சென்னை: சமீப காலமாக செல்லப்பிராணி பராமரிப்பு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு வீடுகளிலும் பூனைக்குட்டி, நாய் குட்டி மற்றும் அவர்கள் விரும்பும் செல்லப் பிராணிகளை வளர்த்து வருகின்றனர். சில செல்லப் பிராணியின் பெற்றோர்கள் அவற்றிற்கு பட்ஜெட்டிற்கு அதிகமான செலவுகளையும் செய்து வருகின்றனர். சிலருக்கு செல்லப்பிராணிகளை வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் இருந்தும் பட்ஜெட் ஒரு பிரச்சினையாக இருப்பதால் யோசிக்கின்றனர். இதுபோன்ற நபர்களும் உங்களுடைய பட்ஜெட்டில் செல்லப் பிராணிகளை வளர்க்க முடியும் அது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
உணவுப் பொருட்கள்: உங்களின் செல்லப் பிராணிகளுக்கு பிரீமியம் பிராண்டுகளின் உணவுப் பொருட்களை வழங்குவதற்கு, பதிலாக ஸ்டோர்களில் கிடைக்கும் பிராண்டுகளின் உணவு பொருட்களை வழங்கலாம். இதிலும் போதுமான ஊட்டச்சத்து, உங்களுடைய பட்ஜெட் விலையில் கிடைக்கிறது. உங்கள் செல்லப்பிராணியின் உணவு தேவைகளை பூர்த்தி செய்கிறதா என்பதை உறுதிப்படுத்த, நீங்கள் வாங்கும் பிராண்டு பொருள்களின் மூலப்பொருள்களை பற்றி தெரிந்து கொள்ளவும். இதன் மூலம் உங்களுடைய பட்ஜெட்டில் அதே சமயம் உங்கள் செல்லப்பிராணியின் உணவில் எந்தவித சமரசமும் செய்யாமல் பொருள்களை வாங்க முடியும்.

ஆன்லைனில் ஷாப்பிங் செய்யுங்கள்: ஆன்லைன் விற்பனையாளர்கள் பெரும்பாலும் செல்லப்பிராணிகளுக்கான உணவுகளை குறைந்த விலையில் வழங்குகிறார்கள். உணவு மற்றும் அதற்கு தேவைப்படும் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் தள்ளுபடிகள் மற்றும் EMI வசதியைப் பயன்படுத்தி வாங்கிக் கொள்ளலாம். கூடுதலாக, சேமிப்பை அதிகரிக்க கூப்பன் கோடுகள் மற்றும் கேஷ் பேக் சலுகைகளையும் பெறலாம்.
உங்கள் செல்லப் பிராணிகளை வீட்டிலேயே அழகு படுத்துங்கள்: சில வகை செல்லப்பிராணிகளுக்கு முடி சீக்கிரம் வளர்ந்துவிடும். இது போன்ற இனங்களுக்கு வீட்டில் முடி வெட்டுவது, நகம் வெட்டுவது போன்றவற்றை செய்து வீட்டிலேயே அழகு படுத்துங்கள். விலை உயர்ந்த பார்லருக்கு சென்று முடி வெட்டுவதற்கு பதிலாக இதுபோன்ற வேலைகளை நீங்களே செய்யும்போது, உங்களுக்கும், உங்கள் செல்லப் பிராணிக்குமான பிணைப்பு அதிகரிக்கும். அதைவிட உங்களால் இதன் மூலம் ஒரு தொகையை சேமிக்க முடியும்.
முடி வெட்டுவதற்கு தெரியாது என்று யோசிக்கும் நபர்களுக்கு உதவும் வகையில் பல youtube வீடியோக்கள் உள்ளது. அதனைப் பார்த்தும் நீங்கள் உங்கள் செல்லப் பிராணிக்கு முடி வெட்டலாம். ஆனால், இது போன்ற வேலைகளை செய்யும் போது கவனமாக இருப்பது முக்கியம் என்பதை கருத்தில் கொள்ளவும்.
வழக்கமான பரிசோதனை: ஏதாவது சிறிய அறிகுறிகள் இருந்தால், உடனே பரிசோதனை செய்யும் வழக்கத்தை உருவாக்குங்கள். உங்கள் செல்லப் பிராணிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இது உதவியாக இருக்கும். ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் மருத்துவ பரிசோதனை செய்வது நல்லது. இதனால் பெரிய நோய் எதுவும் வராமல் தடுக்க முடியும்.


Click it and Unblock the Notifications