2023 ஆம் ஆண்டு உண்மையிலேயே இந்திய வம்சாவளி சிஇஓ-க்களுக்கு ஒரு சிறப்பான ஆண்டு என்று தான் சொல்ல வேண்டும். அவர்களது சிறப்பான செயல்பாடுகள், சாதுர்யமான முடிவுகள், தாக்கத்தைத் தரக்கூடிய நடவடிக்கைகள் எல்லாம் பல தலைப்புச் செய்திகளை உருவாக்கி கார்ப்பரேட் உலகில் குறிப்பிடத்தக்க திருப்புமுனைகளை ஏற்படுத்தியுள்ளது.
2023 ஆம் ஆண்டில் இந்த சிஇஓக்கள் செய்த சாதனையானது மாறிவரும் சூழலுக்கேற்ப முடிவெடுப்பது மற்றும் புதுமைகளை உருவாக்குவதுமான கலவையாக அவரவர் நிறுவனங்களில் திகழ்கின்றன.

இதில் கார்ப்பரேட் துறையில் தங்களது சாதனைகளுக்காக செய்திகளில் இடம்பிடித்த குறிப்பிடும்படியான ஐந்து சிஇஓக்களின் தலைமைப் பண்பு குறித்து இங்கு பார்க்கலாம்
ஆல்ஃபாபெட்- சுந்தர் பிச்சை
ஆல்ஃபாபெட் மற்றும் கூகுளின் சிஇஓவாக உள்ள சுந்தர் பிச்சைக்கு 2023 ஆம் ஆண்டு பெரும் சவாலாகவே இருந்தது. குறிப்பாக Fortnite developer நிறுவனத்தின் Epic Games விஷயத்தை சொல்லலாம்.
பணிநீக்கம் பற்றி தனது கவலையைத் தெரிவித்த சுந்தர் பிச்சை கூகுளின் நடவடிக்கைகளை போட்டியைக் அடக்கும் எண்ணத்தில் இல்லை என்பதை உறுதிசெய்தார். ஒரு கார்ப்பரேட் நிறுவனம் சந்திக்கும் சவால்களை நேர்மையுடன் எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு அதன் தலைவருக்கு இருக்க வேண்டுமென்பதை வெளிப்படையான தனது நடவடிக்கைகள் மூலம் நிரூபித்தார் பிச்சை.
மைக்ரோசாப்ட்- சத்யா நாதெல்லா
மைக்ரோசாப்ட் நிறுவனம் உச்சாணிக் கொம்பை எட்டிய 2014 ஆம் ஆண்டில் இருந்து ஏற்பட்ட நெருக்கடிகளின்போதெல்லாம் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை மிகச் சிறப்பாகக் சத்யா நாதெல்லா கையாண்டார். OpenAI நிறுவனத்திலிருந்து Sam Altman திடுதிப்பென்று வேலையிலிருந்து நீக்ககப்பட்டபோது அவரை வேலைக்கு எடுத்துக் கொண்டார். இது அவரது உடனடியான உறுதியான முடிவுகளை எடுக்கும் திறனை வெளிக்காட்டியது.
அடுத்தடுத்து எழுந்த பல பிரச்னைகளை சுமுகமாகக் கையாண்டு தனது நிறுவனத்தின் எல்லைகளை விரிவுபடுத்தினார். ஓபன்ஏஐ நிறுவனத்தில் மைக்ரோசாப்ட் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீட்டு செய்தது அந்த மெகா நிறுவனம் ஆர்ட்டிபிஸியல் இன்டெலிஜென்ஸ் வளர்ச்சிக்கு தரும் முக்கியத்துவத்தைப் பறைசாற்றியது.
அடோபி- ஷாந்தனு நாராயண்
தெளிவற்ற ஒழுங்குமுறைகளால் உழன்ற Figma நிறுவனத்துடன் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஒரு ஒப்பந்தம் செய்ததன் மூலம் தலைப்புச் செய்தியானார் ஷாந்தனு நாராயண். அத்துடன் மரபுசார்ந்த விதிகளில் இருந்து விலகி வேலை-வாழ்க்கை உறவை பேலன்ஸ் செய்து குறிப்பிட்ட நேர காலத்துக்கு வேலை செய்ய வேண்டும் என்பதில் தனிநபரின் சுதந்திரத்தை உறுதி செய்வதில் அவருக்குள்ள தொலைநோக்கு பார்வையை வெளிப்படுத்தினார்.
இந்த அவரது அணுகுமுறை ஊழியர்களின் தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் உள்ள நெளிவுசுளிகளை அவர் புரிந்து வைத்திருப்பதை எதிரொலித்தது.
ஐபிஎம்- அரவிந்த் கிருஷ்ணா
ஐஐடி கான்பூர் மாணவரான அரவிந்த் கிருஷ்ணா ஐபிஎம்மின் சிஇஓவாக பொறுப்பேற்றும் முக்கிய இடத்தைப் பிடித்தார். ரிட்டர்ன்-டூ-ஆபிஸ் பிரச்னையில், வொர்க் ஃபிரம் ஹோம் போன்ற ரிமோட் மேலை முறைகளினால் ஊழியர்களின் முன்னேற்றத்தைப் பாதிக்கும் நிலையை மறைமுகமாக உணர்த்தி நிறுவனத்தின் அலுவலகத்தில் நேரடியாகப் பணியாற்ற வேண்டும் என்ற கொள்கையை தெளிவுப்படுத்திய விதம் அவரது பாராட்டத்தக்க செயல்களில் ஒன்றாகும். இந்த அணுகுமுறை நிறுவனத்தின் இலக்குகளுக்கும் நெளிவுத்தன்மைக்கும் உள்ள பேலன்ஸை சுட்டிக்காட்டியது.
பெட்டர்.காம்- விஷால் கார்க்
பெட்டர்.காம் நிறுவன சிஇஓ ஆன பின்னர் தொழிலாளர்களை பாதிக்கும் முடிவுகள் பற்றி கவனம் செலுத்தினார். இந்தியாவிலும் அமெரிக்காவிலும் 4000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த நேரத்தில் விஷால் கார்க் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவும், விமர்சனங்களும் கிளம்பியது. அவரது தலைமையில் தனது சிறப்பான அனுபவத்தால் கற்றல் மற்றும் பின்பற்றுதல் பற்றிய ஈடுபாட்டை காட்டி கார்ப்பரேட் எல்லையை விரிவுபடுத்தினார்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications