வர்த்தகத்திலும், வேலையிலும் பெறும் வெற்றிப்பெற்றவர்களின் வாழ்க்கை முறையில் அவர்களது நற்பண்புகள்தான் அவர்களை வெற்றியின் உச்சாணிக் கொம்புக்கு கொண்டு செல்கிறது. இது முகேஷ் அம்பானி முதல் ஜெப் பேசோஸ் வரையில் பெரும்பலான தொழிலதிபர்களின் பொதுவாக கடைப்பிடிக்கும் முக்கிய பழக்கங்கள் பற்றி பார்க்கலாம்.
1. அதிகாலையில் எழுதல்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் தலைவர் முகேஷ் அம்பானி அதிகாலை 5.30 மணிக்கே எழுந்து விடுவாராம். காலையில் எழுந்தவுடனேயே சுறுசுறுப்பாக உடற்பயிற்சி, தியானம் ஆகியவற்றை செய்து மனதை இளப்பாற வைத்து வேலைக்கும் தயாராக இருப்பாராம்.

2. புத்தகம் படிப்பது: பில்கேட்ஸ் வருடத்துக்கு 50 புத்தகங்களையாவது படிப்பாராம். இதன் மூலம் வாழ்நாள் முழுவதும் தான் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைப்பதாக பில்கேட்ஸ் கூறுகிறார். தனது பிளாக்கில் நல்ல புத்தகங்கள் பற்றிய விமரிசனங்களையும் பரிந்துரைகளையும் அவர் செய்கிறார். புத்தகங்கள் தன்னை சிறந்த மனிதனாக எப்படி ஆக்கியது என்பது பற்றியும் மனிதர் சிலாகித்துள்ளார்.
3. உடல்பயிற்சி: அமேசான் சிஇஓவான ஜெப் பேசோஸ் அதிகாலை உடல்பயிற்சி அவசியம் என வலியுறுத்துகிறார். உடல்பயிற்சி செய்யாமல் அவரது அன்றைய பொழுது போகாது என்று அடித்துச் சொல்கிறார். தன்னை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள இந்த உடல்பயிற்சிகள்தான் உதவுகின்றன என்று ஜெப் பேசோஸ் கூறுகிறார். தொடர்ச்சியான உடற்பயிற்சிகளால் தனது உடலை ஆரோக்கியமாகவும் மனதை தெளிவாகவும் வைத்திருப்பதாகக் கூறுகிறார்.
4. நல்ல தூக்கம்: எல்லா மனிதர்களுக்கும் 7 முதல் 8 மணிநேரம் தினசரி நல்ல தூக்கம் அவசியம் என்று பிரபல அமெரிக்க தொழிலதிபர் மார்க கியூபன் கூறுகிறார். சராசரியாக 8 மணிநேர தூக்கம் இருந்தால் தன் தினசரி தொழில் மற்றும் ஆரோக்கியத்தை பராமரிக்க முடிகிறது என்று அவர் கூறுகிறார். இதனால் அவர் எப்போதும் 7 மணிநேரத் தூக்கத்துக்கு முக்கியத்துவம் தருகிறார். மருத்துவர்களும் சராசரியாக மனிதர்களுக்கு 8 மணிநேரம் ஆழ்ந்த தூக்கம் இருந்தால் அவர்களது மன மற்றும் உடல் ஆரோகக்ியம் சிறப்பாக இருக்கும் என்கின்றனர்.
5. சமூக ஈடுபாடு: சாதனை மனிதர்கள் எல்லாருமே சிறப்பான சமூக ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை பெரிதும் வலியுறுத்துகின்றனர். தனது சொத்தில் பெரும்பகுதியை சமூக நலனுக்காக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் செலவழிக்கிறார். தான் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை தனது சமூகத்துக்கு செலவழிப்பது அனைவரது கடமையாகும் என்று பில்கேட்ஸ் பெருமிதத்துடன் கூறுகிறார்.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications