அதானி குழுமத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தற்போது மூடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் நிறுவனர் நேத்தன் ஆண்டர்சன் இந்த முடிவை அறிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், கார்ப்பரேட் துறையில் நடக்கும் முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததில் முக்கிய பங்கு வகித்து வந்தது. ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் 1937 ஆம் ஆண்டில் நியூ ஜெர்சியில் தீப்பிடித்து விபத்துக்குள்ளான ஹிண்டன்பர்க் விமானத்தின் பெயரில் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து உலகெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல், கார்ப்பரேட் துறையில் நடக்கும் முறைகேடுகளை வெளிப்படுத்தி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிறுவனமாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் விளங்கியது. இப்படி இந்த நிறுவனத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட 5 வெளிநாட்டு நிறுவனங்களை தான் இப்போது பார்க்கப்போகிறோம்
2020ல் Nikola corporation: நிக்கோலா கார்ப்பரேஷன் என்ற எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர் நிறுவனத்தின் மீதும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. நிறுவனத்தின் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதாகவும், தனது வாகனத்தின் செயல்திறனை மிகைப்படுத்தி காட்டியதாகவும் நிக்கோலா கார்ப்பரேஷன் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து நிக்கோலா நிறுவனர் டிரெவோர் மில்டன் மோசடி குற்றத்திற்காக 2022 ஆம் ஆண்டில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.
2023ல் Icahn Enterprises: ஐகான் என்டர்பிரைசஸ் எல்.பி. (IEP) நிறுவனத்தின் மீதும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் கடுமையான அறிக்கையை வெளியிட்டது. நிறுவனம் தனது ஹோல்டிங் அளவுகளை மிகைப்படுத்தி மதிப்பிட்டுள்ளது மற்றும் ஈவுத்தொகை வழங்குவதற்கு "பொன்சி திட்டம்" போன்ற முறையை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த அறிக்கையைத் தொடர்ந்து ஐகான் என்டர்பிரைசஸ் பங்குகள் விலை வீழ்ச்சியடைந்தன. பில்லியனர் முதலீட்டாளர் கார்ல் ஐகான் இந்த குற்றச்சாட்டுகளை வன்மையாக மறுத்து, ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கை "சுயநலத்துடன்" எழுதப்பட்டது என குற்றம் சாட்டினார்.
2023ல் Block Inc: ட்விட்டர் நிறுவனர் ஜாக் டோர்சியால் நிறுவப்பட்ட ப்ளாக் இன்க். நிறுவனத்தின் மீதும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. ப்ளாக் இன்க். நிறுவனம் தனது பயனர் எண்ணிக்கையை மிகைப்படுத்தி காட்டி, வாடிக்கையாளர் ஈர்ப்பு செலவுகளை குறைத்து மதிப்பிட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த அறிக்கையைத் தொடர்ந்து ப்ளாக் இன்க். நிறுவனம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தது.
2022ல் J&J Purchasing: ஜே&ஜே பர்ச்சேசிங் என்ற நிறுவனம் நடத்திய பெரும் மோசடி திட்டத்தை ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கண்டறிந்தது. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ரகசியமாக பதிவு செய்யப்பட்ட வீடியோக்களைப் பயன்படுத்தி இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணை முக்கியமான பங்கை வகித்ததால், மோசடி திட்டத்தில் ஈடுபட்ட முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
2023ல் Adani Group: அதானி குழுமத்தின் மீது "கார்ப்பரேட் வரலாற்றில் மிகப்பெரிய மோசடி" என குற்றம் சாட்டிய ஹிண்டன்பர்க் அறிக்கை நிறுவனத்தின் அறிக்கை அதன் பங்கு மதிப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதானி குழுமம் இந்த குற்றச்சாட்டுகளை வன்மையாக மறுத்த போதிலும், இந்த அறிக்கை குழுமத்தின் நிதி நடவடிக்கைகள் குறித்து தீவிரமான விசாரணை செய்ய உத்தரவிடும் நிலை உருவானது.
2024ல் SEBI: ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் இந்தியாவின் பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் (SEBI) தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. அதானி குழுமத்தின் நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் இவர்கள் பங்குதாரர்களாக இருந்ததாகவும், இதனால் முரண்பாடு நிலவுகிறது எனவும் குற்றம் சாட்டப்பட்டது.ஆனால் இதையும் மாதபி புரி புச் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications