இந்திய பங்குச் சந்தை கடந்த ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிட்ட நாளில் பெரும் சரிவை சந்தித்தது. இதேவேளையில் ஜூன் 3ஆம் தேதி எக்சிட் போல் பிஜேபி-க்கு சாதகமாக இருந்த காரணத்தால் உள்நாட்டு முதலீட்டாளர்கள் முதல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரையில் அதிகப்படியான தொகையை முதலீடு செய்தனர்.
ஆனால் அடுத்த நாள் தேர்தல் முடிவுகளில் பிஜேபி பெரும்பான்மையை இழந்து கூட்டணியில் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. இதனால் ஜூன் 4 ஆம் தேதி சென்செக்ஸ் வரலாறு காணாத விதமாக 6100 புள்ளிகள் வரையில் சரிந்தது.

இதன் காரணமாக, 5 கோடிக்கும் மேற்பட்ட இந்தியக் குடும்பங்கள் சுமார் ரூ.30 லட்சம் கோடி வரை இழப்பைச் சந்தித்ததாகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
முதலீட்டாளர்கள் ரூ.30 லட்சம் கோடியை இழக்க மிக முக்கியமான காரணம் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது குறித்துத் தேர்தலுக்கு முன்பு அளித்த பேட்டியில் கொடுத்த ஆலோசனைகளைக் குறித்து ராகுல் காந்தி சரமாரியாகக் கேள்வி எழுப்பி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி 4 முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார்:
1. பங்குச் சந்தை முதலீடு குறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஏன் ஆலோசனை வழங்க வேண்டும்? பொதுவாக, பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தனிப்பட்ட நிதியியல் முடிவு. இது குறித்து நிபுணர்களின் ஆலோசனை பெறுவது அவசியம். ஆனால், அரசியல் தலைவர்கள் இது போன்ற முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவது பொருத்தமானதா என்ற கேள்வி எழுப்பினார்.
2. பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் இருவரும் ஒரே ஊடக நிறுவனத்திற்கே ஏன் பேட்டி அளித்தனர்? குறிப்பாக, இந்த ஊடக நிறுவனம் செபி (SEBI) விசாரணையில் உள்ள அதே தொழில் குழுமத்தைச் சேர்ந்தது. அந்த குழுமம் பங்குச் சந்தையை ஏமாற்றியதாகச் செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இது, கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
3. பாஜக கட்சிக்கும், போலி எக்சிட் போல் வாக்கு எண்ணிக்கைக்கும் , சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் இடையே என்ன தொடர்பு உள்ளது? எக்சிட் போல் வாக்கு எண்கள் அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே முதலீடு செய்த இந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரும் லாபம் ஈட்டியுள்ளனர். அதே நேரத்தில், 5 கோடி குடும்பங்கள் இழப்பு அடைந்துள்ளன. இதற்குப் பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.
4. இந்த மிகப்பெரிய பங்குச் சந்தை சரிவு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு (JPC - Joint Parliamentary Committee) விசாரணை கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சரிவில் நடந்த முறைகேடுகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.
இப்படி பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது குறித்து தேர்தலுக்கு முன்பு அளித்த பேட்டியில் என்ன கூறினார்கள் தெரியுமா..?
அதானி குழுமத்திற்கு சொந்தமான NDTV தொலைக்காட்சியில் இந்த மோடி மற்றும் அமித் ஷா பேட்டி ஓளிப்பரப்பு செய்யப்பட்டது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications