இந்தியாவில் கொரோனா தொற்று மூலம் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு, பல ஆயிரம் பேர் தினமும் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவிற்கு உதவ வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் டாப் 40 நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் ஒன்று சேர்ந்துள்ளனர்.
இந்தக் கூட்டணி இந்தியா கொரோனா-வை எதிர்த்துப் போராடத் தேவையான அனைத்து ஆதாரங்களையும் உலக நாடுகளில் இருந்து கொண்டு சேர்க்கும் மிக முக்கியமான பணிகளைச் செய்ய உள்ளது.
40 சிஇஓ-க்கள் கூட்டணி
இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை, வேக்சின் பற்றாக்குறை, போதுமான வேக்சின் தயாரிப்பதற்கான மூலப்பொருள் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை எனப் பல பிரச்சனைகள் இருக்கும் நிலையில் அமெரிக்காவின் சேம்பர் ஆப் காமர்ஸ்-ன் அமெரிக்கா - இந்தியா பிஸ்னஸ் கவுன்சில் பரிவு தலைமையில், Partnership Forum மற்றும் Business Roundtable ஆகிய அமைப்புகளுடன் கூட்டணி சேர்ந்து இந்த 40 சிஇஓக்கள் அடங்கிய குழு இந்தியாவிற்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டு உள்ளது.
20,000 ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்ஸ்
40 சிஇஓ-க்கள் அடங்கிய இக்குழு முதல் கட்டமாக 20,000 ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்ஸ்-ஐ அடுத்த சில வாரத்தில் இந்தியாவிற்குக் கொண்டு சேர்க்கும் பணிகளைச் செய்ய முடிவு செய்துள்ளதாக Deloitte சிஇஓ புனித் ரென்ஜன் தெரிவித்துள்ளார்.
ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்றுமதி
அடுத்த சில வாரத்தில் 20000 ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர்ஸ்-ஐ இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய அனைத்து விதமான பணிகளையும் செய்து வரும் நிலையில், இதற்கு அடுத்த படியாக 10 லிட்டர் மற்றும் 45 லிட்டர் அளவு கொண்டு ஆக்சிஜன் சிலிண்டர்களை இந்தியாவிற்கு அனுப்பத் திட்டமிட்டு உள்ளோம் எனவும் புனித் ரென்ஜன் தெரிவித்துள்ளார்.
Deloitte சிஇஓ புனித் ரென்ஜன்
மேலும் Deloitte இந்திய நிறுவனத்தில் சுமார் 2000 ஊழியர்கள் பாதிக்கப்பட்டு உள்ள நிலையிலும், புனித் ரென்ஜன் அவர்களின் குடும்பத்தில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கொரோனாவிற்கு எதிரான இந்தப் போராட்டம் தனக்கு மிகவும் பர்சனல் எனவும் Deloitte சிஇஓ புனித் ரென்ஜன் தெரிவித்துள்ளார்.
முக்கியத் துறை சார்ந்த நிறுவனங்கள்
40 சிஇஓக்கள் அடங்கிய இக்குழுவில் பார்மா நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் ரீடைல், ஈகாமர்ஸ், டெக்னாலஜி, பல பெரிய உற்பத்தி நிறுவனங்களும் அடங்கியுள்ளது.
அமெரிக்கா - இந்தியா அரசு பேச்சுவார்த்தை
மேலும் அமெரிக்க அரசு மற்றும் இந்திய அரசுகள் மத்தியிலான பேச்சுவார்த்தையும் நன்மையாக முடிந்துள்ள நிலையில் பல தேவைகளை இந்தியாவிற்கு எங்களால் அளிக்க முடியும் என இக்குழு தெரிவித்துள்ளது.
அமெரிக்கப் பப்ளிக் - பிரைவேட் பார்ட்னர்ஷிப்
இப்புதிய அமெரிக்கப் பப்ளிக் - பிரைவேட் பார்ட்னர்ஷிப் இந்தியாவிற்குத் தேவையான மருத்துத் தேவைகள், தடுப்பு மருந்துகள், ஆக்சிஜன் மற்றும் இதர உயிர் காக்கும் கருவிகளைக் கொண்டு சேர்க்க உள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் இந்த நேரத்தில் இக்குழுவின் பணிகள் மிகவும் பாராட்ட வேண்டியதாக உள்ளது.
முதல் முறையாக அமெரிக்காவில்
கொரோனா மோசமான பாதித்துள்ள இந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அமைக்கப்பட்ட இக்குழு Global Task Force on Pandemic Response: Mobilizing for India எனப் பெயரிட்டுள்ளது. முதல் முறையாக ஒரு தனி நாட்டிற்கு உதவும் வகையில் ஒரு குளோபல் டாஸ்க் போர்ஸ் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு உள்ளது என அமெரிக்கா மாநிலச் செயலாளர் டோனி பிளின்கென் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications