ஆதார் நம் நாட்டில் இருக்கும் முக்கியமான முகவரி சான்றாக உள்ளது. எனவே உங்கள் ஆதார் கார்டில் முகவரி விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மற்ற எல்லா விவரங்களையும் புதுப்பிப்பதற்கு வரம்பு வைத்துள்ளது. ஆனால் ஆதார் கார்டில் உள்ள முகவரி விவரங்களை நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்கென்று எந்தவித வரம்பும் இல்லை. ஏனெனில் ஒருவர் ஒரு வீட்டில் குடியிருந்து விட்டு மற்றொரு வாடகை வீட்டிற்கு மாறினால் கண்டிப்பாக அப்போது ஆதார் கார்டில் முகவரி விவரங்களை திருத்த வேண்டும். இதுபோன்ற சில விஷயங்களால் ஆதார் கார்டில் உள்ள முகவரியை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.
உங்கள் ஆதார் விவரங்களை ஏன் புதுப்பிக்க வேண்டும்?: இந்திய குடிமக்களுக்கு ஆதார் கார்டு ஒரு முக்கியமான ஆவணமாகும். இது பெரும்பாலும் அடையாளத்திற்கு அப்பாற்பட்டு பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. எனவே உங்கள் பதிவுகள் சரியானதாக இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்துவதற்கு இந்த அப்டேட் முக்கியமானது. முகவரி மாற்றங்களை நீங்கள் கீழ்காணும் ஆவணங்களில் எதை வைத்து வேண்டுமானாலும் செய்ய முடியும். சுமார் 45 ஆவணங்கள் UIDAI மூலம் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அவை என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

பாஸ்போர்ட்
பாஸ்புக்
தபால் அலுவலக கணக்கு அறிக்கை அல்லது பாஸ்புக்
ரேஷன் கார்டு
வாக்காளர் அடையாள அட்டை
ஓட்டுநர் உரிமம்
கவர்மெண்ட் வழங்கிய போட்டோவுடன் கூடிய ஐடி கார்டு
கடந்த மூன்று மாதங்களுக்கான எலக்ட்ரிசிட்டி பில்
கடந்த மூன்று மாதங்களுக்கான குடிநீர் பில்
கடந்த மூன்று மாதங்களுக்கான லேண்ட்லைன் பில்
கடந்த 1 வருடத்திற்குள் உள்ள சொத்து வரி ரசீது
கடந்த மூன்று மாதங்களுக்கான கிரெடிட் கார்டு அறிக்கை
இன்ஷூரன்ஸ் பாலிசி
புகைப்படம் மற்றும் கையொப்பத்துடன் கூடிய வங்கிக் கடிதம்
புகைப்படம் மற்றும் கையொப்பத்துடன் பதிவுசெய்யப்பட்ட நிறுவனத்திடமிருந்து கடிதம்
புகைப்படம் மற்றும் கையொப்பத்துடன் கூடிய கல்வி நிறுவன கடிதம்
NREGA ஜாப் கார்ட்
ஓய்வூதிய அட்டை
கிசான் பாஸ்புக்
CGHS/ECHS அட்டை
MP/MLA/MLC/Gazetted அதிகாரி அல்லது தாசில்தாரின் முகவரி சான்றிதழ்
கிராம பஞ்சாயத்து பிரமுகரின் முகவரி சான்றிதழ்
வருமான வரி மதிப்பீட்டு ஆணை
வாகனப் பதிவுச் சான்றிதழ்
விற்பனை/குத்தகை/வாடகை ஒப்பந்தம்
அஞ்சல் துறையால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய முகவரி அட்டை
புகைப்படத்துடன் கூடிய சாதி மற்றும் இருப்பிடச் சான்றிதழ்
ஊனமுற்றோர் அடையாள அட்டை
கேஸ் கனெக்சன் பில்
மனைவியின் பாஸ்போர்ட்
சிறுவர்களுக்கு பெற்றோரின் பாஸ்போர்ட்
முகவரி கொண்ட திருமணச் சான்றிதழ்
ஜன்-ஆதார் கார்டு
நகராட்சி கவுன்சிலரின் முகவரி சான்றிதழ்
TC
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் அடையாளச் சான்றிதழ்
EPFO அடையாள அட்டை
மேற்கண்ட ஆவணங்களில் எதை வைத்து வேண்டுமானாலும் நீங்கள் ஆதார் கார்டு முகவரியில் மாற்றம் செய்து கொள்ளலாம். உங்கள் ஆதார் கார்டு புதுப்பிப்பதில் தாமதம் ஏற்படாமல் இருக்க உங்கள் சூழ்நிலைக்கு வசதியான ஆவணத்தை தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications