கடந்த வாரத்தில் தொடர்ந்து சந்தையானது ஏற்ற இறக்கத்தினை கண்ட நிலையில், டாப் 10 நிறுவனங்களில் 5 நிறுவனங்களின் சந்தை மூலதனமானது 1,42,880.11 கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது.
கடந்த வாரத்தில் முதல் முறையாக சென்செக்ஸ் 484.3 புள்ளிகள் குறைந்து, அல்லது 0.79% குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக 4வது அமர்வாக சந்தையானது சரிவினைக் கண்டு முடிவடைந்தது.
இதற்கியிடையில் தான் ஹிந்துஸ்தான் யூனிலீவர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் மதிப்பானது சரிவினைக் கண்டுள்ளது.
ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்
ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 45,523.33 கோடி ரூபாய் குறைந்து, 5,76,836.40 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை ஆனது கடந்த அமர்வில் 0.34% அதிகரித்து, 2,454.10 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 45,126.6 கோடி ரூபாய் குறைந்து, 16,66,427.95 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
எனினும் இந்த நிறுவனத்தின் பங்கு விலை ஆனது கடந்த அமர்வில் 0.19% அதிகரித்து, 2,627.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
டிசிஎஸ் சந்தை மூலதனம்
நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ், அதன் சந்தை மூலதனத்தில் 41,151.94 கோடி ரூபாய் குறைந்து, 12,94,686.48 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வில் 0.95% குறைந்து, 3,498.85 ரூபாயாக குறைந்துள்ளது.
பஜாஜ் பைனான்ஸ் மூலதனம்
இதே தனியார் முன்னணி நிதி நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் சந்தை மூலதனமானது, 8,890.95 கோடி ரூபாய் குறைந்து, 4,65,576.46 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இவ்வங்கியின் பங்கு விலையானது, 0.35% குறைந்து, 7,710.20 ரூபாயாக குறைந்துள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் சந்தை மதிப்பானது 2,187.29 கோடி ரூபாய் அதிகரித்து, 9,31,371.72 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை ஆனது கடந்த அமர்வில் 0.27% அதிகரித்து, 1,680.75 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
கோடக் மகேந்திரா வங்கி
இதே கோடக் மகேந்திரா வங்கியின் சந்தை மதிப்பு 30,747.78 கோடி ரூபாய் அதிகரித்து, 4,30,558.09 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கிடையில் இந்த வங்கியின் பங்கு விலையானது கடந்த அமர்வில் 1.29% அதிகரித்து, 2,171.40 ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனம்
ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனமானது 22,248.14 கோடி ரூபாய் அதிகரித்து, 5,26,497.27 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இவ்வங்கியின் பங்கு விலையானது 0.50% அதிகரித்து, 759.30 ரூபாயாக அதிகரித்து முடிவடைந்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சந்தை மூலதனமானது 29,272.73 கோடி ரூபாய் அதிகரித்து, 4,37,752.20 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை ஆனது கடந்த அமர்வில் 1.85% அதிகரித்து, 490.60 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹெச்டிஎஃப்சி சந்தை மூலதனம்
தனியார் முன்னணி நிறுவனமான நிதி நிறுவனமான ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மூலதனம் 17,015.22 கோடி ரூபாய் அதிகரித்து, 5,24,877.06 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 2.10% அதிகரித்து, 2,903.95 ரூபாயாக அதிகரித்துள்ளது
இன்ஃபோசிஸ் மூலதனம்
இதுவே மற்றொரு முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 1,717.96 கோடி ரூபாய் குறைந்து, 7,29,410.37 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
கடந்த அமர்வில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 1.98% குறைந்து, 1,719.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
டாப் கெயினர்ஸ்
டாப் 10 சந்தை மூலதனத்தினை கொண்ட நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தான் டாப் லிஸ்டில் உள்ளது. இதனையடுத்து டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.டி.எஃப்.சி, பஜாஜ் பைனான்ஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்டவை அடங்கும்.


Click it and Unblock the Notifications