20 நாளில் ரூ.6,34,440 லட்சம் கோடி இழப்பு.. அழுது புலம்பும் 5 பேர்..!

இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் கடந்த ஒரு மாதமாகவே பங்குச்சந்தை அதிகளவிலான வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்கா பெடரல் வங்கியின் நாணய கூட்டம், ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை, ஒமிக்ரான் தொற்று, உலக வங்கியின் பொருளாதார வளர்ச்சி கணிப்பு எனப் பலவற்றும் முதலீட்டு சந்தையைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

இதன் மூலம் ரீடைல் முதலீட்டாளர்களைத் தாண்டி பெரு நிறுவனங்களின் தலைவர்கள், உரிமையாளர்களின் சொத்து மதிப்பும் பெரிய அளவில் சரிந்துள்ளது. குறிப்பாக உலகின் டாப் 5 பணக்காரர்களின் நிலை மிகவும் மோசம்.

 பெரு பணக்காரர்கள்

பெரு பணக்காரர்கள்

2021ஆம் ஆண்டில் உலகின் டாப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு தாறுமாறாக அதிகரித்த நிலையில், 2022ஆம் ஆண்டுத் துவக்கம் முதல் பெரு பணக்காரர்களில் இருந்து அனைத்துப் பிரிவு முதலீட்டாளர்களுக்கும் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.

 85 பில்லியன் டாலர் இழப்பு

85 பில்லியன் டாலர் இழப்பு

உலகின் டாப் டெக் தொழிலதிபர்கள் ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் 85 பில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 6,34,440 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர். இது முதலீட்டுச் சந்தையில் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி மட்டும் அல்லாமல் பயத்தையும் உருவாக்கியுள்ளது.

 எலான் மஸ்க்

எலான் மஸ்க்

ஜனவரி மாதம் மட்டும் உலகின் மிகப்பெரிய பணக்காரராக விளங்கும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க்-ன் மொத்த சொத்து மதிப்பில் 27 பில்லியன் டாலர் குறைந்து 243 பில்லியன் டாலராகச் சரிந்துள்ளது. இது நவம்பர் மாதத்தின் உச்ச அளவான 335 பில்லியன் டாலரை ஒப்பிடுகையில் சுமார் 100 பில்லியன் டாலருக்குக் குறைவாகும்.

 ஜெப் பைசோஸ் டூ மார்க் ஜூக்கர்பெர்க்

ஜெப் பைசோஸ் டூ மார்க் ஜூக்கர்பெர்க்

எலான் மஸ்க்-ஐ தொடர்ந்து அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெப் பைசோஸ்-ன் சொத்து மதிப்பு ஜனவரி மாதத்தில் 25 பில்லியன் டாலர் அளவில் இழந்துள்ளார். இதேபோல் பில் கேட்ஸ் 9.5 பில்லியன் டாலர், கூகுள் லேரி பேஜ் 12 பில்லியன் டாலர், மார்க் ஜூக்கப்பெர்க் 12 பில்லியன் டாலர் என டாப் 5 டெக் பில்லியனர்கள் 85 பில்லியன் டாலர் அளவிலான இழப்பை எதிர்கொண்டு உள்ளனர்.

 LVMH - பெர்னார்ட் அர்னால்ட்

LVMH - பெர்னார்ட் அர்னால்ட்

இதேவேளையில் ஆடம்பர பேஷன் பிராண்டான LVMH நிறுவனத்தின் தலைவரான பெர்னார்ட் அர்னால்ட்-ன் சொத்து மதிப்பு மட்டும் ஜனவரி மாதத்தில் உயர்ந்துள்ளது. ஜனவரி மாதத்தில் LVMH நிறுவனப் பங்குகள் 5 சதவீதம் வரையில் உயர்ந்துள்ள நிலையில் பெர்னார்ட் அர்னால்ட்-ன் சொத்து மதிப்பு 2022 ஆம் ஆண்டில் 10.5 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+