வரம்புகளுக்கு மீறி வருவாய் வந்தால் கட்டாயம் வருமான வரி வரும். அதேவேளையில் சில சம்பாத்தியங்களுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு தரப்படுவதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் எந்த வருமானமும் வரியற்ற வருமானம் எனப்படும். ஒரு நிதியாண்டில் ஒரு தனிநபரின் மொத்த வரிப் பொறுப்பைக் கணக்கிடுவதில் இருந்து இந்த வருவாய்கள் முற்றிலும் விலக்கப்பட்டுள்ளன. அது எப்படி என்று பார்க்கலாம்.

வருமான வரிக் கணக்கை (ITR) சமர்ப்பிப்பதற்கான ஜூலை 31 காலக்கெடு கடந்துவிட்டது. வரி செலுத்துவோர் தங்கள் டிடிஎஸ் பணத்தைத் திரும்பப் பெறக் காத்திருக்கின்றனர். பல தனிநபர்கள் வரி விதிக்கப்படாத சில வருமானங்களைப் பற்றி இன்னும் அறிந்திருக்க மாட்டார்கள். இந்த வருமான ஆதாரங்களுக்கு வரியே இல்லை.
உங்கள் ஐடிஆரில் இந்த வருமானங்களைச் சேர்ப்பது அவசியம், ஏனெனில் இது உங்கள் நிதி நிலைக்கான சரியான ஆதாரத்தை அதிகாரிகளுக்குக் காண்பிக்கவும் மற்றும் விலக்குகளைப் பெறவும் உதவுகிறது.
இந்த வருமானங்கள், குறிப்பாக சுகன்யா சம்ரித்தி திட்டம் போன்ற முதலீட்டுத் திட்டங்களில் அதிக வரியைச் சேமிக்கும் வகையில் முதலீடுகளைச் செய்ய உதவும்.
எந்தெந்த வருமானங்கள் வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் உங்கள் ITR ஐ பிழையில்லாமல் தாக்கல் செய்து, தேவையற்ர வரிச்சுமையைக் குறைக்கலாம்.
வரி விதிக்கப்படாத வருமானத்தின் வகைகள்-
1. பரிசுகள்/பரம்பரை சொத்து: வரி செலுத்துவோர் உறவினர்களிடமிருந்து அன்பளிப்புகள் அல்லது வருமானத்தைப் பெற்றால், அது பொதுவாக வரிக்குரிய வருமானமாக கருதப்படாது. உறவினர் வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால் விதி விலக்குகள் உள்ளன.
உறவினர்கள் அல்லாதவர்களிடமிருந்து பெறப்படும் பரிசுகளின் மதிப்பு 50,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால் மட்டுமே விலக்கு அளிக்கப்படுகிறது. வரி செலுத்துபவரின் திருமணத்தின் போது அதே பரிசு பெறப்பட்டால், அது வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
2. ஆயுள் காப்பீட்டு வருமானம்: ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் முதிர்வு முடிந்தவுடன் பெறப்படும் வருமானம், இறப்பு நன்மை உட்பட, வரி விதிக்கப்படாது. காப்பீட்டுத் தொகையின் விஷயத்தில் இது மாறுபடலாம்.
3. விவசாய வருமானம்: வருமான வரிச் சட்டத்தின் 10(1) பிரிவின் கீழ், விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் வரிக்கு உட்பட்டது அல்ல. கோழி மற்றும் மாடு வளர்ப்பு மூலம் கிடைக்கும் வருமானத்துக்கும் வரி விலக்கு உண்டு.
4. கிராஜுட்டி அல்லது பணிக்கொடை: நிறுவனத்துக்ற்கு அர்ப்பணிப்பு மற்றும் நீண்டகால சேவைக்காக பணியாளர்கள் பெறும் தொகை கிராஜுவிட்டி எனப்படும். அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை, பணிக்கொடைத் தொகை முற்றிலும் வரிவிலக்கு பெறுகிறது. 1972 இன் பணிக்கொடைச் சட்டத்தின் கீழ் உள்ள அரசு சாரா ஊழியர்களுக்கு, 10 லட்ச ரூபாய்க்கு குறைவாக இருந்தால் வரி விலக்கு அளிக்கப்படும். பணிக்கொடைச் சட்டத்தின் கீழ் ஒரு ஊழியர், ஒரு நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு பணிக்கொடையைப் பெறத் தகுதியுடையவர்.
5. குறிப்பிட்ட வருமானத்தின் மீதான வட்டி: சுகன்யா சம்ரித்தி திட்டம், தங்க வைப்புப் பத்திரங்கள் மற்றும் வரியில்லா உள்கட்டமைப்புப் பத்திரங்கள் போன்ற சில திட்டங்களில் பெறப்படும் வட்டிக்கு வரி பொறுப்புகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications