மும்பை: முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு உலகமே திரும்பிப் பார்க்கக் கூடிய வகையில் மிகப்பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஆனந்த் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒரு நபர். இவரிடம் இருக்கக்கூடிய ஐந்து ஆடம்பரமான பொருட்கள் குறித்து இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
முகேஷ் அம்பானி தன்னுடைய செல்ல மகனான ஆனந்த் அம்பானிக்கு 2022ஆம் ஆண்டில் 640 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வீட்டினை பரிசாக அளித்தார். துபாயில் உள்ள பால்ம் ஜுமைரா (Palm Jumeirah,) கடற்கரைப் பகுதியில் பிரம்மாண்டமான முறையில் இந்த மாளிகையானது கட்டப்பட்டு இருக்கிறது.

இதனை தன்னுடைய மகனுக்காக வாங்கி பரிசளித்தார் முகேஷ் அம்பானி. இந்த மாளிகையில் பத்து படுக்கை அறைகள் மற்றும் தனியாக ஸ்பா, எழுபது மீட்டர் நீளத்திற்கு தனிப்பட்ட கடற்கரை மற்றும் சலூன் என பல்வேறு வசதிகள் இருக்கின்றன.
ஆனந்த் அம்பானிக்கு ஆடம்பரமான கைக்கடிகாரங்கள் அணிவது என்றால் மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு விதமான ஆடம்பர கைக்கடிகாரத்தை அணிந்து வந்து அசத்துவார். அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியில் அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இது மிகவும் அரிதான ரிச்சர்ட் மிலே நிறுவனத்தின் ஆர்.எம் 52-05 ( RM 52-05 from Richard Mille) கைக்கடிகாரம் ஆகும் . இதன் மதிப்பு 12.5 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. உலகம் முழுவதும் 30 பேர் மட்டுமே இந்த கைக்கடிகாரத்தை வைத்துள்ளனர்.
ஆனந்த் அம்பானி பல்வேறு கார்களை சொந்தமாக வைத்திருந்தாலும் , ரோல்ஸ் ராய்ஸ் பேண்டோம் (Roll-Royce Phantom) கார் அவரிடம் இருக்கும் கார்களிலேயே அதிக விலை கொண்டது. இதன் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது.
அடுத்ததாக ஆனந்த அம்பானி வைத்திருக்கக் கூடிய மற்றொரு ஆடம்பர கார் பென்ட்லி கான்டினென்டல் ஜிடிசி ஸ்பீட் (Bentley Continental GTC Speed). பிரிட்டனில் வடிவமைக்கப்பட்ட இந்த கார் இந்தியாவில் சுமார் 4.5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனந்த் அம்பானிக்கு என பிரத்தியேகமாக இது தனிப்பயனாக்கப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆடம்பர மற்றும் அரிதான கைகடிகாரங்களை அணிவதற்கு பெயர் போன ஆனந்த் அம்பானியிடம் மிகவும் அரிதாக கூறப்படும் கடிகாரம் இருக்கிறது. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த கைக்கடிகார தயாரிப்பு நிறுவனமான Patek Philippe தயாரித்த Patek Philippe Grandmaster Chime கைகடிகாரத்தை அவர் வைத்திருக்கிறார். இந்நிறுவனத்தின் 175 ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 2014 ஆம் ஆண்டு இந்த கைக்கடிகாரம் விற்பனை செய்யப்பட்டது. உலகிலேயே 6 பேரிடம் மட்டுமே இந்த கைக்கடிகாரம் இருக்கிறது.
தற்போது திருமணம் நடைபெற்ற முடிந்திருக்கும் நிலையில் ஆனந்த் அம்பானிக்கு பல்வேறு பிரபலங்களும் கோடிக்கணக்கில் பரிசு பொருட்களை வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Story written by: Devika
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications