மாதம் ரூ.4.5 லட்சம் வருமானம்.. 49 வயதில் அசத்தும் ரிது பன்சாலி.. அப்படி என்ன வணிகம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மற்றவர்களுக்காக வேலை செஞ்சது போதும்? நாமே ஏதாவது தனியா பண்னாலாம்னு நினைப்போம். ஆனா என்ன செய்வது என்பதில் தெளிவு இருக்காது.

 

காலம் முழுக்க வேலை செய்து செய்து சலிப்படைந்து, சொந்த தொழில் பற்றி அனுதினமும் யோசிப்போம். படிப்போம், கண் முன்னே பலரையும் பார்க்கலாம். ஆனால் பலருக்கும் வேலையா, தொழிலா என்ற குழப்பமே இருக்கும்.

குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள், வேலையின் ஸ்திரத்தன்மை என பலவும் அவர்களை யோசிக்க வைக்கும். அனுதினமும் பல வெற்றி கதைகளும் படித்து வருகிறோம்.அதுபோன்ற கதைகள் ஒரு விதமான நம்பிக்கையை கொடுத்தாலும், வேலைக்காக தொழில் என்ற ஆப்சனை விட்டு விடுங்கள்.

கூகுள்-க்கே இந்த நிலைமையா.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் டெக் உலகமே அதிர்ந்தது..! கூகுள்-க்கே இந்த நிலைமையா.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் டெக் உலகமே அதிர்ந்தது..!

வெற்றிக் கனி

வெற்றிக் கனி

உங்கள் வேலையினை விட உங்கள் தொழிலில் ஓராயிரம் பிரச்சனைகள் வரலாம். ஆக அதனை எதிர்கொண்டு சமாளித்து, மீண்டு எழுந்து வருவது தான் வெற்றியை தரும். வேலையில் ஆவது நீங்கள் மட்டுமே கஷ்டப்பட்டீர்கள். தொழில் எனும்போது குடும்பமே சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும். குடும்பமும் சேர்ந்து கஷ்டப்பட வேண்டியிருக்கும். இவற்றை தாண்டியே வெற்றி எனும் கனியை நீங்கள் ருசித்திர முடியும்.

அம்மா மகள்கள் சேர்ந்து வணிகம்

அம்மா மகள்கள் சேர்ந்து வணிகம்

அந்த வகையில் வெற்றியை எட்டிய ரிது பன்சாலியை பற்றி பார்க்கலாம். ஜெய்ப்பூரினை சேர்ந்த ரிது பன்சாலி, அவரது மகள்கள் திவா மற்றும் தியா முவரும் சேர்ந்து வெற்றி கண்டுள்ளனர். இவர்கள் எவரிதிங் மேடு மாம் (Everything Mom Made) என்ற பிராண்டின் கீழ் வணிகம் செய்து வருகின்றனர்.

எவரிதிங் மாம் மேடு
 

எவரிதிங் மாம் மேடு

கடந்த 28 ஆண்டுகளாக இல்லதரச்சியாக இருந்து வரும் ரிது பன்சாலி, 49 வயதில் சாதித்தது எப்படி?

ரிது பன்சாலி தனது மகள்கான திவா மற்றும் தியாவுடன் இணைந்து கெமிக்கல் அல்லாத இயற்கையான ஸ்கின் கேர் மற்றும் ஹேர் கேர் ஆகிய பொருட்களை தயாரித்து, இன்ஸ்டாகிராம் மூலம் எவரிதிங் மாம் மேடு என்ற பிராண்டின் கீழ் விற்பனை செய்து வருகின்றனர்.

ரூ.4.5 லட்சம் வருவாய்

ரூ.4.5 லட்சம் வருவாய்

ஜெய்ப்பூரை சேர்ந்த குடும்பம் முதன் முதலாக ஆகஸ்ட் 2020ல் தங்காளது வணிகத்தினை தொடங்கியுள்ளனர். ஆரம்பத்தில் வெறும் 21,000 ரூபாய் மூலம் தொடங்கப்பட்ட இந்த வணிகம் இன்று மாதத்திற்கு சுமார் 4.5 லட்சம் ரூபாய் வருவாயினை ஈட்டி வருகின்றது.

ரிது தனது மகள்கள் மற்றும் தான் தனது வீட்டினை அடிப்படையாக கொண்ட ஒரு வணிகத்தினை செய்ய நினைத்தபோது, இப்படி வணிகத்தினை செய்ய தூண்டியதாக கூறுகின்றனார். இன்று பல பெண்களின் எண்ணமும் இது தான். ஆனால் அதனை செயல்படுத்தியாலேயே நாம் அவரை பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம்,

எங்களின் ஊக்கம்

எங்களின் ஊக்கம்

நான் தோல் மற்றும் முடி பராமரிப்புக்காக பல வீட்டு வைத்தியங்களை செய்து வருகிறேன். இதனை எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உட்பட பலரும் விரும்புவார்கள். இது மிக பயனுள்ளதாக இருந்ததால் பலரும் என்னை பாராட்டுவார்கள். அதோடு இதனை ஏன் தொழிலாக மாற்றக்கூடாது என என்னிடம் பலரும் கேட்பார்கள். இதற்கிடையில் தான் எனது மகள்கள் என்னை எவரிதிங் மேடு மாமினை தொடங்க ஊக்கப்படுத்தினார்கள்.

அம்மாவின் அன்பு வேண்டும்

அம்மாவின் அன்பு வேண்டும்

இதில் ஆச்சரியம் என்னவெனில் பலரும் கொரோனா காரணமாக வேலையின்றி தவித்து வந்த கொரோனா காலத்தில் தான் இவரின் வணிகத்தினை செய்யத் தொடங்கியுள்ளார்.

இது குறித்து அவரது மகள் தி பெட்டர் இந்தியாவிடம் கூறிய அறிக்கையில், எனது தாயாரை வணிகம் செய்ய வற்புறுத்தியது அவரை தொழிலதிபராக மாற்ற வேண்டும் என்பது மட்டும் அல்ல, எனது அம்மா அவரது தாயாரிடம் இருந்து பெற்ற அன்பை போலவே, நானும் பெற வேண்டும்.

இயற்கையான பொருட்கள்

இயற்கையான பொருட்கள்

நான் என் கூந்தலுக்கு இயற்கையான வீட்டு வைத்தியங்களை மட்டுமே பயன்படுத்தி வருகின்றேன். தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் எதையும் பயன்படுத்துவதில்லை. இது குறித்து என் நண்பர்கள் கேட்டுகும்போது அவர்களிடம் கூறினேன். அதன் பிறகு அவர்களும் அதனை போல வேண்டும் என கேட்கத் தொடங்கினார்கள்.

எவ்வளவு கடினம்

எவ்வளவு கடினம்

படிப்பாகவும், தனது வேலைக்காகவும் வீட்டை விட்டு வெளியே இருக்கும் திவா, நான் 9 வருடங்களுக்கு மேலாக வீட்டை விட்டு வெளியே இருக்கிறேன். இதனால் தோல் மற்றும் முடிக்கான பராமரிப்பு எவ்வளவு கடினம் என தெரியும். அதிலும் இயற்கை பொருட்களாக இருக்க வேண்டும் என்பது இன்னும் கடினம். ஆக என்னை போன்ற வேறு வழி இல்லாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

இன்ஸ்டாகிராமில் வணிகம்

இன்ஸ்டாகிராமில் வணிகம்

இதுவே எங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தினை தொடங்கி அதில் நாங்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்களை பகிரத் தூண்டியது. ஏற்கனவே நாங்கள் உணவு குறிப்புகள் உள்ளிட்ட சிலவற்றை பகிர்ந்து ஒரு பக்கத்தினை உருவாக்கியிருந்தோம். அதில் அம்மாவின் ஸ்பெஷல் தயாரிப்புகளை பகிரவே பல ஆர்டர்கள் கிடைத்தன. அதன் பிறகே நாங்கள் அம்மாவிடம் கூறி நிறைய ஆர்டர்களை செய்ய வணிகமாக செய்ய தொடங்கினோம்.

நிதி சுதந்திரம்

நிதி சுதந்திரம்

தனது வணிகத்திற்கு முழுக்க முழுக்க உதவிகரமாக இருந்தது எனது மகள்களே. எல்லா புகழ்களும் எனது மகள்களுக்கே என கூறும் ரிது, எனது முதுகலை படிப்பிறகு பிறகு எனது குடும்பத்திற்காக முன்னுரிமை அளித்தேன். அப்போது நான் ஒரு தொழிலை செய்ய விரும்பவில்லை. ஆனால் இப்போது இந்த வயதில் நான் நிதி ரீதியாக சுதந்திரமாக இருக்கிறேன். உங்களிடன் ஏதேனும் திறமை இருந்தால் அதனை சரியாக பயன்படுத்துவது அவசியம் என்று கூறுகிறார்.

நிச்சயம் ரிதுவின் வெற்றி சாதிக்க வேண்டும் என நினைக்கும் பெண்களுக்கு ஒரு உத்வேகம் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

49-year-old mother, two daughters earn Rs 4.5 lakh per month: Do you know what profession?

49-year-old mother, two daughters earn Rs 4.5 lakh per month: Do you know what profession?/மாதம் ரூ.4.5 லட்சம் வருமானம்.. 49 வயதில் அசத்தும் ரிது பன்சாலி.. அப்படி என்ன வணிகம்?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X