சமீபத்தில் இளம் தொழிலதிபர்கள், இளம் ஊழியர்கள் மத்தியில் இதய நோய் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது, இதற்கு முக்கிய காரணமாக மன அழுத்தம் மற்றும் உணவு முறையை முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அனைத்து தரப்பு மக்களும், குறிப்பாக இளம் தலைமுறையினர் Heart Care-ல் அதிகம் கவனம் செலுத்த வேண்டம்.
நம் உடலில் தேவையின்றி தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகளால் இதயத்துக்கு பல்வேறு விதமான நோய்கள் உருவாகின்றன. இந்தக் கெட்ட கொழுப்பால் இதய நாளங்கள் பாதிக்கப்பட்டு பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.

இந்தக் கெட்ட கொழுப்புகளை அகற்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நாம் அன்றாடம் பின்பற்றும் உணவு முறையில் சில மாற்றங்களைச் செய்தாலே போதும். உடலில் ஏற்படும் ஹைப்பர் கொலஸ்டாரோலெமியா எனப்படும் அதிகப்படியான கொலஸ்டிரால் ரத்தக்குழாய்களில் படிந்து நாளடைவில் இறுகி மாரடைப்பு உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு சேர்ந்தால் ரத்த ஓட்டம் குறைந்து நெஞ்சுவலி ஏற்படுகிறது. திடீரென வலிப்பு நோய் உண்டாகலாம்.
நார்ச்சத்து நீக்கப்படாத முழு தானியங்கள் போன்றவற்றினால் கெட்ட கொழுப்பு உடலில் தங்குவது தடுக்கப்படும். கெட்ட கொழுப்பை தடுக்கும் 5 வகை உணவுகள் பற்றி இங்கு விரிவாகப் பார்க்கலாம்.
ஓட்ஸ், பார்லி, தினை ஆகியவற்றில் உள்ள பீட்டா குளுகன் உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்பைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.
பட்டாணி, பீன்ஸ், சிவப்பு ராஜ்மா, தட்டாம் பயறு ஆகியவற்றில் புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதயத்தைப் பாதிக்கக் கூடிய உயர் ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்புக் கட்டிகள் ஆகியவற்றை மட்டுப்படுத்தும் ஆற்றல் இதனால் ஏற்படும்.
வால்நட், வேர்க்கடலை, பாதாம் போன்ற கொட்டை வகைகளில் உணவில் தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை நல்ல கொழுப்பை உடலில் உற்பத்தி செய்யும். இதனால் இதய நலனுக்கு மிகவும் நல்லது. இதுமட்டுமல்லாமல் உடலில் தாதுச்சத்தையும் இந்த கொட்டை வகைகள் உற்பத்தி செய்யும்.

பூண்டின் மருத்துவத்தன்மை உடலில் கொழுப்பு அதிகரிப்பதை தடுக்கும் ஆற்றல் கொண்டது. பூண்டில் உள்ள அல்லிசின் எனும் வேதிப்பொருள் கொழுப்புச்சத்தை குறைத்து இதய நலனுக்குப் பங்களிக்கிறது.
பெர்ரிஸ் பழ வகைகளில் அதிக நார்ச்சத்து உள்ளது. ராஸ்பெர்ரி, செர்ரி, ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி ஆகியவற்றில் உள்ள சத்து உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து சமநிலைக்குக் கொண்டுவரும் திறன் படைத்தவையாகும். இவை ஆன்டிஆக்ஸிடென்ட் தன்மை கொண்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கத்தரிக்காய், வெண்டைக்காய் ஆகியவற்றில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இவற்றை உணவில் சேர்த்தால் கொழுப்பு உருவாகுவதை சிறப்பாகத் தடுக்கலாம்.
கேனலா, சூரியகாந்தி, போன்ற எண்ணெய்களை வெண்ணெய்க்கு பதிலாகப் பயன்படுத்தினால் கொழுப்பு உருவாகுவதை தடுக்கலாம்.
சோயாபீன்களை சாப்பிடுதல், டோபு, சோயா மில்க் சாப்பிடுவதால் கொலஸ்டிரால் அளவு வெகுவாகக் குறையும். தினமும் சராசரியாக 25 கிராம் சோயா புரதத்தை உட்கொண்டால் எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்டிரால் அளவு 5 முதல் 6 சதவீதம் குறையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது மீன் சாப்பிடுவது நல்லது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த மத்தி, அயிலா மீன்களை சமைத்து சாப்பிட்டால் கொலஸ்டிரால் குறைந்து இதயத்துக்கான ரத்த ஓட்டம் சீராகும். இதயக் கோளாறுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். உயர் ரத்த அழுத்தம் வெகுவாகக் கட்டுக்குள் வரும்.
பொதுவாக சைவ உணவுகளை சாப்பிட்டு வந்தால் கொலஸ்டிரால் உற்பத்தியாவது குறையும். இதனால் எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்டிரால், ட்ரைகிளைசரைடுகள், உயர் ரத்த அழுத்தம் குறையும். ஏராளமான பழங்கள், காய்கறிகள், முழு தானிய வகைகள், புரதம் நிறைந்த காய்கள், ஓட்ஸ் பார்லி, வெண்டைக்காய், கத்தரிக்காய், சோயா பீன்ஸ், பாதாம் ஆகியவற்றை தாராளமாக தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதனால் கொலஸ்டிரால் கட்டுப்பாடு சீராக இருக்கும்.
ஊட்டச்சத்து நிபுணர்களின் அறிவுரைப்படி நமது உணவு பட்டியலை உருவாக்கி அதைப் பின்பற்றி வந்தால் உடலில் தேவையின்றி கெட்ட கொழுப்பு அதிகரிப்பதைத் தடுக்கலாம். இந்த உணவு முறையுடன் தினசரி உடற்பயிற்சிகளையும் செய்து வந்தால் இதயத்தை பாதுகாக்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications