PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

இந்தியாவின் பல்வேறு நிறுவனங்களிலும் வேலை செய்யும் கோடிக்கணக்கான ஊழியர்களின் நலனுக்காக வருங்கால வைப்பு நிதி திட்டம் எனப்படும் EPFO திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி ஊழியரின் பெயரில் பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டு அதில் மாதம் தோறும் கணிசமான பணம் வரவு வைக்கப்படுகிறது.

நம்முடைய பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு அரசு வட்டியும் வழங்குகிறது. இது காம்பவுண்டிங் முறையில் வளர்ச்சி அடைந்து பெரிய லாபத்தை நமக்கு பெற்று தருகிறது. நம் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை பணி ஓய்வுக்கு முன்னரே கூட நாம் எடுத்து பயன்படுத்தலாம். தற்போது இதற்காக விண்ணப்பம் செய்து காத்திருக்க வேண்டும். ஆனால் இனி அந்த தேவை இல்லை. ஏனெனில் யுபிஐ மற்றும் ஏடிஎம் மூலமே பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை நாம் எடுத்து பயன்படுத்த முடியும்.

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

இதற்காக ஈஎஃப்ஓ 3.0 (EPFO 3.0) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி ஊழியர்கள் தங்களது பிஎஃப் பணத்தை எளிதாகவும், வேகமாகவும் டிஜிட்டல் முறையில் பெறும் வசதி வர உள்ளது. ஈபிஎஃப்ஓ 3.0 மூலம் நம்முடைய பிஎஃப் கணக்கு, வங்கி சேவைகளுக்கு நிகரான டிஜிட்டல் மேம்பாடுகளை பெற உள்ளது. எப்படி நாம் ஒரு கிளிக்கிலேயே வங்கி சேவைகளை பெறுகிறோமோ அதே போல பிஎஃப் சேவையும் ஒரு கிளிக்கிலேயே கிடைக்கும், குறிப்பாக பிஎஃப் பணத்தை நாம் டிஜிட்டல் முறையிலேயே மேலாண்மை செய்யலாம்.

ஈபிஎஃப்ஓ 3.0 திட்டத்தில் மிகப்பெரிய மாற்றமாக ஊழியர்கள் தங்களது பிஎஃப் பணத்தை யுபிஐ மூலம் நேரடியாக பெறும் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. நம் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எப்படி ஜிபே, பேடிஎம் மூலம் எடுத்து பயன்படுத்துகிறோமோ அதே போல பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை நாம் யுபிஐ மூலம் எடுத்து பயன்படுத்தலாம். அதற்கான கட்டமைப்புகள் செய்யப்பட்டு வருகின்றன.

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

அதே போல பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை நாம் நேரடியாகவே ஏடிஎம் மூலம் பெறலாம். அந்த வகையில் நம் வங்கி கணக்குகளை போல பிஎஃப் கணக்கையும் நாம் எளிதாகவும் வேகமாகவும் பயன்படுத்த முடியும். இது வரை பிஎஃப் பணத்தை நாம் கிளெய்ம் செய்ய 13 வகை காரணங்கள் இருந்தன. அதனை 3 வகைகளாக குறைத்துள்ளனர். இதன்படி அவசிய தேவைகள், வீட்டு தேவைகள், சிறப்பு சூழ்நிலைகள் ஆகிய 3 தேவைகளுக்கு பிஎஃப் கணக்கில் இருக்கும் பணம் எடுக்கலாம்.

Also Read

பிஎஃப் தொகையில் 75 சதவிகிதத்தை நாம் எப்போது வேண்டுமானாலும் பெறலாம். குறிப்பாக எந்த ஆவணங்களும் இல்லாமலேயே பணம் பெற முடியும் என்ற வகையில் மாற்றம் வர உள்ளது. ஒரு வேளை நீங்கள் லே ஆஃப் செய்யப்படுகிறீர்கள், வேறு வழியே இல்லாமல் வேலையை ராஜினாமா செய்கிறீர்கள் எனும் போது பிஎஃப் தொகையில் இருந்து 75 சதவிகிதத்தை உடனடியாக பெற முடியும். மீதமுள்ள 25 சதவிகிதத்தை 12 மாதங்கள் கழித்து பெறலாம்.

Recommended For You

மேலும் 55 வயதில் ஓய்வு பெற்றால், அல்லது நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறினால் முழு பிஎஃப் தொகையையும் பெற முடியும் என மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. பழைய ஈபிஎஃப்ஓ முறையில் நாம் பணம் எடுக்க வேண்டும் என்றால் விண்ணப்பம் செய்துவிட்டு பல வாரங்கள் காத்திருக்க வேண்டும். அதிக ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும். இதனை அதிகாரிகள் ஏற்றால் தான் பணம் வரும் இல்லை என்றால் நிராகரிக்கப்படலாம். ஆனால் ஈபிஎஃப்ஓ 3.0 திட்டம் நினைத்த நேரத்தில் உங்கள் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து பயன்படுத்த வழிவகை செய்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+