உலகிலேயே வேகமாக வளர்ந்தும் நாடு இந்தியா, வல்லரசு நாடுகளுக்கு இணையான வளர்ச்சியைக் கண்டும் வரும் இந்தியா, 2020இல் இந்தியா வல்லரசு நாடு, அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்த மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கத் தயாராகி வரும் இந்தியா.. இப்படிப் பல செய்திகளைக் காது குளிர கேட்டு வந்த நமக்குத் தற்போது அதிர்ச்சி அளிக்கும் செய்தி காத்துக்கொண்டு இருக்கிறது.
நடப்பு நிதியாண்டின் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி வெறும் 5 சதவீதமாக மட்டுமே இருக்கும் எனப் புள்ளியியல் அமைச்சகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
11 வருட மந்த நிலை
10 சதவீதத்தை நோக்கிய பயணித்துக்கொண்டு இருந்த இந்திய பொருளாதாரம் பல்வேறு காரணங்களுக்காகத் தொடர்ந்து தேக்கம் அடைந்து வந்தது. இதனால் வர்த்தகப் பாதிப்பு, புதிய வேலைவாய்ப்பு உருவாக்குவதில் மந்தம், தொடர்ந்து ரூபாய் மதிப்பு உயர்வு, புதிய வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தொய்வு எனப் பல பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறோம்.
இதன் எதிரொலியாகத் தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் வெறும் 5 சதவீதமாக மட்டுமே இருக்கும் எனக் கணிப்புகள் அரசு தரப்பில் இருந்து வெளியாகியுள்ளது. இது கிட்டத்தட்ட 11 வருட மோசமான நிலை என்பது குறிப்பிடத்தக்கது.
2019-2020ஆம் நிதியாண்டு
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல்- ஜூன் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5 சதவீதம் வளர்ச்சி அடைந்தது. இதேபோல் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 4.5 சதவீதம் வரையிலான வளர்ச்சியைச் சந்தித்தது. இப்படியிருக்கையில் 2வது 6 மாதத்தில் நாடடின் பொருளாதாரம் 5.25 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் எனத் தற்போது வெளியாகியுள்ள கணிப்புகள் தெரிவிக்கிறது.
செப்டம்பர் காலாண்டு வளர்ச்சி சுமார் 25 காலாண்டுன் மோசமான நிலை என்பது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் 2021
2021ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தயார் செய்து வரும் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஆய்வு குழுவிற்குத் தற்போது வெளியாகியுள்ள பொருளாதார வளர்ச்சி கணிப்புகள் பெரிய அளவில் உதவும் என நம்பப்படுகிறது. நாட்டின் பொருளாதார மற்றும் வளர்ச்சி வளர்ச்சிக்கு ஏற்ப திட்டங்களை உருவாக்க முடியும்.
முக்கியமாக வேலைவாய்ப்பு மற்றும் தனியார் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கும் வகையிலான திட்டத்தை இந்தக் கணிப்புகள் மிகவும் சிறப்பான முறையில் செய்ய முடியும் எனவும் நம்பப்படுகிறது.
கார்பரேட் வரி
நாட்டின் பொருளாதாரத்தையும், வர்த்தகச் சூழ்நிலையையும் மேம்படுத்த மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பாகக் கார்ப்பரேட் வரியை குறைத்தது. இதேபோல் நாட்டு மக்களின் செலவு செய்யும் அளவீட்டை அதிகரிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியும் அதிகளவிலான வட்டி குறைப்பை அறிவித்தது.
எதிர்பார்ப்பு
இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் 2021ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தனிநபர்-ஐ மையமாக வைத்துப் பல வரிச் சலுகை அறிவித்து, மக்களின் செலவு செய்யும் அளவீட்டை அதிகரித்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் அறிவிப்புகள் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
சர்வதேச சந்தைகள்
அமெரிக்கா - சீனா இடையிலான பிரச்சனை சற்று தணிந்த நிலையில், தற்போது அமெரிக்கா ஈரான் இடையில் புதிய பிரச்சனை வெடித்துள்ளது. இதனால் இந்தியப் பங்குச்சந்தை முதலீடு மட்டும் அல்லாமல் கச்சா எண்ணெய் விலையில் உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் தாமதம் என அனைத்து விதமான பிரச்சனைகளை இந்தியாவும், இந்திய பொருளாதாரம் சந்திக்க நேரிடும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications