மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தைத் தொடர்ந்து மீண்டும் ரயில்வே பயண இன்ஸ்சூரன்ஸ் பற்றிய பேச்சு எழுந்துள்ளது. எல்லா பயணிகளின் டிக்கெட் கட்டணத்தில் சேர்ப்பது மீண்டும் கட்டாயமாக்குப்படும் என கருத்து நிலவுகிறது.
ஒவ்வொரு ரயில் டிக்கெட் வாங்கும்போதும் இன்சூரன்ஸ்கான பணம் சேர்த்து வாங்கப்படும். ரயில் பயணத்தின் போது ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு தருவதற்கு இது உதவும்.

ஆனால் இன்சூரன்ஸ் பண வசூலில் எவ்வளவு ஆனது என்றும் அதில் எவ்வளவு இழப்பீடு தரப்பட்டது பற்றி இங்கு பார்க்கலாம்.
ஒவ்வொரு டிக்கெட்டிலும் 45 பைசா பிரீமியமாக ஐஆர்சிடிசி வசூலிக்கிறது. இதன் மூலம் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கிடைக்கும். பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த காப்பீடை ஐஆர்சிடிசி பெறுகிறது. விபத்துகள் நடந்தால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடை தருகின்றன.
2016-17 நிதியாண்டில் பயணிகளின் இன்சூரன்ஸுக்காக 11 கோடி ரூபாயை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பெற்றன. அதில் 76 லட்சம் மட்டுமே இழப்பீடாக தந்துள்ளன.
2017-18 நிதியாண்டில் இன்சூரன்ஸ் பிரீமியமாக ரூ.38.54 கோடி வழங்கப்பட்டது. இதில் ரூ.3.59 கோடி இழப்பீடாக தரப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் பயணிகளிடமிருந்து பிரீமியம் பெறப்படவில்லை. அதை ஐஆர்சிடிசி செலுத்தியது.
அதன் பின்னர் 2018-19 நிதியாண்டில் பயணிகளிடமிருந்து ரூ.8.53 கோடி இன்சூரன்ஸ் பிரீமியம் வசூலிக்கப்பட்டு அதிலிருந்து ரூ.6.12 கோடி இழப்பீடாகத் தரப்பட்டது.
2019-20 நிதியாண்டில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ரூ.12.71 கோடி பிரீமியம் பெற்றது. இதில் ரூ.3.53 கோடி இழப்பீடாகத் தரப்பட்டது.
ரயில் இன்சூரன்ஸ் மூலம் ரயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும், பகுதி செயலிழப்புக்கு ரூ.7.5 லட்சமும், ரூ.2 லட்சம் மருத்துவமனை செலவுகளுக்காகவும் தரப்பட்டது.
ரயில் இன்சூரன்ஸ் மூலம் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு துரதிர்ஷ்டவசமாக ஏதாவது காயம் அல்லது இறப்பு ஏற்பட்டால் உடனடியாக இந்த காப்பீடு அளிக்கப்படுகிறது.
ரயில் இன்சூரன்ஸுக்காக 45 பைசாக்களை வசூலிக்கும் இந்திய ரயில்வேக்கு இதுவரை பல கோடி ரூபாய் வருமானமாக வந்துள்ளது.
இந்த நிலையில் பயணிகள் பாதுகாப்புக்காக அனைத்து வகை நடவடிக்கைகளையும் இந்திய ரயில்வே செய்து தர வேண்டும் என்று பயணிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் இருந்து வலியுறுத்தப்படுகிறது.
story written by: Jayachandran
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications