ஏதேனும் நிறுவனங்களில் வேலை செய்யும் நபரானாலும் சரி.. அல்லது வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் ஆனாலும் சரி.. குறைந்த முதலீட்டில் தொழில் செய்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்காக சிலர் ஆன்லைன் வேலை வாய்ப்புகளையும் தேடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் தற்போது ஜாப் மோசடிகள் அதிகரித்துவிட்ட காரணத்தினால் இது போன்ற வேலைவாய்ப்புகளில் உஷாராக இருக்க வேண்டியது முக்கியம். எனவே வீட்டிலிருந்து குறைந்த முதலீட்டில் நீங்களே சில தொழிலைத் தொடங்கலாம். குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் நபர்களுக்காக 5 அசத்தலான பிசினஸ் ஐடியாக்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஹோம் மேட் சாக்லேட்: தற்போது அதிக டிமாண்ட் இருக்கும் ஒரு தொழில் என்றால் அது சாக்லேட் தயாரிப்பு தொழில் தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானது சாக்லேட்கள். இனிப்பு என்றாலே சாக்லேட் தான் முதலிடத்தில் இருக்கும்.

கொக்கோ பவுடர், சர்க்கரை, சர்க்கரை போன்ற பொருட்களை வைத்தே குறைந்த முதலீட்டில் இந்த தொழிலை செய்யலாம். ஆனால் சாக்லேட் தொழில் செய்ய வேண்டும் என்றால் அதற்கு பேக்கேஜிங் முக்கியம். மேலும் கல்லூரி விழாக்கள், பள்ளி விழாக்கள், திருமண விசேஷங்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் போன்ற அனைத்திற்கும் நீங்கள் வீட்டிலேயே சாக்லேட் செய்து விற்பனை செய்யலாம்.
அவற்றை ஆன்லைன் மூலமாக மார்க்கெட்டிங் செய்யலாம். ஆன்லைன் தளங்களை பயன்படுத்தும் போது உங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள்.
டிபன் தொழில்: நவீன வாழ்க்கை முறை காரணமாக பலருக்கும் சமைப்பதற்கு நேரம் இருப்பதில்லை. அதுவும் கணவன் மனைவி என இருவரும் பணிக்கு செல்பவராக இருந்தால் பெரும்பாலான நேரங்களில் வெளியில் சாப்பிட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். எனவே இது போன்ற நபர்களை உங்களுடைய வாடிக்கையாளராக்கினால் கண்டிப்பாக நல்ல லாபம் பெற முடியும்.
மேலும் உங்களுக்கு தெரிந்த உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் என வெளியூரில் தங்கி வேலை பார்க்கும் நபர்களுக்கு மதிய நேரங்களில் மதிய உணவை சமைத்து டெலிவரி செய்யலாம். இந்த தொழிலுக்கும் அதிக டிமாண்ட் உள்ளது.
பாரம்பரிய குளியல் பொடி: என்னதான் பல பிராண்டுகளில் பர்சனல் கேர் பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டாலும்.. பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் அழகு சாதன பொருட்களுக்கு இன்னமும் ஃபேன் பேஸ் இருக்கத்தான் செய்கிறது. எனவே இயற்கை முறையில் குளியல் பொடி, சோப், ஷாம்பூ ஃபேஸ் பேக் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்யலாம்.
பேக்கிங்: கேக் செய்யத் தெரிந்தவர்கள் பேக்கிங் தொழிலை வீட்டிலிருந்தே செய்யலாம். பாண்டண்ட் கேக், ஐஸ்கிரீம் கேக், வெண்ணிலா கேக், பிளாக் ஃபாரஸ்ட், ஒயிட் ஃபாரஸ்ட் ரெட் வெல்வெட் போன்ற பல வகையான கேக் வெரைட்டிகள் இருக்கின்றன. இது போன்ற கேக்குகளை வீட்டிலேயே தயாரித்து விற்பனை செய்யலாம். மேலும் நீங்கள் வீட்டில் இந்த தொழிலை செய்கிறீர்கள் என்பதை பிறருக்கு தெரியப்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கங்களை அமைத்து அவற்றில் வீடியோவாக பதிவேற்றலாம்.
கேண்டில் மேக்கிங்: வீட்டில் இருந்தே மெழுகுவர்த்தி தயாரித்து அருகில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்யலாம். வெளிநாடுகளில் கேண்டிலைட் டின்னருக்கு நறுமானமான மெழுகுவர்த்திகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே வாசனையூட்டும் வகையில் மெழுகுவர்த்திகளை தயாரித்து விற்பனை செய்யலாம். இதற்கு பெரிய அளவில் முதலீடு தேவைப்படாது. மெழுகு, திரி, வாசனை திரவியங்கள் மற்றும் மோல்ட் போன்ற சில பொருட்கள் இருந்தால் வீட்டிலேயே மெழுகுவர்த்தி தயாரிக்கலாம்.
மேலே உள்ள தகவல்கள் வீட்டில் இருந்தே செய்யக்கூடிய ஐந்து பிசினஸ் ஐடியாக்களை வழங்குவதற்காக மட்டுமே. எந்த ஒரு தொழிலையும் தொடங்குவதற்கு முன்பு சட்டரீதியான அனுமதிகள், உரிமங்கள் என்னென்ன? என்பது குறித்து தெரிந்து கொண்டு தொடங்க வேண்டும். உங்கள் தொழிலை தொடங்குவதற்கு முன்பு அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு சம்பந்தப்பட்ட நிபுணர்களின் ஆலோசனையை பெற்று தொடங்கவும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications