டயானா திருமண கேக்கை 41 வருடம் பாதுகாத்த நபர்.. ஏலம் விடப்போவதாக அறிவிப்பு!

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்து நாட்டின் இளவரசர் சார்லஸ் மற்றும் டயானா திருமணம் நடந்த நிலையில் இந்த திருமணத்தின் போது வெட்டப்பட்ட கேக் துண்டு தற்போது ஏலம் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கேக்கை அந்த திருமணத்தில் கலந்து கொண்ட ஒருவர் பாதுகாத்து வைத்திருந்தார் என்பதும் இந்த கேக் துண்டு தான் தற்போது ஏலம் விடப் போவதாக கூறப்படுகிறது.

இந்த கேக்கின் ஏல மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 25 ஆயிரம் ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சார்லஸ் - டயானா திருமணம்

சார்லஸ் - டயானா திருமணம்

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி டயானா ஆகிய இருவருக்கும் கடந்த 1981ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி திருமணம் நடந்தது. மிகவும் பிரமாண்டமாக நடந்த இந்த திருமணத்தை நேரிலும் தொலைக்காட்சி மூலமும் இலட்சக்கணக்கானோர் கண்டுகளித்தனர். இது இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த திருமணம் என்று அழைக்கப்பட்டது.

விவாகரத்து

விவாகரத்து

இந்த நிலையில் திருமணமான சில ஆண்டுகளில் சார்லஸ் மற்றும் டயானா ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்பதும் விவாகரத்து கோருவதற்கு முன்பாகவே அவர்கள் பிரிந்து வாழ்ந்தார்கள் என்றும் கூறப்பட்டது.

திருமண கே

திருமண கே

இந்த நிலையில் சார்லஸ் - டயானா திருமணத்தின் போது வெட்டப்பட்ட கேக்கின் ஒரு பகுதி தற்போது ஏலத்துக்கு வர உள்ளது. இந்த திருமணத்தில் கலந்து கொண்ட இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நைஜல் என்பவர் கடந்த ஆண்டு காலமானார். அவர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டபோது அவருக்கு வழங்கப்பட்ட கேக்கை பாதுகாப்பாக கடந்த 41 ஆண்டுகள் வைத்திருந்தார். அவரது இறப்பிற்கு பின் தற்போது இந்த கேக் துண்டை ஏலம் விடப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஏலத்தொகை

ஏலத்தொகை

இந்த கேக் 300 இங்கிலாந்து பவுண்டுகள் மதிப்பு என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 27 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த துண்டு இலட்சக்கணக்கில் ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+