலில் தவித்து வரும் நபர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது என தெரியவந்துள்ளது.
விடுமுறையை கழிப்பதற்காக குடும்பத்தினரோடு சுற்றுலா செல்வது ஆடம்பரம் கிடையாது குழந்தைகளுக்கு குடும்பத்தினருக்கு ஒரு மதிப்பு மிக்க அனுபவத்தை வழங்க எடுக்கும் முயற்சி தான் இது என கூறும் தொழிலாளர் கூட்டமைப்பு,இவ்வாறு குடும்பத்தினரோடு நேரத்தை செலவிடுவது தொழிலாளர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதுகாக்கும் என்கிறது.
பொதுவாகவே ஐரோப்பியர்கள் தங்களுக்கான ஓய்வு நேரத்தை எடுத்துக் கொள்வதில் மிக கவனமாக இருக்கின்றனர். அந்த வகையில் உலகிலேயே அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது ஐரோப்பிய நாடுகளில் தான் வருடாந்திர விடுப்பு கொடுப்பனவுகள் அதிகம்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications