அவசரத்திற்கு பணம் தேவைப்பட்டால் தங்களிடம் உள்ள நகைகளை வைத்து சிலர் பணம் பெறுகின்றனர். நகையும் இல்லாத சூழலில் பலர் பர்சனல் லோன்களைத் தான் நாடுகின்றனர். இதுபோன்ற லோன்களுக்கு சில மறைமுக கட்டணங்கள் விதிக்கப்படுகிறது. ஆனால் அவற்றை கடன் வாங்கப் போகும் போது வங்கிகள் அல்லது ஏஜெண்டுகள் உங்களிடம் சொல்ல மாட்டார்கள். இதனால் உங்கள் கடனின் ஒட்டு மொத்த செலவு அதிகரிக்கும். எனவே பர்சனல் லோன் எடுக்கும் முன்பு அவற்றுக்கு என்னென்ன கட்டணங்கள் விதிக்கப்படுகிறது? என்பது குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள்.
செயலாக்கக் கட்டணம்: ப்ராசசிங் ஃபீஸ் என்று சொல்லப்படுகிற இந்த செயலாக்கக் கட்டணம் கடன் விண்ணப்பத்தை செயலாக்கம் செய்வதற்காக வசூலிக்கப்படும் கட்டணமாகும். இந்தக் கட்டணம் கடன் தொகையில் 1 சதவீதம் முதல் 3 சதவீதம் வரையில் இருக்கலாம்.

முன்கூட்டியே பணம் செலுத்துவதற்கான கட்டணம்: சிலர் கடனை வாங்கிவிட்டு ஈஎம்ஐ செலுத்துவதில் அதிருப்தி அடைந்திருந்தால், மொத்தமாக கையில் கிடைக்கும் பணத்தை அசலில் வரவு வைப்பார்கள். இதற்கும் ஒரு கட்டணம் வசூலிக்கப்படும். அதாவது தவணைக்காலம் முடிவதற்குள் நீங்கள் கடனை முழுமையாக திருப்பிச் செலுத்த முடிவு செய்தால் வங்கி முன்கூட்டியே கட்டணம் செலுத்துவதற்கு கடன் தொகையில் 2 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை கட்டணம் விதிக்கும்.
தாமதமாக பணம் செலுத்துவதற்கான கட்டணம்: நீங்கள் ஒரு ஈஎம்ஐ தவணையைச் செலுத்தத் தவறினாலும் கூட அதற்கு அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் கடன் தொகையில் 500 ரூபாய் முதல் 2 சதவீதம் வரையில் இருக்கலாம். எனவே முடிந்த வரையில் பர்சனல் லோன் பெற்றுவிட்டால் சரியான நேரத்தில் கடன் திருப்பிச் செலுத்தப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
காப்பீட்டு ப்ரீமியம்: பல வங்கிகள் கடன் வழங்கும்போது காப்பிட்டுக் கொள்கைக்கான கட்டணத்தையும் கடன் தொகையோடு சேர்க்கின்றன. எனவே நீங்கள் பிரீமியத்தையும் சேர்த்து செலுத்த வேண்டி இருக்கலாம். இந்தக் கட்டணம் உங்கள் கடன் தொகையோடு சேர்த்து வசூலிக்கப்படும்.
முத்திரை மற்றும் ஆவணக் கட்டணங்கள்: கடன் பெற விண்ணப்பித்து விட்டால் ஆவண கட்டணங்கள் செலுத்த வேண்டி வரலாம். இதுவும் கூடுதல் செலவில் அடங்கும்.
மறைக்கப்பட்ட கட்டணங்களை தவிர்ப்பதற்கான டிப்ஸ்கள்:
அனைத்து கட்டணங்களையும் சரிபாருங்கள்: கடன் பெறுவதற்கு முன்பே அனைத்து கட்டணங்கள் விதிமுறைகள் குறித்து தெரிந்து வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதேபோல கடன் பாலிசியை கவனமாக படித்து, அதில் ஏதேனும் கட்டணங்கள் உங்களுக்கு புரியவில்லை என்றால் அது குறித்து வங்கியிடம் விளக்கம் கேட்கலாம்.
வட்டி: வட்டி விகிதங்களைப் புரிந்து கொள்ளுங்கள். தனிநபர் கடன்களுக்கு வட்டி விகிதங்கள் 10 சதவீதம் முதல் 24 சதவீதம் வரையில் இருக்கலாம். இந்த விகிதங்கள் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர், வருமானம், நீங்கள் திருப்பி செலுத்தும் திறன் ஆகியவற்றையெல்லாம் பொறுத்தது. எனவே குறைந்த வட்டி விகிதங்களைக் கொண்ட தனிநபர் கடனைத் தேர்வு செய்வது முக்கியம்.
சிபில் ஸ்கோர்: உங்கள் சிபில் மதிப்பெண் 750 அல்லது அதற்கு மேல் இருந்தால் குறைந்த வட்டியில் நீங்கள் பர்சனல் லோன் பெறலாம். பர்சனல் லோன் மட்டுமின்றி பிற லோன்களும் கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருந்தால் உடனடியாக கிடைக்கும்.
கடன் காலம்: பர்சனல் லோன் கடன் காலம் 1 முதல் 5 ஆண்டுகள் வரை இருக்கும். கடன் காலம் அதிகமாக இருந்தால் குறைந்த ஈஎம்ஐ செலுத்தலாம். ஆனாலும் அதிகமாக வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.
பாதுகாப்பற்ற கடன்கள்: தனிநபர் கடன்கள் பாதுகாப்பற்ற கடன்கள். அதாவது எந்த வித பினையமும் இல்லாமல் வழங்கப்படும் கடன்கள். இதனால் தான் இதற்கு வசூலிக்கப்படும் வட்டி சற்று அதிகமாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications