இந்தியாவில் 2024ஆம் ஆண்டில் 43 லட்சம் கார்கள் விற்பனை ஆகியுள்ளன, கிராமப்புறங்களில் எஸ்யூவி ரக கார்கள் பெரிய அளவில் விற்பனையாகி இருப்பது தெரியவந்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் கார்கள் விற்பனை குறித்த புள்ளி விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் இதுவரை இல்லாத அளவாக 43 லட்சம் கார்கள் ஒரு ஆண்டில் விற்பனை செய்து சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. மாருதி சுசுகி, ஹூண்டாய் ,டாடா மோட்டார்ஸ் , டொயோட்டா நிறுவனங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவு அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்து லாபம் கண்டிருக்கின்றன.

குறிப்பாக சந்தையில் எஸ்யூவி ரக கார்கள் விற்பனை அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் 41.1 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் 2024 ஆம் ஆண்டில் அது 43 லட்சம் என உயர்ந்து உயர்ந்துள்ளது. இந்த ஆண்டிலும் கார் சந்தைகள் தானே லீடர் என்பதை மாருதி சுசுகி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. மாருதி சுசுகி நிறுவனம் இதுவரை இல்லாத அளவாக ஹோல்சேலில் 17,90, 977 கார்களை விற்பனை செய்துள்ளது.
2018 ஆம் ஆண்டில் 17,51,919 கார்களை விற்பனை செய்ததே மாருதி சுசுகியின் சாதனையாக இருந்த நிலையில் தற்போது அதனை முறியடித்திருக்கிறது. அதேபோல சில்லறை விற்பனையில் பார்க்கும்போது 2023 ஆம் ஆண்டில் மாருதி சுசுகி நிறுவனம் 17,26,661 கார்களை விற்பனை செய்தது, அது 2024 ஆம் ஆண்டில் 17,88,405 கார்கள் என உயர்ந்துள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் தங்களுடைய நெக்ஸா விற்பனை நிலையங்களை சிறு நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்ததே கார்களின் விற்பனை அதிகரிக்க காரணம் என சொல்லப்படுகிறது. அதேபோல கிராமப்புற பகுதிகளில் மாருதி சுசுகி நிறுவனத்தின் கார் விற்பனை 16 சதவீதம் அதிகரித்துள்ளதாம்.
ஹூண்டாய் நிறுவனத்தை பொருத்தவரை 2024 ஆம் ஆண்டில் 6,05,433 கார்களை விற்பனை செய்திருக்கிறது. இதில் எஸ்யூவி கார்கள் மட்டும் 67.6 சதவீதம் என தெரியவந்துள்ளது. கியா இந்தியா நிறுவனம் இந்தியாவில் 2,55,038 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக தங்கள் நிறுவன கார்கள் விற்பனையாகியுள்ளன என கியா நிறுவனம் கூறியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 5.65 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது, அதேபோல டொயோட்டா நிறுவனம் தங்களுடைய விற்பனை 2023 ஆம் ஆண்டை விட 40 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் டொயோட்டா நிறுவனம் 2.33 லட்சம் கார்களை இந்தியாவில் விற்பனை செய்தது அதுவே 2024 ஆம் ஆண்டில் 3.26 லட்சம் என உயர்ந்துள்ளது.
மகேந்திரா மகேந்திரா நிறுவனம் 41,424 கார்களை விற்பனை செய்து 18 சதவீதம் விற்பனை விகிதம் உயர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளது. நிசான் மோட்டார் நிறுவனம் 11,676 கார்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. ஆடி இந்தியா நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய கார் விற்பனை சரிவடைந்து இருப்பதாக கூறியுள்ளது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications