2024 ஆம் ஆண்டில் அமெரிக்க குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளனர். இந்தியாவில் இருந்து வேலைவாய்ப்பு, மேற்படிப்பு , தொழில் ஆகியவற்றுக்காக ஆயிரக்கணக்கானவர்கள் ஆண்டுதோறும் அமெரிக்கா செல்கின்றனர்.
பின்னாளில் அங்கேயே கிரீன் கார்டு பெற்று செட்டிலாகிவிடுகின்றனர். அந்த வகையில் அமெரிக்க குடிமக்கள் மற்றும் குடியேற்ற சேவை அமைப்பு சார்பாக 2024 ஆம் ஆண்டில் கிரீன் கார்டு மூலம் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி 2024 ஆம் ஆண்டில் 49, 700 இந்தியர்கள் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளனர். இதன் மூலம் அமெரிக்க குடிமக்களாக மாறிய வெளிநாட்டவர்களில் 6.1 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர். இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது மெக்சிகோ. அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களில் மெக்சிகோ நாட்டவர்கள் 13.1 சதவீதத்துடன் முதல் இடத்தில் இருக்கின்றனர்.
இது தவிர பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் 5 சதவீதம் பேரும், டொமினிகன் ரிபப்ளிக்கை சேர்ந்தவர்கள் 4.9 சதவீதம் பேரும், வியட்நாமை சேர்ந்த 4.1 சதவீதம் பேரும் 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளனர்.
ஹெச்1பி விசா உள்ளிட்ட விசாக்கள் மூலம் அமெரிக்கா செல்லும் வெளிநாட்டவர்கள் கிரீன் கார்டு பெற்று அமெரிக்க குடிமக்களாக மாற முடியும். அமெரிக்காவில் கிரீன் கார்டு எனப்படும் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு வெளிநாட்டவர்கள் பல்வேறு நிபந்தனைகளை பூர்த்தி செய்தாக வேண்டும்.
அந்த வகையில் அமெரிக்காவில் சட்டபூர்வமாக தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்திருக்க வேண்டும் ,அடிப்படை ஆங்கில அறிவு இருக்க வேண்டும், மேலும் அமெரிக்க அரசு நடத்தக்கூடிய தேர்வில் வெற்றி பெற வேண்டும் இதனை அடுத்து நேர்காணல் நடைபெறும் அதிலும் வெற்றி பெறுபவருக்கு மட்டுமே அந்நாட்டு அரசு கிரீன் கார்டு மூலம் நிரந்தர குடியுரிமை வழங்குகிறது.
இவ்வாறு குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்கள், அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த நபர்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கிறதோ அதை அனைத்தையும் பெறுகிறார்கள். 2024 ஆம் ஆண்டில் கலிபோர்னியா, புளோரிடா, நியூயார்க், டெக்சாஸ் ,நியூ ஜெர்சி, ஜார்ஜியா மற்றும் வாஷிங்டன் ஆகிய மாநிலங்களில் தான் சுமார் 70% வெளிநாட்டவர்கள் குடி அமர்ந்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டு நிலவரத்தின்படி அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களில் 10.6 மில்லியன் பேர் மெக்சிகோவை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். 2.83 மில்லியன் பேர் இந்தியர்களாகவும், 2.22 மில்லியன் பேர் சீனர்களாகவும் இருக்கின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications