பங்குச்சந்தை முதலீடுகளில் ஒரு நிறுவனத்தின் மீது நாம் வைக்கும் நம்பிக்கைதான் அந்த நிறுவன பங்குகளை நம்மை வாங்க வைக்கிறது. அந்த வகையில் டாடா குழுமத்தை பொறுத்தவரை முதலீட்டாளர்கள் மத்தியில் 100% நம்பிக்கையை பெற்றுள்ளது. டாடா குழும நிறுவன பங்குகள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு முதலீடு செய்யலாம் என சொல்லும் அளவுக்கு நம்பிக்கை பெற்றுள்ளது.
அப்படி டாடா குழுமத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் பங்கு கடந்த நான்கு ஆண்டுகளில் 5,000 சதவீதம் லாபத்தை பெற்று தந்துள்ளது. 18 ரூபாயில் இருந்த அந்த நிறுவனத்தின் பங்கு தற்போது 950 ரூபாய் என உயர்ந்துள்ளது.

ஏஎஸ்ஏஎல்(Automotive Stampings and Assemblies Limited - ASAL) நிறுவனம் பயணிகள் வாகனங்கள் மற்றும் வணிக ரீதியான வாகனங்கள், டிராக்டர்கள் உள்ளிட்டவற்றுக்கு தேவையான உலோக பாகங்களை உற்பத்தி செய்து வழங்குகிறது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2020 ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி 18 ரூபாய் என்ற அளவில் இருந்தது. அதுவே தற்போது 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 970 என உயர்ந்துள்ளது.
4 ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 5,075% அதிகரித்துள்ளது. இந்த நிறுவனத்தில் 2020 ஆம் ஆண்டு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் தற்போது அதன் மதிப்பு 51 லட்சம் ரூபாய் என உயர்ந்திருக்கும். இதன் சந்தை மூலதனம் 1539 கோடி ரூபாய் ஆகும். இந்த நிறுவன பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 372 ரூபாய் 52 வார கால அதிகபட்ச மதிப்பு 1084 ரூபாய். இந்த நிறுவன பங்கின் ஃபேஸ் வேல்யூ 10.
இந்த நிறுவன நிதி அறிக்கைகளை பார்க்கும்போது 2024 ஆம் நிதியாண்டில் நிறுவனம் இந்நிறுவனம் 881 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளது. அதில் 20 கோடி ரூபாய் லாபமாகும். நிறுவனத்தின் பங்குகளில் 75 சதவீதம் பிரமோட்டர்களிடமும் சில்லறை முதலீட்டாளர்கள் வசம் 24 சதவீத பங்குகளும் இருக்கின்றன.
டாடா குழுமத்திற்கு சொந்தமாக 1990 ஆம் ஆண்டு டாடா என்டர்பிரைஸ் நிறுவனத்தின் கீழ் ஜேபிஎம் டூல்ஸ் என்ற பெயரில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு இதன் பெயர் ஏஎஸ்ஏஎல் என மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிறுவனம் மகாராஷ்டிரா, குஜராத், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் நான்கு உற்பத்தி ஆலைகளை வைத்து செயல்படுத்தி வருகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications