இந்தியாவின் செல்வாக்கு மிகுந்த குடும்பங்களில் அம்பானி குடும்பமும் ஒன்று. இந்தக் குடும்பம் அவர்களின் தொழிலுக்கு மட்டுமின்றி அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்காகவும் அறியப்படுகிறது. தற்போது, அம்பானி குடும்பத்திற்கு தலைமை தாங்கி, உலகளவில் மிகவும் சக்திவாய்ந்த வணிகப் பேரரசுகளில் ஒன்றை உருவாக்கியவர் முகேஷ் அம்பானி ஆவார். இந்தப் பதிவில் அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல பண்புகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
முகேஷ் அம்பானியின் வெற்றிக்காண ரகசியம், பணி நெறி, சவால்களை எதிர்கொள்ளும் திறன் மற்றும் நீண்ட கால இலக்குகளின் கவனம் ஆகியவற்றின் அடிப்படையில் உள்ளது. அவர்களின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம், தொடர்ந்து புதுமை செய்து, குறிப்பாக தொலைத்தொடர்பு மற்றும் சில்லறைத் துறைகளில் மாறிவரும் காலங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் திறன் ஆகும். வெற்றியை அடைய அம்பானி குடும்பத்திடமிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய சில முக்கிய விஷயங்களை பார்ப்போம்.

வழக்கமான உடற்பயிற்சி: நமது உடலைச் சரிவர பராமரிப்பது முக்கியம். ஒருவர் தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தாலே மீதமுள்ள விஷயங்களில் நன்றாக கவனம் செலுத்த முடியும். அதற்கு உதாரணமாய் அம்பானி குடும்பம் யோகா பயிற்சி, நடை பயிற்சி மற்றும் நீச்சல் போன்ற செயல்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது. அதேபோல முகேஷ் அம்பானியின் மனைவியான நீதா அம்பானி பல்வேறு உடற்பயிற்சிகளை செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். அதே போல முகேஷ் அம்பானியும் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் உடற்பயிற்சி செய்வதை மட்டும் நிறுத்துவதில்லை. இந்த நடவடிக்கைகள் இவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்துகின்றன.
சரியான தூக்கம்: உறக்கம் என்பது ஒவ்வொருவரின் வழக்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும், ஏனெனில் இது மனத் தெளிவையும் நல்ல மனநிலையையும் பராமரிக்க உதவுகிறது. அம்பானி குடும்பம், உடல் ஆரோக்கியம், மனக் கூர்மை மற்றும் உடல் புத்துணர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சரியான தூக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது.
குடும்பத்திற்காக நேரம் ஒதுக்குதல்: குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவது மன அழுத்தத்தைக் குறைத்து மகிழ்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. குடும்பத்துடன் பண்டிகைகள், விழாக்கள், விடுமுறைகள் போன்றவற்றிற்கு அனைவரும் சேர்ந்து கொண்டாடி நல்ல உறவை வளர்க்கின்றனர்.
தொடர்ச்சியான கற்றல்: அம்பானிகள் எப்பொழுதும் புதிய விஷயங்களை கற்பதற்கு தயாராக உள்ளனர். மக்கள் என்ன விரும்புகிறார்கள்? என்பதைப் புரிந்து கொள்வதிலும் ஆர்வமாக இருக்கின்றனர். இது அவர்களின் அறிவு வளர்ச்சிக்கு மட்டுமின்றி தனிப்பட்ட வளர்ச்சிக்கும் உதவுகிறது. மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப அவர்களுடைய வணிகத்திலும் இதனால் மாற்றம் செய்ய முடிகிறது.
மன அழுத்தத்தை நிர்வகித்தல்: இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கும் போது கண்டிப்பாக அதில் பல்வேறு மன அழுத்தங்கள் ஏற்பட்டு இருக்கலாம். எனவே தங்களின் மன அழுத்தத்தை சமாளிக்கும் நுட்பங்களை இவர்கள் பின்பற்றுகின்றனர். இதற்காக தியானம் செய்கின்றனர். இதனால் அவர்களுடைய மனதையும் உடலையும் சீராக வைத்திருக்க முடிகிறது. தியானம் செய்வதனால் தேவையற்ற பதட்டங்களையும் தவிர்க்கலாம். மன உளைச்சலுக்கு இடம் கொடுக்காமல் அவற்றை கட்டுப்படுத்த தெரிந்து கொள்ளும் பட்சத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள முடியும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications