இந்திய வர்த்தகச் சந்தையில் இதுவரையில் எந்தொரு நிறுவனமும் எதிர்கொள்ளாத கடுமையான பிரச்சனைகளை அதானி குழுமம் எதிர்கொண்டது. ஹிண்டன்பர்க் விகாரத்தில் மட்டுமே சுமார் 100 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை அதானி குழுமம் இழந்தது, ஆனால் கடந்த 2 வாரத்தில் அடுத்தடுத்து வந்த 2 இரு அறிவிப்புகள் அதானி குழுமத்தின் தலையெழுத்தை மாற்றியுள்ளது.
இதன் வாயிலாகக் கௌதம் அதானி மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தைத் துவங்கியுள்ளார், அதானி குழுமம் அடுத்த பத்து ஆண்டுகளில் மொத்தம் 100 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ஹிண்டன்பர்க் பிரச்சனையில் இழந்ததை எவ்வளவு வேகமாக மீட்டுக் கொண்டு வர முடியுமோ அதைச் செய்துள்ளது.

இதேபோல் இந்த முதலீடு இக்குழுமத்தின் அனைத்து நிறுவனங்களிலும் இருந்தாலும், தற்போது ஐந்து நிறுவனங்கள் முக்கியக் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் 2070 ஆம் ஆண்டுக்குள் அதானி குழுமம் 5 முக்கியமான நிறுவனத்தில் கார்பன் வெளியேற்றத்தை நெட் ஜீரோ இலக்கை அடைய உள்ளதாக அறிவித்துள்ளது.
உலகளவில் கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த அதிகப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் வேளையிலும், வெளிநாட்டு பெரும் முதலீட்டாளர்கள் நெட் ஜீரோ இலக்கை நோக்கிப் பயணிக்கும் நிறுவனத்தில் அதிகப்படியான முதலீடும் செய்யும் நிலை தற்போது உருவாக்கியுள்ளது. இதன் மூலம் அதானி குழுமம் தனது வர்த்தகத்தில் அதிகப்படியாகக் கிரீன் எனர்ஜியை பயன்படுத்துவதற்கு மாற முடிவு செய்துள்ளது.
அதானி குழுமத்தின் துறைமுகங்கள், எரிசக்தி, சிமெண்ட் மற்றும் மின்சாரம் எனப் பல துறையில் முன்னிலையில் இருக்கும் அதானி குழுமம், 2030 ஆம் ஆண்டுக்குள் 100 மில்லியன் மரங்களை நடுவதற்கு உறுதியளித்துள்ளதாக இக்குழுமம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி, அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ, ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகியவை 2050ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தில் இருந்து விடுபட இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. 2070ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தில் நெட் ஜீரோ அளவை அடைய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இதனால் இந்த 5 நிறுவனங்களும் சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகப்படியான கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் அதானி குழுமம் தனது போக்குவரத்து சேவைக்காக ஹைட்ரஜென் பியூயல் செல் மூலம் இயங்கும் கனரக வாகனங்களைப் பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளது, இதற்காக அசோக் லேலாண்ட் மற்றும் பலார்ட் பவர் ஆகிய நிறுவனங்கள் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது அதானி குழுமம்.


Click it and Unblock the Notifications