இவ்வளவு சம்பளம் அதிகரிக்குமா.. இந்திய ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கு..!

சர்வதேச சந்தையில் நிலவி வரும் நிலைக்கு மத்தியில் இருக்கும் வேலையாவது நிலைக்குமா? என்ற சூழலே நிலவி வருகின்றது. ஏனெனில் கூகுள் தொடங்கி மைக்ரோசாப்ட், அமேசான், ட்விட்டர், சிஸ்கோ, மெட்டா என பல நிறுவனங்களும் பணிநீக்கம் செய்துள்ளன.

பல்வேறு நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கையினை எடுத்துள்ளன. எடுத்தும் வருகின்றன.

ஆனால் ஆய்வறிக்கையில் நடப்பு ஆண்டில் இருமடங்கு சம்பளம் அதிகரிக்கலாம் என அறிக்கையானது வெளியாகியுள்ளது.

முக்கிய காரணம்

முக்கிய காரணம்

இந்தியா நிறுவனங்களில் நான்கில் மூன்று பங்கு 9 - 12% அளவுக்கு சம்பள உயர்வை எதிர்பார்க்கிறது. இந்தியா இன்க் நிறுவனங்களில் 21.4% எனும் அளவுக்கு அட்ரிஷன் விகிதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. ஆக இது சம்பள அதிகரிப்பில் முக்கிய பங்கு வகிக்கலாம். இது சம்பள அதிகரிப்புக்கு காரணமாக அமையலாம்.

இரு இலக்கில் அதிகரிக்கலாம்

இரு இலக்கில் அதிகரிக்கலாம்

டெலிகாம், சில்லறை மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி துறைகள் தொடர்ந்து உயர்வினை காணலாம். தொடர்ந்து இந்திய நிறுவனங்களில் இரு இலக்கில் சம்பளம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச பொருளாதாரம் என்பது ஏற்ற இறக்கத்தில் இருந்து வரும் நிலையில், இந்தியாவில் சம்பளம் இரு இலக்கு அதிகரிக்கலாம் என்பது பலருக்கும் சந்தோஷத்தினை கொடுத்துள்ளது எனலாம்.

சர்வே முடிவு

சர்வே முடிவு

இது 2023ல் 10.3% எனும் அளவுக்கு அதிகரிக்கலாம் என Aon India's ஆய்வறிக்கையானது தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டில் இருந்து சற்றே சரிவினைக் கண்டிருந்தாலும் 10.6% எனும் அளவுக்கு சரிவினைக் கண்டு உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சம்பள உயர்வு என்பது இருக்கலாம்.

அதிக சம்பளம்

அதிக சம்பளம்

28வது வருடாந்திர சம்பள அதிகரிப்பு ஆய்வறிக்கையானது, Aon India 46% இந்திய நிறுவனங்கள் கிட்டத்தட்ட 2 நிறுவனங்களில் 1 இரட்டை இலக்கில் சம்பள உயர்வினை ஊழியர்களுக்கு வழங்க தயாராக உள்ளதாக தெரிய வந்துள்ளது. இது கடந்த 7 - 8 ஆண்டுகளில் அதிக சம்பளம் கொடுக்க தயாராக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

இந்தியாவில் அதிகம்

இந்தியாவில் அதிகம்

Aon India ஆய்வில் சிறப்பாக பணிபுரியும் ஊழியர்களுக்கு 16.5% வரையில் சம்பள அதிகரிப்பு இருக்கலாம். இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தில் இருக்கலாம். மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் சம்பளம் அதிகம் என ஆய்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

டாப் 5 துறைகள்

டாப் 5 துறைகள்

அதிக சம்பளம் கொடுக்கும் துறைகளில் ஈ-காமர்ஸ், டெக்னலாஜி பிளார்ட்பார்ம்ஸ் & ப்ராடக்ட்ஸ், ஜிசிசி, டெக் கன்சல்டிங் சர்வீசஸ், நிதி சேவை வழங்கும் நிறுவனங்கள் இதில் அடங்கும்.

டெலிகாம், சில்லறை வணிகம் மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி துறைகள் மிகவும் பழமைவாத துறைகளாக இருக்கலாம். ஏனெனில் கொரோனாவுக்கு பிறகு அவை இன்னும் மீண்டு வந்து கொண்டுள்ளன.

சாத்தியமா?

சாத்தியமா?

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்தியா இன்கில் சம்பளம் என்பது பல பெரியளவில் அதிகரித்து வருகின்றது. தொடர்ந்து அதிகளவு சம்பளத்தினை வழங்கலாம் என்று கூறப்பட்டாலும், நிலவி வரும் மந்த நிலையில் இது எப்படி சாத்தியம் என்பதே பலருக்கும் கேள்வியாக எழுந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+