பாலிவுட் நடிகைகளின் ஜிகு ஜிகு வாழ்க்கை.. கைநிறைய சம்பளம் வந்தால் இப்படி தான் பண்ணுவாங்க..!!

நல்லா சம்பாதிக்கணும், ஆடம்பரமா செலவு செய்யணும், ஜாலியாக வாழணும் இதுதான் நம்ம பாலிவுட் பிரபலங்களின் லைப்ஸ்டைல். கஷ்டப்பட்டு உழைத்தாலும் இஷ்டப்பட்ட பொருட்களை வாங்குவதில் இருக்கும் இன்பமே அலாதி. இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் யாரும் சளைத்தவர்கள் அல்ல.

அந்த வரிசையில் இந்த ஆண்டில் மிகக் காஸ்ட்லியான சொகுசு கார்களை வாங்கிய ஐந்து நடிகைகள் பற்றி பார்க்கலாம்.

பாலிவுட் நடிகைகளின் ஜிகு ஜிகு வாழ்க்கை.. கைநிறைய சம்பளம் வந்தால் இப்படி தான் பண்ணுவாங்க..!!

ஆலியா பட்: ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி பட அறிமுக விழாவுக்கு வந்திருந்த நடிகை ஆலியா பட் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் புதியதொரு உபெர்-லக்சூரியஸ் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி மாடல் காரை வாங்கியுள்ளார். இந்த புதிய காரை ரூ.3.2 கோடிக்கு வாங்கியுள்ளார்.

லாங் வீல் மாடலான இந்த ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரின் நிறம் கார்பாதியன் கிரே. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ஆலியா பட்டின் கணவரான நடிகர் ரண்பீர் கபூரும் இதே மாடல் காரை கடந்த ஆண்டு வாங்கினார். ரண்பீர் கபூரின் கார் நிறம் பெல்கிரேவியா கிரீன் ஷேடு.

இந்த எஸ்யூவி கார் 3.3லி ஆறு சிலிண்டர் பெட்ரோல் 400hp, 3.0லி ஆறு சிலிண்டர் டீசல் 350hp, 4.4லி ட்வின் டர்போ வி8 பெட்ரோல் இஞ்சின் 530hp திறன் கொண்ட மூன்று மாடல்களில் கிடைக்கிறது. எல்லா இஞ்சின்களும் பிரமாதமான டார்க் விசையைக் கொண்டவை.

ஆலியா பட் வாங்கியுள்ள Land Rover's Pivi Pro OS காரில் 13.1 இஞ்சி டச்ஸ்கிரீன், 35-ஸ்பீக்கர் மெரிடியன் சவுண்டு சிஸ்டம், டிஜிட்டல் எல்இடி ஹெட்லைட்டுகள், பனோரமிக் சன்ரூஃப், ஹீட்டடு/வென்டிலேட்டடு/மசாஜிங் சீட்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பூஜா ஹெக்டே: ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி காரில் - SE, HSE, Autobiography, First Edition, Bespoke SV என ஐந்து மாடல்கள் உள்ளன. இதில் பூஜா ஹெக்டே வாங்கியுள்ள ரேஞ்ச் ரோவர் கார் டாப் எண்டு மாடலான எஸ்வி ஆகும். அதன் நிறம் பிரீமியம் பாதுமி கோல்டு. பூஜா வாங்கியுள்ள காரின் விலை ரூ.4 கோடி ஆகும்.

மற்ற எஸ்யூவி மாடல்களைப் போலவே இந்த காரிலும் 13.1 இஞ்ச் Pivi Pro இன்போடைன்மென்ட் சிஸ்டம், 1300W மெரிடியன் சவுண்டு சிஸ்டம், ஃபோர் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா சிஸ்டம், சன்ரூஃப், மசாஜ் செய்யும் வசதியுடனான வென்டிலேட்டடு சீட் பொருத்தப்பட்டுள்ளது.

ஷ்ரத்தா கபூர்: நடிகை ஷ்ரத்தா கபூர் ஒரு சிவப்பு நிற லம்போர்கினி ஹுராகேன் டெக்னிகா காரை தசரா பண்டிகையன்று வாங்கினார். இந்தக் காரின் விலை ரூ.4.8 கோடி ஆகும்.

லம்போர்கினி ஹுராகேன் டெக்னிகா காரில் 5.2 லி சக்தி வாய்ந்த வி10 இஞ்சினும், 640 ஹார்ஸ்பவர் மற்றும் 565Nm டார்க் விசைத் திறனும், 3.2 நொடிகளில் மணிக்கு ஜீரோ டு 100 கிலோ மீட்டர் வேகம் செல்லும் அம்சங்கள் உள்ளன. இந்தக் காரின் உச்சபட்ச வேகம் மணிக்கு 325 கிலோ மீட்டர் ஆகும்.

ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ்: நடிகை ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் தனது கேரேஜில் புதிதாக ஒரு பிஎம்டபிள்யூ ஐ7 எலக்ட்ரிக் செடான் மாடல் காரை வாங்கி நிறுத்தியுள்ளார். இதன் விலை ரூ.2 கோடி ஆகும்.

இந்த பிஎம்டபிள்யூ ஐ7 காரில் இரட்டை எலக்ட்ரிக் மோட்டார்கள், 544 ஹார்ஸ்பவர் மற்றும் 745Nm டார்க் விசைத் திறனை கொண்டுள்ளது. 4.7 நொடிகளில் மணிக்கு ஜீரோ டு 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டக்கூடிய சக்தி படைத்த கார் இது. இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 239 கிலோ மீட்டராகும்.

இந்தக் காரில் 31.3 இஞ்ச் ஸ்கிரீன் அதன் ரூஃபில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் அமெசான் ஃபயர் டீவி மூலம் விடியோக்களை பார்த்து ரசிக்கலாம். இத்துடன் 14.9 இஞ்ச் டச்ஸ்கிரீன், 24 ஸ்பீக்கர்கள், சன்ரூஃப், எல்இடி ஹெட்லைட்டுகள், ஃபோர் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், ஹீட்டடு மற்றும் வென்டிலேட்டடு சீட்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ரகுல் பிரீத் சிங்: நடிகை ரகுல் பிரீத் சிங் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு புத்தம் புதிய மெர்ஸீடஸ் மேபேக் ஜிஎல்எஸ்600 எஸ்யூவி காரை வாங்கியுள்ளார். இதன் விலை ரூ.3 கோடி ஆகும்.

இந்த மெர்ஸீடஸ் மேபேக் ஜிஎல்எஸ்600 எஸ்யூவி காரில் 4.0லி வி8 இஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் 557 ஹார்ஸ்பவர் மற்றும் 730 Nm டார்க் விசையைக் கொண்டுள்ளது. லெதர் சீட்கள், பனோரமிக் சன்ரூஃப், சிறிய பிரிட்ஜ், எட்டு ஏர்பேக்குகள், ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+