புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு.. அழகான 5 டிப்ஸ்.. இனி மாத கடைசி வரை பணம் இருக்கும்!

சென்னை: படித்து முடித்த உடனே ஒரு வேலைக்கு செல்வது அவ்வளவு சுலபமானது அல்ல. முதலில் ஒரு நிறுவனம் நடத்தும் தேர்வில் பாஸ் ஆக வேண்டும். அதன் பிறகு அவர்கள் வைக்கும் அடுத்தடுத்த ரவுண்டு இன்டர்வியூக்களில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதன் பிறகு தான் ஒரு நிறுவனத்தில் உள்ளே நுழைய முடியும். இவ்வாறு கஷ்டப்பட்டு உள் நுழையும் வேலையில், மாதம் உங்களுக்கு சம்பளமாக குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். அப்படி நீங்கள் கஷ்டப்பட்டு வாங்கிய தொகையை எப்படி திறம்பட நிர்வகிக்க வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

பட்ஜெட் அமைத்து செலவு செய்வது: பெரும்பாலான மக்கள் செய்யும் பொதுவான தவறுகளில் ஒன்று, பட்ஜெட்டை உருவாக்காமல் அதனை புறக்கணிப்பது. உங்களுடைய வருமானம் மற்றும் செலவுகளைப் பற்றித் தெரியாமல் அதிகமாக செலவு செய்து இறுதியில் நிதி சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். அவ்வாறு சிக்காமல் இருப்பதற்கு பட்ஜெட்டை போட வேண்டும். உங்களுடைய வீட்டு வாடகை,மளிகை பொருட்கள், போக்குவரத்து மற்றும் பிற செலவுகள் ஆகியவற்றைப் பட்டியலிட்டு, அதற்கான செலவு என்னவென்று குறிப்பிட்டு வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு இதன் மூலம் செலவு மற்றும் வருமானத்தைப் பற்றிய புரிதல் கிடைக்கும். மேலும் வரம்பை அமைத்து செலவு செய்வதால் நீங்கள் வீண் செலவு செய்கிறீர்களா என்பதை கண்காணிக்க உதவும்.

 புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு.. அழகான 5 டிப்ஸ்.. இனி மாத கடைசி வரை பணம் இருக்கும்!

சேமிப்பை புறக்கணிப்பது: தவிர்க்க வேண்டிய மற்றொரு முக்கியமான தவறு என்னவென்றால் சேமிக்க தவறுவது. நமது எதிர்கால இலக்குக்காக ஒரு குறிப்பிட்ட பணத்தை ஒதுக்க வேண்டும். புதிதாக வேலைக்கு செல்பவர்கள் உடனடியாக பணத்தை செலவிடுவதிலேயே கவனத்தை செலுத்துகின்றனர். செலவு செய்யலாம், ஆனால் அவற்றிற்கென்று ஒரு வரம்பை அமைத்து தான் செலவு செய்ய வேண்டும். இல்லை என்றால் மாதத்தின் 20-ஆம் தேதிக்குள் உங்களுடைய மொத்தத் தொகையும் காலியாகி விடும். மேலும் அடுத்தடுத்து வரும் அவசர தேவைகளுக்காக, ஒரு சிறு தொகையை மாதம் முதலீடு செய்வது நல்லது. ஆசைப்பட்டதை எல்லாம் செய்து பார்க்க வேண்டும் என்று அனைவருக்கும் எண்ணம் இருக்கும் ஆனால் அவற்றிற்கு என்று தனித்தொகையை வைத்து செலவு செய்தால் எந்த தவறும் இல்லை சேமிப்பை மீறி செலவு செய்வது தான் பிரச்சனை.

கடன்களை அடைக்க தவறுதல்: கிரெடிட் கார்டு கடன்கள் அல்லது தனிநபர் கடன்கள் போன்ற கடன்கள் இருந்தால், அந்த கடனைத் திரும்ப செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை கடன் அடைப்பதற்காக ஒதுக்கி வையுங்கள். முதலில் எந்தக் கடனில் வட்டி அதிகமாக உள்ளதோ, அந்த கடனை முதலில் முடியுங்கள்.

நீங்கள் இருக்கும் நிறுவனம் கார்ப்பரேட் நிறுவனமாகவோ அல்லது பிரைவேட் நிறுவனமாகவோ இருந்தால் பணிநீக்கம் செய்யப்படவோ அல்லது நீங்கள் இருக்கும் பணி உங்களுக்கு ஒத்து வராத பட்சத்தில் அங்கிருந்து வெளியேறவோ வாய்ப்புகள் அதிகம். அதனால் முடிந்த வரையில் ஒரு வேலையில் இருக்கும் போதே உங்களுக்கான கடன்களை அடைக்க முயற்சி செய்யுங்கள்.

இன்சூரன்ஸ்: பல புதிய ஊழியர்கள் காப்பீட்டின் முக்கியத்துவத்தை அறிவதே இல்லை. விபத்துகள் போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் எந்த நேரத்திலும் நடக்கலாம். அப்போது உடல்நல காப்பீடு அல்லது ஆயுள் காப்பீடு உதவியாக இருக்கும். காப்பீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

வரி திட்டமிடல்: ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் சம்பளமாக பெற்றால், அந்த நபர் வரி செலுத்த வேண்டும். ஆனால் வரிவிலக்குகளை வழங்கக்கூடிய பல்வேறு திட்டங்கள் அரசால் வழங்கப்படுகிறது. இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்வதனால் ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கு வழங்கப்படலாம். உங்களுக்கு ஏற்ற திட்டங்களைப் பற்றி ஆராய்ந்து அதில் முதலீடு செய்வது அதிக வரி செலுத்துவதில் இருந்து உங்களைப் பாதுகாக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+