இந்த 5 விஷயம் நடந்தா தான்.. பட்ஜெட்டே தாக்கல் செய்ய முடியும் தெரியுமா?

டெல்லி: வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். மத்திய பட்ஜெட் முக்கியமான ஐந்து படிநிலைகளை பின்பற்றி தான் தயாரிக்கப்படுகிறது. அது என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்..

1.தொடக்கநிலை பணிகள்: மத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதிக்கு 6 மாதங்களுக்கு முன்னரே தொடங்கி விடும். நிதி அமைச்சகம் பட்ஜெட் தொடர்பான சுற்றறிக்கைகளை அனைத்து அமைச்சகங்களுக்கும் அனைத்து துறைகளுக்கும் அனுப்பி வைக்கும். சம்பந்தப்பட்ட துறைகள் தங்களுடைய கடந்த ஆண்டுக்கான தங்களுடைய செலவினம், வருமானம் மற்றும் நடப்பு ஆண்டுக்கான தங்களுடைய செலவினம், வருமானம் மற்றும் வரக்கூடிய ஆண்டுக்கு தங்களுக்கு எவ்வளவு நிதி தேவைப்படுகிறது என்பன உள்ளிட்ட விவரங்களை அனுப்ப வேண்டும் என்பது தான் இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்த 5 விஷயம் நடந்தா தான்.. பட்ஜெட்டே தாக்கல் செய்ய முடியும் தெரியுமா?

2. ஆலோசனைக் கூட்டங்கள்: நிதி அமைச்சகம் பட்ஜெட் தயாரிப்பின் ஒரு பகுதியாக அனைத்து மாநில பிரதிநிதிகள் மற்றும் யூனியன் பிரதேச பிரதிநிதிகள் , தனியார் நிறுவனங்களின் கூட்டமைப்புகள், வேளாண் கூட்டமைப்புகள் ,தொழில் அமைப்புகள் என பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தும். இந்த ஆலோசனை கூட்டத்தில் தற்போது நாட்டில் தொழில் துறை சார்ந்த, உற்பத்தி துறை சார்ந்த, சேவை துறை சார்ந்த பொருளாதாரம் எப்படி இருக்கிறது? அதனை சரி செய்ய என்னென்ன கோரிக்கைகள் அவர்கள் சார்பில் முன்வைக்கப்படுகின்றன என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சேகரிக்கப்படும்.

3. தரவுகளை ஒழுங்கமைத்தல்: பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகள் சார்பாகவும் அவர்களின் வருவாய் செலவினம் மற்றும் புதிதாக கொண்டுவரப்பட இருக்கும் திட்டங்கள் உள்ளிட்ட விவரங்கள் நிதி அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். களத்தில் இருக்கக்கூடிய அதிகாரிகள் இந்த தரவுகளை ஆய்வு செய்வார்கள். இதனை அடுத்து அந்தந்த துறை சார்ந்த மூத்த அதிகாரிகள் மிக கவனமாக அந்த தகவல்களை ஒழுங்குப்படுத்தி நிதி அமைச்சகத்திற்கு அனுப்பி வைப்பார்கள். நிதி அமைச்சகம் இந்த தரவுகளையும் நாட்டின் நடப்பு பொருளாதார சூழல்களையும், வருமான ஆதாரங்களோடும் ஒப்பீடு செய்து நிதிகளை ஒதுக்கும்.

4. பட்ஜெட் தயாரிப்பு: நிதி அமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகள் மிக கவனமாக அனைத்து விவரங்களையும் பகுப்பாய்வு செய்வார்கள். இதன் அடிப்படையில் ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஒரு குறிப்பிட்ட துறைக்கோ அல்லது திட்டத்திற்கோ பட்ஜெட் ஒதுக்கீடு செய்வதில் குழப்பம் ஏற்படும் போது நிதி அமைச்சகம் இந்த விவகாரத்தை மத்திய அமைச்சரவை அல்லது பிரதமரிடம் கொண்டு செல்லும். அவர்கள் இந்த திட்டத்திற்கு அல்லது இந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யலாம் என்பதற்கான இறுதி முடிவை எடுப்பார்கள். இதனை தொடர்ந்து மத்திய நிதி அமைச்சகம் மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் மத்திய மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தோடு கலந்து ஆலோசனை செய்து ஒட்டுமொத்த வருவாய் செலவின எதிர்பார்ப்பு ஆகிய தகவல்கள் பெறப்படும்.

5. பட்ஜெட் அச்சிடுதல்: அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்து, நிதி கொள்கைகளை வகுத்து அதன் அடிப்படையில் பட்ஜெட் ஆவணம் தயாரிக்கப்படும். இது நிதி அமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதி பெறப்படும். பட்ஜெட் தயாரிக்கப்பட்டு அதனை அச்சிடும் பணி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ராஷ்டிரபதி பவனில் மத்திய நிதி அமைச்சர் சார்பில் அல்வா தயார் செய்யப்பட்டு அதன் பிறகு தான் பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடுவதற்கு கொண்டு செல்லப்படும்.

இதனை தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி அன்று நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். பொதுவாக பட்ஜெட்டில் இடம் பெறக்கூடிய தகவல்கள் அனைத்தும் மிக ரகசியமாக வைத்திருக்கப்படும். நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் வாசிக்கும் போது தான் நமக்கு அவை தெரிய வரும்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+