இந்தியாவின் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் பல கோடி மக்கள் பயன்படுத்தும் சிஸ்டமாடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) எனப்படும் தொடர் முதலீட்டு முறையில் 2025 அக்டோபர் மாதத்தில், சுமார் 45 லட்சம் முதலீட்டாளர்கள் தங்கள் எஸ்ஐபி திட்டங்களில் முதலீடு செய்வதை நிறுத்தியுள்ளனர். இது, செப்டம்பரில் பதிவான 44 லட்சம் என்ற எண்ணிக்கையை விட அதிகமானது.
இந்திய மியூச்சுவல் ஃபண்டுகள் சங்கம் (AMFI) வெளியிட்ட சமீபத்திய தரவுகளின் படி பார்க்கும் போது அக்டோபர் மாதத்தில் முதலீட்டு தொகையும் அதிகரித்துள்ளது, இதேபோல் ஸ்டாபேஜ் அளவும் அதிகரித்துள்ளது. இது இந்திய முதலீட்டாளர்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

அக்டோபர் எஸ்ஐபி ரத்துகள்:
அக்டோபர் மாதத்தில் சுமார் 45 லட்சம் எஸ்ஐபி கணக்குகள் மூடப்பட்டன. இதில் முதலீட்டாளர்கள் தங்கள் திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தியிருப்பது, முழுமையாக ரத்து செய்திருப்பது, அல்லது திட்டம் காலாவதியாகியிருப்பது அனைத்தும் அடக்கும். செப்டம்பர் மாதம் இது 44 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
புது கணக்குகள்:
AMFI தரவுகளின்படி, 45 லட்சம் கணக்குகள் ரத்து செய்யப்பட்டு இருந்தாலும், புதிதாக 60 லட்சம் வரையிலான கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக, மொத்த எஸ்ஐபி கணக்குகள் 9.73 கோடியிலிருந்து 9.88 கோடியாக உயர்ந்துள்ளது. இது முதலீட்டாளர்கள் தொடர்ந்து ஆர்வமாக இருப்பதையும் காட்டுகிறது.
எஸ்ஐபி முதலீட்டில் புதிய சாதனை:
அக்டோபர் மாதத்தில் எஸ்ஐபி ரத்துகள் அதிகரித்தாலும், எஸ்ஐபி மூலம் வரும் பணம் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அக்டோபர் 2025ல், மொத்த எஸ்ஐபி முதலீடு 29,529 கோடி ரூபாயாக உயர்ந்தது. இது, செப்டம்பர் மாதத்தின் 29,361 கோடி ரூபாயை விட அதிகமாகும்.
எஸ்ஐபி ரத்து விகிதம்:
இது மியூச்சுவல் பண்ட் ரத்து செய்யப்பட்ட கணக்குகளின் சதவீதத்தை அளக்கும் ஒரு முக்கிய குறியீடாகும். செப்டம்பரில் இது 76.27 சதவீதமாக இருந்தது, அக்டோபரில் 75 சதவீதமாக சற்று குறைந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்த அளவீட்டில் பெரிய ஏற்ற இறக்கங்களை கண்டுள்ளது.
எஸ்ஐபி சொத்துகள் வளர்ச்சி:
எஸ்ஐபி திட்டங்களின் கீழ் உள்ள மொத்த சொத்துகளின் மதிப்பு (AUM) அக்டோபரில் 15.52 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 16.25 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, மியூச்சுவல் ஃபண்ட் துறையின் மொத்த AUM-ல் 20.3 சதவீத பங்கீட்டை வகிக்கிறது. இந்த வளர்ச்சி, எஸ்ஐபி முதலீடுகளின் நீண்டகால நன்மையை வெளிப்படுத்துகிறது.
அக்டோபர் மாதம் மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் ரத்துகள் அதிகமாக இருந்தாலும், முதலீடுகள் அதிகரிப்பதால் மொத்த சொத்து மதிப்பு அளவு அதிகரித்துள்ளது. பங்குச்சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கமும், மக்களின் வருமான அளவில் ஏற்படும் மாற்றங்களும் தான் இந்த வித்தியாசத்திற்கு முக்கியமான காரணமாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!



Click it and Unblock the Notifications