சென்னை: இதுவரை இந்தியாவில் மில்லியன் கணக்கான நபர்கள் வீட்டுக் கடனை பெற்றுள்ளனர். அதில் நீங்களும் ஒருவராக இருந்தால், இந்தக் கட்டுரை உங்களுக்காக தான். வீட்டுக் கடன்களின் வட்டி விகிதம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த அதிகரித்துக் கொண்டிருக்கும் வட்டி விகிதங்களை சமாளிப்பதற்கு பல வழிகள் உள்ளது. உங்கள் வீட்டுக் கடனை சீக்கிரம் குறைப்பதற்கான 5 வழிகளைப் பார்ப்போம்.
ஹோம் லோன் ட்ரான்ஸ்ஃபர்: ஹோம் லோன்களின் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதத்தை பொருத்து மாறுபடலாம். எனவே நீங்கள் தற்போது செலுத்தி வரும் வட்டி விகிதத்தை விட குறைவான வட்டி விகிதத்தில் பிற நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகள் வீட்டுக் கடன்களை வழங்கினால், ஹோம் லோன் ட்ரான்ஸ்பர் செய்வது குறித்து பரிசீலிக்கலாம். ஆனால் அதிக அளவில் வட்டி விகிதத்தில் வேறுபாடு இருந்தால் மட்டுமே இதனை செய்யவும். ஏனெனில் பிராசசிங் கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்கள் அனைத்தையும் சேர்த்து, நீங்கள் தற்போது செலுத்தும் வட்டி விகிதமும் மாற்றிய வங்கியின் வட்டி வீதமும் ஒரு சில நேரங்களில் ஒன்றாக இருப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு.

உங்கள் வீட்டுக் கடனின் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்துங்கள்: உங்களுடைய வீட்டுக் கடனின் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்துவதன் மூலம், உங்கள் அசல் தொகையை குறைக்க முடியும். மேலும் கடனின் கால அளவைக் குறைக்க இது உதவுகிறது. பணப்பற்றாக்குறை காரணமாகத்தான், வீட்டு கடன்களையே வாங்கி இருப்போம். ஆனால் எப்படி முன்பணம் செலுத்துவது என்று நீங்கள் கேட்பது கேட்கிறது.
திடீரென்று உங்களுக்கு போனஸ் வந்தாலோ அல்லது பிற முதலீட்டு திட்டங்களின் காலம் முதிர்வு பெற்றாலோ, அதில் வரும் தொகையிலிருந்து நீங்கள் முன் பணம் செலுத்தலாம். சிலர் இது போன்ற திட்டங்களில் இருந்து வரும் தொகையை வைத்து திரும்பவும் ஏதேனும் திட்டங்களில் முதலீடு செய்வது அல்லது நகைகளை வாங்குவது போன்றவற்றை செய்வார்கள். இது போன்ற செயல்களும் நல்லது தான். ஆனால் வங்கிகளின் வட்டி விகிதத்தை பார்க்கும் போது முதலில் வாங்கிய கடன்களை அடைப்பது நிதி சுமை ஏற்படாமல் இருப்பதற்கு உதவும்.
நீண்ட காலத்திற்கு EMI செலுத்துதல்: நீண்ட காலத்திற்கு EMI செலுத்துவது, நீங்கள் EMI செலுத்தும் தொகையைக் குறைப்பது போல தோன்றலாம். ஆனால் இங்கு தான் பிரச்சனை உள்ளது. நீண்ட நாட்களுக்கு EMI செலுத்துவது வட்டியை அதிகரிக்கலாம். ஆகையால் உங்களின் கடன் அளவை பொறுத்து எவ்வளவு குறுகிய காலத்தில் EMI செலுத்த முடியும் என்பதை கவனியுங்கள். ஆனால் நீங்கள் EMI செலுத்தும் போது அதிக தொகை தேவைப்படலாம். ஆனால் இதன் மூலம் உங்களுடைய வீட்டுக் கடன் சீக்கிரம் முடிந்துவிடும். மேலும் வட்டியும் குறைவாகவே இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வீட்டுக் கடன் EMI கால்குலேட்டரைப் பயன்படுத்தவும்: வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் போன்ற ஆன்லைன் டூல்களை பயன்படுத்துவதன் மூலம், வட்டி விகிதங்கள், கடன் தொகைகள் மற்றும் தவணைக்காலங்களில் ஏற்படும் மாற்றங்கள் உங்களுடைய EMI-களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிந்து கொள்ள முடியும். மேலும் உங்களுடைய EMI தொகையை கணக்கிடவும் பயன்படுத்தலாம். உங்களுடைய கடன் தொகை, வட்டி விகிதம், தவணைக்காலம், ஆகியவற்றை என்டர் செய்து தகுந்த விவரங்களைப் பெறலாம்.
மாதாந்திர EMI உடன் கூடுதல் தொகையை வரவு வைக்கவும்: நாம் அனைவரும் செய்யும் தவறுகளில் ஒன்று மாதம் EMI செலுத்த சரியான தொகையை மட்டும் எடுத்து வைப்பது. மாறாக மாதம் உங்களால் முடிந்த 3000 முதல் 5000 ரூபாய் தொகையை கூடுதலாக அசலில் வரவு வைத்து வர உங்களின் EMI சீக்கிரம் முடியலாம்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications