2024 முதல் 2025-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை வருகின்ற ஜூலை 23-ஆம் தேதி அன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல இந்தியக் குடும்பங்களின் வருமானம் குறைந்து வருகிறது. சமீபத்தில் வெளியான கணக்கெடுப்பில் 2024 முதல் 2025-ஆம் நிதியாண்டில் குடும்பத்தின் வருமானம் மற்றும் சேமிப்பு குறையும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தற்போது தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் இதற்கான தீர்வு கிடைக்குமா? என்று எதிர்பார்த்து பல இந்தியக் குடும்பங்கள் காத்திருக்கின்றன.
"Local Circles" நடத்திய கணக்கெடுப்பில் பங்கேற்ற 48% பேர், 2024 முதல் 2025-ஆம் நிதியாண்டில் தங்கள் குடும்ப வருமானம் மற்றும் சேமிப்பு கடந்த 2023 முதல் 2024-ஆம் நிதியாண்டை விட குறைவாக இருக்கும் என்று கருதுகின்றனர்.

குடும்ப செலவு அதிகரிப்பு மற்றும் பிற செலவுகள் காரணமாக, குறைந்தது 15 சதவீத வீடுகளில், இந்த ஆண்டு சேமிப்பில் 25 சதவீதத்திற்கும் மேற்பட்ட வீழ்ச்சியை எதிர்பார்க்கின்றனர்.
அதே சமயம் 7% வீடுகள் 25% அல்லது அதற்கு மேற்பட்ட குடும்ப வருமானத்தில் குறைவு இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். மேலும் பல வீடுகள் தங்களுடைய சொத்துக்களை அடகு வைத்தல்,விற்பனை செய்தல், வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவதற்காக கடன் வாங்குதல் போன்ற நிதிச் சிக்கல்களைச் சந்திக்கக்கூடும் என்று கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இந்த கணக்கெடுப்பு இந்தியாவின் 327 மாவட்டங்களில் உள்ள மக்கள் பங்கேற்றனர். இதன் மூலம் லோக்கல் சர்க்கில்ஸ் 21,000 பதில்களை பெற்றது. பதில் அளித்தவர்களில் 67 சதவீதம் ஆண்கள் மற்றும் 33 சதவீதம் பெண்கள்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை வருகின்ற ஜூலை 23-ஆம் தேதி அன்று தாக்கல் செய்ய உள்ள நிலையில், வருமான வரி விகிதங்கள் குறைப்பு, வருமான வரம்பில் விரிவாக்கம், 80C பிரிவின் கீழ் வருமான வரி விலக்கை அதிகரிப்பது போன்ற சில விஷயங்களை கருத்தில் கொண்டால், இதுபோன்ற அழுத்தத்திலிருந்து பல குடும்பங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கின்றனர்.
உணவு, பள்ளிக் கல்வி, வாடகை, போக்குவரத்து, மின்சார செலவு என நடுத்தர வர்க்கக் குடும்பத்தினர் செய்யும் அடிப்படை செலவுகள் உயர்ந்து வருவது கவலை அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக, இந்தியாவில் பலருக்கு வருமானம் குறைந்து வருவதும், கையிருப்பு பணத்தை பயன்படுத்துவதற்கும், கடன் வாங்குவதற்கும், வம்சாவழி சொத்துகளை விற்பனை செய்வதற்கும் மக்கள் தள்ளப்படுகின்றனர்.
எனவே இந்த பட்ஜெட்டில் சாமானிய மக்களுக்கு ஏற்ற வகையில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வரி விலக்கு வரம்புகள் உயர்த்தப்பட்டு, வருமான வரி வரம்பு விரிவாக்கம் செய்யப்பட்டால், இது போன்ற குடும்பங்களுக்கு சற்று நிவாரணமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பட்ஜெட்டுக்கு இன்னும் ஒரே ஒரு நாள் இருக்கும் நிலையில் இதற்கான அறிவிப்புக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications