இந்திய அரசு ஸ்டார்ட்அப்-களை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. இதன் மூலம் புதிய தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கு முடிவு செய்துள்ளது. ஸ்டார்ட்அப்களுக்கென இந்திய அரசு செயல்படுத்தும் ஐந்து திட்டங்கள் பற்றி இனி பார்க்கலாம்.
1. அடல் இன்னோவேஷன் மிஷன் - 2016இல் இந்த அடல் இன்னோவேஷன் மிஷன் தொடங்கப்பட்டது. நிதியுதவி மற்றும் கொள்கைகள் மூலமாக இந்த அடல் இன்னோவேஷன் மிஷன் திட்டம் செயல்படுகிறது. ரூ.10 கோடி வரை ஐந்தாண்டுகளில் ஸ்டார்ட்அப்களுக்கு வழங்கப்படும்.

ஆரோக்கியம், விவசாயம், கல்வி, போக்குவரத்து ஆகிய துறைகளில் தொடங்கப்படும் ஸ்டார்ட்அப்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி செய்யப்படுகிறது.
2. மல்டிபிளையர் கிராண்ட் ஸ்கீம் - மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி துறையின் கீழ் இந்த மல்டிபிளையர் கிராண்ட் ஸ்கீம் செயல்படுத்தப்படுகிறது. தொழில்துறையில் ஆர் அண்டு டி திட்டங்களுக்காக ரூ.2 கோடி நிதியுதவி செய்யப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
3. பால்பண்ணை தொழில்முனைவோர் மேம்பாடு திட்டம் - இந்த பால்பண்ணை தொழில்முனைவோர் மேம்பாடு திட்டத்தின் கீழ் பால் உற்பத்தி, கொள்முதல், மார்க்கெட்டிங்குக்காக பொதுப் பிரிவினருக்கு 25 சதவீதமும் எஸ் சி /எஸ் டி பிரிவினருக்கு 33.33 சதவீதம் முதலீட்டில் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் சுயதொழில் மேம்பாடுக்கு இந்தத் திட்டம் பயன்படுத்தப்படுகிறது.
4. ஸ்டார்ட்அப் இந்தியா இனிஷியேடிவ் - இந்த ஸ்டார்ட்அப் இந்தியா இனிஷியேடிவ் திட்டம் மூலம் ஐந்தாண்டுகளுக்கு வரி சேமிப்புக்கு உதவும். 1,14,456 ஸ்டார்ட்அப்கள் இந்த திட்டத்தினால் இதுவரை பயன்பட்டுள்ளன.
பயோடெக் நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகள் வரைக்கும் மற்ற நிறுவனங்களுக்கு 7 ஆண்டுகளுக்கும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
5. ஸ்டார்ட்அப் இந்தியா சீட் பண்டு ஸ்கீம் - 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த ஸ்டார்ட்அப் இ்நதியா சீட் பண்டு ஸ்கீம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் ஸ்டார்ட்அப்களின் தொடக்கக் காலத்தில் ரூ.5 கோடி வரை நிதியுதவி அளிக்கப்படுகிறது.
வளர்ச்சி மற்றும் ஸ்கேலிங் நோக்கத்தில் செயல்படும் ஸ்டார்ட்அப்களுக்கு தேவையான நிதியுதவி செய்யப்படும். இதுவரை 1000க்கும் மேற்பட்ட இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்த ஸ்டார்ட்அப் இந்தியா சீட் பண்டு ஸ்கீம் மூலம் பயனடைந்துள்ளன.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications