இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோவின் தலைமை செயல் அதிகரியாக பதவி வகித்து வந்த தியரி டெலாபோர்ட் திடீரென பதவி விலகியது தான் தற்போது ஐடி உலகின் பரபரப்பான விஷயமாக உள்ளது.
விப்ரோ நிறுவனம் பல்வேறு பிரச்னைகளில் சிக்கி இருந்த நிலையில் கடந்த மே 2020இல் தியரி டெலாபோர்ட் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகளுக்கு அதாவது ஜூலை 2025 வரை அவர் பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தன்னுடைய பதவி காலம் முடிவதற்கு முன்பே அவர் ராஜினாமா செய்துவிட்டார்.

தியரி டெலாபோர்ட் திடீரென பதவி விலக என்ன காரணமாக இருக்கும், நிறுவனத்தின் தரப்பில் அவர் தனது சொந்த முயற்சிகளை தொடர் வெளியேறுகிறார் என கூறப்பட்டாலும், உண்மையில் என்ன காரணமாக இருக்கும் என்பதை முதலீட்டு சந்தையின் பார்வையில் கவனித்தால் 5 முக்கியமான காரணங்கள் தெரிகிறது.
சரிவுப் பாதையில் விப்ரோ: விப்ரோ நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து சரிவிலேயே இருக்கிறது. சந்தை மூலதனத்தின் அடிப்படையில் மூன்றாம் இடத்தில் இருந்த விப்ரோ, நான்காவது இடத்திற்கு சரிந்தது. அதேபோல பல ஆண்டுகளாக விப்ரோ நிறுவனம் வருவாய் அடிப்படையில் இந்தியாவின் மூன்றாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக இருந்த நிலையில் அந்த இடமும் பறிபோனது. தொடர்ந்து நான்காவது காலாண்டாக நிறுவனத்தின் லாபம் சரிவிலேயே இருக்கிறது. நிறுவனத்தின் வளர்ச்சியும் ஆண்டுக்கு ஆண்டு விகிதத்தில் 12 சதவீதம் குறைந்துள்ளது. நிறுவன வளர்ச்சி சதவிகிதமும் 1.5%இல் இருந்து 0.5% ஆக குறைக்கப்பட்டது.
உயர் பதவியில் இருந்த பலர் விலகல்: இந்த நிறுவனத்தின் உயர் மட்ட பதவியில் இருந்த பலரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பதவி விலகியுள்ளனர். 2023இல் மட்டும் சிறப்பு வளர்ச்சி அதிகாரி ஸ்டெபானி டிராவட்மேன், சிறப்பு நிதி அதிகாரி ஜதின் தலால், இந்தியாவிற்கு தலைமை வகித்த சத்யா ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் பதவி விலகிவிட்டனர். நிறுவனத்தை மறுசீரமைக்க டெலாபோர்ட் எடுத்த நடவடிக்கைகளும் மூத்த அதிகாரிகள் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடு நாட்டு தலைமையால் ஏற்பட்ட குழப்பம்: தலைமை செயல் அதிகாரியாக இருந்த டெலாபோர்ட் பாரீஸை சேர்ந்தவர், அதே வேளையில் விப்ரோவின் தலைமை பொறுப்பு வகித்த பலரும் இந்தியாவை சேர்ந்தவர்கள், முன்னாள் வளர்ச்சி அதிகாரி ஸ்டெபானி வேறு இடத்தில் இருந்தார். தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் வெவ்வேறு பகுதிகளில் இருந்ததால் ஒருங்கிணைப்புடன் நிறுவனத்தை நடத்த முடியவில்லை என சொல்லப்படுகிறது.
அசிம் பிரேம்ஜிக்கு ஏற்பட்ட அதிருப்தி: டெலாபோர்ட்டின் செயல்பாடுகள் விப்ரோ நிறுவனர் அஸீம் பிரேம்ஜிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டெலாபோர்ட் வருகைக்கு பின், மூத்த அதிகாரிகள் பணி விலகியது அவருக்கு எரிச்சலை தந்திருக்கிறது.
தலைமையகத்தில் இல்லாத சிஇஓ: டெலாபோர்ட் பாரீஸில் இருந்தபடியே தன்னுடைய நிறுவன செயல்பாடுகளை மேற்கொண்டார். பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இந்த ஐடி நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என்பதால் அவர் அங்கேயிருந்த பணி செய்தது உதவியாக இருந்திருக்கும்.
ஆனால் நிறுவன தலைமையகத்துக்கு வராமல் செயல்பட்டதாக மூத்த அதிகாரிகளின் ஒத்துழைப்பு அவருக்கு கிடைக்காமல் போய்விட்டது.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications