வாடியா குழுமம்: இந்தியாவின் மிகப் பழமையான தொழில் குழுமம் என்றால் அது தி வாடியா குரூப் தான். 1736 ஆம் ஆண்டு லவ்ஜி நஸர்வாஞ்சி வாடியா அவர்களால் தொடங்கப்பட்டது தான் வாடிய குழுமம். அப்போது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு கப்பல்கள் மற்றும் கப்பல் சார்ந்த கட்டமைப்புகளை ஏற்படுத்தி தருவதற்கான ஒப்பந்தத்துடன் முதன்முறையாக இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 300 கப்பல்களை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு தயாரித்துக் கொடுத்தது. இதில் சில கப்பல்கள் போர்களில் கூட பயன்படுத்தப்பட்டன. பாம்பே டையிங் நிறுவனத்தையும் இந்த குழுமம் தான் தொடங்கியது. விமான போக்குவரத்து, சுகாதாரம், ரசாயனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த குழுமம் வெற்றிகரமாக தொழில்களை செய்து வருகிறது.

ஈட் பேரி லிமிடெட்: 1788 ஆம் ஆண்டு சர்க்கரை மற்றும் மதுபானங்களை வர்த்தகம் செய்வதற்காக ஆங்கிலேயரான தாமஸ் பேரி அவர்களால் நிறுவப்பட்டது.கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்களாக இந்தியாவின் மிகப்பெரிய சர்க்கரை வர்த்தக நிறுவனமாக இது திகழ்ந்து வந்தது. இந்த நிறுவனம் தான் இந்தியாவில் முதன்முறையாக உரங்களை உற்பத்தி செய்ய ஆலையை அமைத்தது. இந்த குழுமம் 1962 ஆம் ஆண்டு முருகப்பா குழுமத்தால் வாங்கப்பட்டது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா: இந்தியாவில் செயல்படக்கூடிய மிகப் பழமையான வங்கி தான் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா. 1806 ஆம் ஆண்டு இது பேங்க் ஆப் கொல்கத்தா என்ற பெயரில் பிரிட்டிஷ் ஆளுநர் வெள்ளெஸ்லி அவர்களால் தொடங்கப்பட்டது.திப்பு சுல்தானுக்கு எதிரான சண்டையின்போது பிரிட்டிஷாருக்கு தேவையான நிதியை வழங்குவதற்காக தொடங்கப்பட்டது தான் பேங்க் ஆப் கல்கத்தா. இது 1809 ஆம் ஆண்டில் பேங்க் ஆப் பெங்கால் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் இது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது வரை இந்தியாவின் வெற்றிகரமான ஒரு வங்கியாக செயல்பட்டு வருகிறது.
ஆர்பிஜி குழுமம்: ராம்தத் கோயன்கா 1820 ஆம் ஆண்டில் ஆர்பிஜி குழுமத்தை தொடங்கினார். தற்போது இந்த நிறுவனம் பல்வேறு சியாட் டயர் மற்றும் ஆர்பிஜி லைஃப் சயின்ஸ் என்ற மருந்து நிறுவனம் உள்ளிட்டவற்றை செயல்படுத்தி வருகிறது. இந்தக் குழுமம் உள்கட்டமைப்பு ,தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி உற்பத்தி என பல்வேறு துறைகளிலும் கால் பதித்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
ஆதித்யா பிர்லா குழுமம்: இந்தியாவில் 1857 ஆம் ஆண்டு சிவ நாராயணன் பிர்லா என்பவரால் தொடங்கப்பட்டது தான் ஆதித்யா பிர்லா குழுமம் .தற்போது இந்த நிறுவனம் துணி, நிதி, சிமெண்ட் ,மினரல், சில்லறை வணிகம், பெயிண்ட், நகைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் கால் பதித்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications