வீட்டிலிருந்தே செய்யக்கூடிய 5 ஆன்லைன் பிசினஸ் ஐடியாக்கள்! ட்ரிக்கை தெரிஞ்சிகிட்டா பணம் கொட்டும்!

இன்றெல்லாம் நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் சுயமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். அதற்கு ஏற்ப அதிவேகமாக வளரும் டிஜிட்டல் உலகில் பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. ஆனால் அனைவரும் அது குறித்து அறிந்து வைத்திருப்பதில்லை. இந்தப் பதிவில் பட்டப்படிப்புகள், விசேஷத் திறமைகள் அல்லது தொழில்நுட்ப அறிவு போன்றவை இல்லாமல் எப்படி பணம் சம்பாதிக்கலாம்? என்பது குறித்து தான் பார்க்க போகிறோம். இதற்கு ஒரு ஸ்மார்ட் போன் மற்றும் நேரம் இருந்தால் போதும் எளிதாக வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம்.

ஆன்லைன் விண்ணப்பங்களுக்கு உதவி செய்தல்: கிராமப்புறங்களில் வசிக்கும் பலர் பான் கார்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் அரசாங்கத் தேர்வுகள் போன்றவற்றுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நகரங்களை நோக்கி செல்கின்றனர். ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்தாலும் அவற்றை பயன்படுத்தி இது போன்ற விண்ணப்பங்களுக்கு விண்ணப்பிப்பது அனைவராலும் முடியாத ஒன்றாக உள்ளது. அப்படி இருக்கையில் இதையே நீங்கள் வருமானம் ஈட்ட பயன்படுத்தலாம். இது போன்ற நபர்களை குறி வைத்து உதவி செய்து, அவர்களுக்காக விண்ணப்பித்து நீங்கள் எளிதில் பணம் சம்பாதிக்க முடியும். இதற்கு ஒரு லேப்டாப் அல்லது மொபைல் மற்றும் இன்டர்நெட் வசதி இருந்தால் போதும். ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை எளிதாக சம்பாதிக்கலாம். இது போன்ற சேவைகளுக்கு தொடர்ந்து தேவை இருந்து கொண்டே இருக்கும்.

வீட்டிலிருந்தே செய்யக்கூடிய 5 ஆன்லைன் பிசினஸ் ஐடியாக்கள்! ட்ரிக்கை தெரிஞ்சிகிட்டா பணம் கொட்டும்!

டெலிவரி சேவை: ஒவ்வொரு ஊருக்கும் பிரத்தியேகமாக டெலிவரி சேவைகளை சில நிறுவனங்கள் வழங்குகின்றன. அப்படி இருக்கையில் இது போன்ற நிறுவனங்களுடன் சேர்ந்து கொண்டு பால், மளிகை பொருட்கள், உணவு போன்ற தினசரி தேவை இருக்கும் பொருட்களை வாட்ஸ்அப் மூலம் ஆர்டர் பெற்று டெலிவரி செய்யலாம். ஒரு ஆர்டருக்கு 10 முதல் 50 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இதற்கு எந்த முதலீடும் தேவையில்லை. சிறப்பு திறன்கள் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதுவும் எளிதில் பணம் சம்பாதிக்கக் கூடிய வழிகளில் ஒன்றாகும்.

ட்ரெண்டிங் செய்திகள் குறித்த ஷார்ட் வீடியோக்கள்: தற்போது பலரும் சோசியல் மீடியா தளங்களை அதிக அளவில் ஆர்வத்துடன் பார்க்கத் தொடங்கியுள்ளனர். அப்படி இருக்கையில் ட்ரெண்டிங் செய்திகள் குறித்த 30 வினாடி வீடியோக்களை உருவாக்கி பகிரலாம். கேன்வா போன்ற எடிட்டிங் தளங்களை அதற்காக பயன்படுத்தலாம். வீடியோக்களுக்கு இன்னும் மெருகேற்ற நினைத்தால் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குரல் கொடுக்கலாம். உங்கள் முகத்தை காட்டாமல் யூடியூப் ஷார்ட்ஸ்ஸில் இவற்றை பதிவிட்டு வரலாம். உங்களுடைய வீடியோக்களுக்கு பார்வையாளர்கள் வரத் தொடங்கினால் அதன் மூலம் நல்ல வருமானம் ஈட்ட முடியும். தொடர்ச்சியாக பதிவுகள் போட்டால் உங்களுடைய வருமானம் அதிகரிக்கும்.

Take a Poll

அமேசான் அல்லது பிளிப்கார்ட்டில் மறு விற்பனை செய்யலாம்: அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற பிரபல ஈ-காமெர்ஸ் தளங்களில் விற்பனையாளராக பதிவு செய்து பொருட்களை வாங்கி மறு விற்பனை செய்ய முடியும். ஒவ்வொரு ஆர்டருக்கும் இதன் மூலம் கமிஷன் கிடைக்கும்.

ஃப்ரீலான்சிங்: ஃப்ரீலான்சர் போன்ற தளங்களில் வீட்டிலிருந்து வேலை செய்து பணம் சம்பாதிக்கலாம். நீங்கள் செய்யும் வேலையைப் பொறுத்து வருமானம் கிடைக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+